268. உனக்கு நீயே நண்பன்

 

natpu

உனக்கு நீயே நண்பன்

 

உடன் சேர்ந்துறவாடலும்

உருகி அன்புதிர்த்தலும்

உரிமையுதவி வரவாகும்

உணர்வது கானல்நீராகும்.

 

உட்பற்றில்லா நேசம்

உணராமை நிலையில் நிற்கும்.

உலகு உறவு மாயையாம்

உணர்வின் உத்தரம் தெரியும்.

 

உதவி பெறுவார் உதறுவார்

உதவாத பிறரையும் உயர்த்துவார்.

உன்னத மனிதராய் நடிப்பார்.

உத்தரீயமாக்குவார் பிறரை இவர்.

 

உதவும் உறவு உதறிடும்

உதாசீனமிதயம் கிளறும்.

உடைந்தும் உயிர்க்கும் சக்தி

உன்னத நம்பிக்கை ஊன்றுகோலில்.

 

உறைந்த மனதார் உறவு

உறுதிப்பாடற்றதை உணர்ந்தால்

உளைதல்,உவர்த்தல் உதறலாம்.

உனக்கு நீயே நண்பன்.

 

(உளைதல் – மனம் வருந்துதல்)

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

26-3-2013

 

 

Nyt billede

 

 

Advertisements

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  மார்ச் 27, 2013 @ 00:01:46

  தங்கத் தட்டில் உயர் கனிகள் வைத்ததைப் போல
  கருத்தும் படைப்பும் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. கவியாழி கண்ணதாசன்
  மார்ச் 27, 2013 @ 00:02:27

  உட்பற்றில்லா நேசம்//யாருக்கும் பயன்தராது.

  மறுமொழி

 3. பூங்குழலி
  மார்ச் 27, 2013 @ 09:43:51

  அருமை அம்மா !!!

  மறுமொழி

 4. T.N.MURALIDHARAN
  மார்ச் 27, 2013 @ 13:16:25

  “உ”வில் தொடங்கும் வரிகளை அமைத்து பாடியது சிறப்பு

  மறுமொழி

 5. seeralanvee
  மார்ச் 27, 2013 @ 16:02:25

  ஆஹா என்னவொரு வரிகள் உகரம் கொண்டே எல்லா வரிகளும் தொடங்கும் உன்னதம் அழகு ,,,வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. Mrs.Mano Saminathan
  மார்ச் 27, 2013 @ 19:22:32

  உன்மை தான்! நமக்கு நாமே துணை என்பதை காலமும் அனுபவங்களும்தான் உணர்த்துகிற‌து! க‌விதை அருமை!!

  மறுமொழி

 7. kowsy
  மார்ச் 28, 2013 @ 16:40:00

  உண்மைதான் உனக்கு நீதான் நண்பன். வாழப் பழகிக் கொண்டால் எதுவும் இலகுவே . ஆனால் பழகிக் கொள்வதுதான் கடினம்

  மறுமொழி

 8. கவிஞர் இராய. செல்லப்பா, நியூ ஜெர்சி.
  மார்ச் 29, 2013 @ 15:34:09

  முன்தெரியாத மலைப்பாதையில் புகைவண்டியில் பயணிக்கும்போது எங்கிருந்தோ நம்மைப் பார்த்துச் சிரிக்கும் பெயர் தெரியாத மலர்க்கூட்டங்களைப்போல, இலங்கைத் தமிழர்களின் கவிதை இனிக்கிறது. எங்கிருந்து கற்றீர்கள், இத்தகைய சொல்லாக்கங்களை?

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 05, 2013 @ 07:51:21

   மிக மகிழ்ச்சி சகோதரா. வரிகளிற்கு நன்றி -தங்களைப் போன்ற அன்பர்களின் ஊக்க வரிகள் தான் மேலும எழுதத் தூண்டுவது.
   மீண்டும் வாருங்கள் கருத்துத் தாருங்கள் நன்றி…நன்றி.

   மறுமொழி

 9. கீதமஞ்சரி
  மார்ச் 30, 2013 @ 23:38:11

  உதட்டளவில் உறவுகள் பற்றிய உங்கள் கருத்துக்களை உடன்பாட்டோடு ஏற்று உளம்பூரிக்கின்றேன். உன்னதமான கவியில் உலகியல் உளவியல் பாங்கின் உட்பொருள் விளக்கி உணர்த்தியமைக்கு நன்றி.

  மறுமொழி

 10. கோவை கவி
  ஏப் 04, 2013 @ 06:24:05

  Arul Mozhi likes this..

  Arul Mozhi உதவும் உறவு உதறிடும்

  உதாசீனமிதயம் கிளறும்.

  உடைந்தும் உயிர்க்கும் சக்தி

  உன்னத நம்பிக்கை ஊன்றுகோலில்.

  அழகு அழகு

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: