264. மதிப்பும் மரியாதையும்..

you_give_respect_you_get_respect_by_gbillustrations-d5qzlbk

மதிப்பும் மரியாதையும்..

 

மதிப்பும் மரியாதையும்

சதிபதியாக உதிக்கும்.

பதிந்திடும் பிறப்போடும்.

வதியும் நல்வளர்ப்போடும்.

 

துதிக்குமுறவுப் பாதையில்

மதிப்புடை உறவு

போதிக்கும்  வாதிக்கும்

மோதிடும் நீதிக்காய்.

 

மூத்தோர் என்ற

பாத்தியதை   மரியாதை

பூத்தல் அருகுகிறது.

காத்திரமானவை அழிகிறது.

 

அதிக்கிரமம் புகுந்ததும்

சோதிக்கும் பாதிக்கும்

சாதித்துத் திட்டமிடும்.

நீதி வழுகிடும்.

 

கொதிக்கும் சூதை

சோதிக்கச் செய்யாது

சாதிக்க வேண்டும்

சோதியாய் ஒளிர.

 

(வதியும் – தங்குதல்.  பாத்தியதை  உரிமை.
அதிக்கிரமம் – நெறி தவறல், மீறுதல்.)

 

பா ஆக்கம் வேதா.இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

5-3-2013.

 

Nyt billede

45. கவிதை பாருங்கள்(photo,poem)

- ----cat

 

 

சாம்பலில் தூங்கும் பூனையாய்
சோம்பலில் தூங்குவதோ! தூங்கி
கூம்புதலாய் அறிவு சாம்புதலாய்
வீம்பிற்குக் கூடிக் கலந்து
சூம்பி அடுத்தவரைப் பரிகசித்தல்
மேம்பாட்டு மனிதம் அல்ல.
(கூம்புதல் -ஒடுங்குதல்.  சாம்புதல் -ஒளிமங்குதல். 

சூம்பி – இரத்தம் சுண்டி சிறுத்தல்.)

onMlyl_02-nn-mm

imagesCA7CTXLU

7. அன்ராட்டிக்கா

feet

அன்ராட்டிக்கா

 

அன்ராட்டிக்கா வெண்பனி போலே

இன்றேன் குளிரவில்லை டென்மார்க்!

அன்றாடம் அதிக வெப்பத்தில்

நின்றாடிய மலேசியா விடுமுறையால்

டென்மார்க்கிற்கு வெற்றி வந்தார்.  (அன்ராட்டிக்கா)

 

உணரவில்லைத் தனது உடலை

உடல், கால், கைகளிற்கு

உறையிட்டு வாழ்ந்தார் டென்மார்க்கில்.

உல்லாசமாக அம்மா ஊரில்

உணர்ந்தார் ஆடையின்றி ஊடாடி.  (அன்ராட்டிக்கா)

 

கைகள் கால்களை நன்றாக

வைத்த கண் வாங்காது

அவதானித்தாராம். அம்மம்மா கால்களோடும்

அவதானித்தாராம். சிறுநீர் எங்கிருந்து

வருகிறது என்றும் பார்த்தாராம்.  (அன்ராட்டிக்கா)

 

பத்து மூன்று நாட்களங்கு.

சத்தான அனுபவங்கள் மலேசியாவில்

பத்து கோவிலில் முடியிறக்கி

பத்து படிகளிலும் தவழ்ந்தாராம்.

சொத்து எங்கள் வெற்றி.     (அன்ராட்டிக்கா)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

1-3-2013.

 

 

baby-items

 

 

Next Newer Entries