48. கவிதை பாருங்கள்(photo,poem)

maruthu

எது அழகு!

 

கவியழகா! மொழியழகா!

குவியுமுன் திமிரழகா!

கவினுறு மொழி கைவந்ததென்றால்

தெவிட்டும் அகமதி குவிந்திடுமோ!

 

சீண்டும் அதை ஓட்டு!

தேண்டித் தூர விரட்டு!

பாண்டல் உய்ய விடாது!

தாண்டு   தூரத் தாண்டு!

 

அகம்பாவம் தொடும் கட்டம்

அருட் கயிறை வெட்டும்.

அமைதித் தூக்கம் அறுக்கும்.

அமைதிப் பாதை சிறப்பாம்.

 

(அகமதி – அகந்தை , ஆணவம், இறுமாப்பு.பாண்டல் – பழமை, பாசி பிடித்து நாறுதல்)

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

30-3.2013.

rainbow line

 

Advertisements

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கீதமஞ்சரி
  மார்ச் 30, 2013 @ 23:32:52

  கவியின் செருக்கு கவிதையை செப்பனிட மட்டுமே பயன்படவேண்டும், கவிதாரசிகர்களின் மனத்தினைக் காயப்படுத்தும் வகையில் அமைதல் கூடாது என்னும் அருமையான கருத்தை அழகிய கவியால் ஆக்கித்தந்தமைக்குப் பாராட்டுகள் தோழி.

  அகமதி பொருள் அறிந்தேன். பாண்டல் என்பதன் பொருள் அறியவும் விரும்புகிறேன்.

  மறுமொழி

 2. bganesh55
  மார்ச் 31, 2013 @ 00:39:45

  அமைதிப் பாதையே சிறப்பு அதனை அழகாய்ச் சொன்னது கவிதை. விடவேண்டும் செருக்கு. அதை மனதில் பதிய வைத்தன வரிகள்! கவிதை பார்த்தேன், கருத்தை மனதில் ‌கொண்டேன். நன்று!

  மறுமொழி

 3. Ramani S
  மார்ச் 31, 2013 @ 03:35:58

  arumaiyaana kavithai mikavum rasiththEn
  pathivirkkul nuzhaiya mudiyavillai
  malware enak kaattukirathu
  saripaarkkavum
  anpudan

  மறுமொழி

 4. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஏப் 02, 2013 @ 08:02:40

  தங்கள் கவியின் சொல்லியல் கண்டு சுவைத்தேன், அருமை ! அழகு !! வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  ஏப் 02, 2013 @ 11:34:12

  அமைதித் தூக்கம் அறுக்கும்.
  அழகு வரிகள்..

  மறுமொழி

 6. ranjani135
  ஏப் 03, 2013 @ 08:55:44

  அகமதி, பாண்டல் – இரண்டு புது வார்த்தைகளைக் கற்றுக் கொண்டோம், சகோதரி.

  அமைதிப் பாதை தான் சிறப்பு.
  கவிதை வெகு சிறப்பு.

  மறுமொழி

 7. Mrs.Mano Saminathan
  ஏப் 04, 2013 @ 03:01:31

  //கவினுறு மொழி கைவந்ததென்றால்

  தெவிட்டும் அகமதி குவிந்திடுமோ!//

  மிக அழகிய வரிகள்!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 06, 2013 @ 19:45:58

   //கவினுறு மொழி கைவந்ததென்றால்

   தெவிட்டும் அகமதி குவிந்திடுமோ!//

   மிக அழகிய வரிகள்!!”

   மிக நன்றி சகோதரி.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 8. T.N.MURALIDHARAN
  ஏப் 05, 2013 @ 00:45:59

  கவிதை கவர்ந்தது.பட வடிவமைப்பு அருமை.நீங்களே செய்கிறீர்களா?

  மறுமொழி

 9. கோவை கவி
  ஏப் 06, 2013 @ 19:49:19

  ஆம் சகோதரா இது நானே செய்தது.
  ஒவ்வோரு தடவையும் யார் உதவி செய்வார்கள்!. அனைவரும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடும் உலகம் அல்லவா!
  கருத்திடலிற்கு இனிய நன்றி.
  ஆண்டவன் அருள் நிறையட்டும்.

  மறுமொழி

 10. பழனிவேல்
  ஏப் 17, 2013 @ 03:58:13

  “கவியழகா! மொழியழகா!
  குவியுமுன் திமிரழகா!”

  “அகம்பாவம் தொடும் கட்டம்
  அருட் கயிறை வெட்டும்.
  அமைதித் தூக்கம் அறுக்கும்.
  அமைதிப் பாதை சிறப்பாம்.”

  அழகு எது என்று அழகாய் சொன்னிர்கள்.
  செருக்கை நீக்கி செப்பனிட கவிதை படைப்போம்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: