267. தித்திக்கும் முத்து.

Kolukkadai 093

தித்திக்கும் முத்து.

 

 

எனக்குள் நீ, நான்

உனக்குள், வேறல்ல நாம்.

ஓன்றோடொன்றாய் வெகு

ஓட்டியுறவாடும் இறுக்கம்.

இதழ் குவித்தெடுத்து

இதழ் கொடுக்கும் முத்து.

 

மனித இடைவெளி குறைத்தும்

மனித மனங்கள் நெருக்கும்

இனிதாய் இறுக்கங்கள் தளர்த்தும்

அனிதம் மாயங்கள் செய்யும்.

கனிதல், குனிதலில்லாதது

வனிதம் நிறை முத்து.

 

பித்தம் தணிக்கும் அத்திரம்

அத்தக நேசத்தின் அத்தர்.

நித்தமும் அலுக்காத உத்திரி.

சுத்தம் கூச்சு தரும்.

சுத்தம் பேணும் உறவின்

தித்திக்க ஒத்தும் சொத்து.

 

முத்தம் காயம் செய்யும்.

தத்தம் செய்யும் நேயம்.

தித்திக்கும் மெத்தை இதழின்

வித்தையாடும் மன்மத பாணம்.

மொத்தமும் ஏங்கச் செய்யும்.

சொத்தெனும் பூவில்லாத்தேன்.

 

 

(அனிதம் – எண்ணற்ற, கணக்கில்லாத. குனிதல் – முதிர்தல்.

வனிதம் – சிறப்பு, மேன்மை. அத்தக – அழகு பொருந்திய, அத்தகைய.

கூச்சு- புளகம். ஆத்திரம் – அம்பு. உத்திரி – அருச்சனை.)

 

 

 

 

பா ஆக்கம்   பா வானதி   வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

21-3-2013.

 

 

1139540gpr9bczcla

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  மார்ச் 21, 2013 @ 21:27:44

  அருமையான கவிதை ஆக்கத்திற்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. bganesh55
  மார்ச் 22, 2013 @ 01:38:17

  அனிதம், கூச்சு போன்ற சில வார்த்தைகளை அறிந்து கொண்டதோடு உங்களின் அழகுத் தமிழையும் ரசித்து ருசித்தேன். அருமை!

  மறுமொழி

 3. கோமதி அரசு
  மார்ச் 22, 2013 @ 01:40:05

  நம் பித்தம் தவிர்க்கும் மருந்து நம் பேரனின் இதழ முத்தம் அல்லவா!
  நித்தம் கிடைத்தாலும் அதற்கு அலுப்பு ஏது தித்திக்கும் தெவிட்டா தேன் அல்லவா!
  கவிதையும் படமும் அழகு.
  பேரனுக்கு அன்பு முத்தங்கள். ஆசிகள்.

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 22, 2013 @ 01:46:24

  ஆகா… இனிமை… ரசித்தேன்…

  மறுமொழி

 5. mahalakshmivijayan
  மார்ச் 22, 2013 @ 04:45:28

  நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் எத்தனை அருமையான வார்த்தைகள், புது புது வார்த்தைகள் கற்று தரும் தாயே உங்களுக்கு எனது வணக்கம் 🙂

  மறுமொழி

 6. ஸாதிகா
  மார்ச் 22, 2013 @ 08:25:54

  ஆஹா..பாட்டிகள் தம் பேரன் பேத்திகளை கவி பாடி மகிழும் தினமாஅங்கே படத்துடன் ஜெயந்தி மாமி பேத்தி.இங்கே உங்கள் பேரன் .வாழ்த்துக்கள் சிஸ்டர்.

  மறுமொழி

 7. nayaki
  மார்ச் 22, 2013 @ 10:28:59

  புது புது வார்த்தைகள் கற்று தரும் தாயே
  உங்களுக்கு எனது வணக்கம்

  மறுமொழி

 8. பழனிவேல்
  மார்ச் 22, 2013 @ 14:11:25

  “இதழ் குவித்தெடுத்து
  இதழ் கொடுக்கும் முத்து.”

  உண்மையில் தித்திக்கும் முத்து தான்.

  மறுமொழி

 9. Rajarajeswari jaghamani
  மார்ச் 22, 2013 @ 15:48:39

  மொத்தமும் ஏங்கச் செய்யும்.

  சொத்தெனும் பூவில்லாத்தேன்
  தித்திக்கும் முத்து

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 23, 2013 @ 08:57:01

  IN FB:-
  Mageswari Periasamy அருமை சகோதரி. நிறைய புது புது தமிழ் சொற்களை தங்களின் கவிதையின் வாயிலாக எங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றீர்கள். மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.

  நாயகி கிருஷ்ணா:- புது புது வார்த்தைகள் கற்று தரும் தாயே உங்களுக்கு எனது வணக்கம்

  Abdul Hamed E Sahurudeen .
  புது புது வார்த்தைகள் இல்லை உறவுகளே
  நம் புழக்கம் கொள்ள மறந்த வார்த்தைகள்
  தமிழில் இன்னும் எண்ணற்ற வார்த்தைகள்
  நம் கண்ணுக்கு மறைவாய் இருக்கிறது ..

  இப்படி நடைமுறை வழக்கில் இல்லாத சொற்களை
  தேர்ந்தெடுத்து தங்களின் படைப்புகளில் தந்து நம்
  தமிழை மனக்கச்செய்யும் உங்களின் இந்த செயலுக்கு
  எம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சோதரி …
  நீவீர் வாழி வளமேடும் நலமோடும் ,,Vetha ELangathilakam

  மறுமொழி

 11. subburathinam
  மார்ச் 24, 2013 @ 09:18:58

  // முத்தம் காயம் செய்யும்.

  தத்தம் செய்யும் நேயம்.

  தித்திக்கும் மெத்தை இதழின்

  வித்தையாடும் மன்மத பாணம்.

  மொத்தமும் ஏங்கச் செய்யும்.

  சொத்தெனும் பூவில்லாத்தேன//

  ஆஹா.. ஆஹா..
  முத்தத்தைப் பத்தி எழுத இம்
  முதியோனுக்கு ஒரு சவாலா ?

  உங்க வார்த்தையையெ
  வச்சு விளையாடலாமா

  .

  தத்தம் காயம் செய்யும்
  முத்தமோ மன்மத பாணம்.
  தித்திக்கும் ஏங்கச்செய்யும்
  மெத்தையில் வித்தையாடும்.

  தேனினும் நேயம் இதழின்
  சத்திலா பூவிலா சொல்.
  மொத்தமும் சொத்தே தரினும்
  முத்ததுக்கு நிகருண்டா சொல்.

  சுப்பு தாத்தா.

  மறுமொழி

 12. கவியாழி கண்ணதாசன்
  மார்ச் 27, 2013 @ 00:05:48

  அத்தனை முத்தமும் உங்களின் ஆயுளுக்கு சொத்துக்கள்

  மறுமொழி

 13. ஜலீலாகமால்
  ஏப் 09, 2013 @ 15:26:48

  மிக அழகு , உங்கள் பேரன்

  தெரியாத பல தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: