51. கவிதை பாருங்கள்(photo,poem)

fab17b18ca88[2]---------------

வாக்காள் அருள்

வாக்கியம் பேசல்.

மாக்கள் பெறாப் பாக்கியம்

வாக்குத் தவறாதே!

காக்கும் ஆறறிவு

ஊக்கமுடை உயர்வு

மக்கள் நாம் மாக்களல்ல!

மாக்களை வதைக்காதே!

பூமாலை போலொரு

பாமாலையாக்கப் பெரும்

பாடடைகிறான் பாவாணன்.

பாவை மதித்திடு!

28-4-2013.

(வாக்காள் – நாமகள்)

orange

Advertisements

கலையும் கற்பனையும் (கைவினை). 7

P1040836

கலையும் கற்பனையும் (கைவினை). 7

சிறு வயதில் ஊரில் களி மண்ணில் உருவங்கள் செய்து விளையாடினோம். இவற்றில் முக்கியமாகப் பிள்ளையார் பிடித்தும் விளையாடியது நினைவு வருகிறது.

இது போல இங்கு பாலர் நிலையத்தில் கடையில் வாங்கிய நிறமூட்டிய களிகளில் உரு அமைப்ப்பது மிகப் பிரபலம்.

இதில் இரண்டு வகைகள் உண்டு. டெனிஸ் மொழியில் எல்இஆர் என்று ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டும் ”லிய” என்போம். அல்லது ”மொடலிய வொக்ஸ்”  என்போம்.

ஒரு வகை எந்த நாளும் இடிபாப்பம் செய்யும் மாக்கலவை போல பிடித்து விளையாடிய  பின்னர் ஒரு கிண்ணத்தில் வைத்து அடுத்த அடுத்த நாட்களும் செய்வோம். இறுகிவிட மாட்டாது. மாதக் கணக்கிலிருக்கும். பிள்ளைகள் இதனோடு விளையாடுவதை மிக நேசிப்பார்கள். ஏனெனில் இதைப் பினையும் உணர்வு மிக இதமானது. 

மேசையில் மெழுகு சீலை விரித்து, பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு ஆடை (ஏப்றன் என்று கூறுவோம்) அணிய வைத்து, ஓரிரு பெரியவர்களின் மேற்பார்வையில் இருந்து அனுபவிக்க, விளையாட விடுவோம். நாமும் அவர்களோடு குழந்தையாக செய்து காட்டலாம். இதைப்பார்த்து அவர்களும் வித விதமாக உரு அமைப்பார்கள்.

தொடும் உணர்வு, பினையும் உணர்வு, கற்பனை, கூட்டுறவு, விரல்களின் இயக்கச் சக்தி முன்னேற என்று பல முன்னெற்றம் கருதி இதைச் செய்வதுண்டு.

இதை விட இன்னோரு வகையானது. பல பல நிறங்களில் உள்ளது. உருவங்களைச் செய்து அவுணில் சுடுவது. பின்னர் எடுத்து நிறமூட்டுவது.

இங்கு படத்தில் நீங்கள் காண்பது சங்கிலி, மாலைகளிற்கு தொங்கவிடும் பென்ரன்.  பெரிய பிள்ளைகளுடன் சேர்ந்து நானும் செய்து சுட்டு, நிறமுட்டியது. சாவிகளுடன் தெங்கும் உருவம் இன்னும் வேறு என்னென்னவோ அவரவர் கற்பனையின் பிரகாரம் செய்யலாம். அவுணில் சுட்டதும் கடினமாகிவிடும்.

நீங்களும் செய்து பாருங்கள்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

26-4-2013.

fruiti

 

 

50. கம்பன் ஏமாந்தான்!…

 

 kampan

 

 

 

கம்பன் ஏமாந்தான்!…

 

கும்பன் இலக்கண வரிகள்

உம்பல் தமிழ் வரிகள்

உம்பர் தரும் வரிகள்.

சம்பகம் நிறை வரிகள்

கம்பனும் ரசித்த வரிகள்.

 

கம்பளிப் பூச்சி ஊரலாக

அம்பலத்தில் வந்து ஆடும்

கொம்பனல்லாதவன் வரிகளென்ற

வெம்பல் வரிகள் கண்டால்

கம்பன் கடிதாய் ஏமாறுவான்!

 

 

(கும்பன் -அகத்தியன். உம்பல் – வலிமை.  உம்பர் – உயர்ச்சி  சம்பகம் – தற்பெருமை.

கொம்பனல்லாதவன் – ஆற்றலற்றவன். வெம்பல் – பிஞ்சில் பழுத்தல் )

 

 

பா வரியாக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டெக்மார்க்.

22-4-2013.

 

 

abar132ba

 

 

 

 

 

 

8. வெற்றிக்கு ஒரு வயது

1st-birthday

வெற்றிக்கு ஒரு வயது

 

 

எங்கள் செல்லப் பேரன்

தங்கக்கட்டி ராசன்

உங்கு குடித்து வளர்ந்தான்.

இங்கு ஒரு வயதாகிறான்.

 

திலீபன் – சாந்தியின் அரும்

திலகம் தினகரன் ”வெற்றி”

உலவி நிறைகிறார் இன்று

கலகலப்பு ஒரு ஆண்டு.

 

எட்டியடி வைக்கிறார்

சுட்டிச் செல்வன் எங்கள்

கட்டி வராகன் வெற்றியே

பட்டுக் குஞ்சப் பெட்டகமே!

 

அச்சுப் பிச்சு மழலையால்

கிச்சுக் கிச்சு மூட்டுகிறார்

பச்சை மரகதமே! பல்லாண்டு

சீரும் சிறப்பாக வாழ்ந்திடு!

 

 

(கட்டி வராகன் – தங்கநாணயம்.   தினகரன் – சூரியன்)

 

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

16-4-2013.  

 

 

 

 

baloonz

272. புகையால்….

Stop%20Smoking

புகையால்….

 

பெருவாரியாக மக்கள் கூடும்

பேருந்து நிலையம் தெருவெங்கும்

வருந்தாது புகைக்கிறார்கள் பிறர்

வருத்தம் அறியாது மடைமையாய்.

 

பாதையில் நடக்கும் போதும்

கீதையெனக் கையில் கொண்டு

வாதையெனும் புகையோடு பலரும்

பூதையாய் இதயத்தைத் தாக்குகிறாரே!

 

அங்கும் இங்கும் எங்கும்

தங்கும் புகை! புகை!

கிங்கரன் இயமன் போல்

வாங்குதே வதைக்குதே உயிரை.

 

அருமையாம் நிம்மதி குலைகிறது.

கருமைப் புகையால் பதைப்பு.

திருமை மனம் திகைக்கிறது.

தெருவிலும் எங்கும் அனுபவம் கொடுமை.

 

 

(பூதை – அம்பு.  திருமை – அழகு.)

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

15-4-2013.

reflection-swirl

271. நேர்த்தியாய் மலர்க!

-_1_~1

நேர்த்தியாய் மலர்க!

நேர்த்தியாய் மலர்க புத்தாண்டு!

சேர்த்திடு சுகங்கள் நீண்டு!

போர்த்திடு மகிழ்வு ஈண்டு!

கீர்த்தி பெருகச் சீண்டு!

பொங்குது மனம் எதிர்பார்ப்பாய்!

ஏங்குது மனம் புதுக்கனவாய்!

இங்கும் புத்தெழில்  நினைவாய்

சங்கொலி முழங்கிட வருவாய்!

பந்த பாசம் இணைந்திட

வெந்த மனங்கள் ஆறிட

நந்தவனமாய் மகிழ்ந்திட

வந்திடு 2013ம் ஆண்டே!

நேற்றைய ஆண்டு நம்மில்

ஏற்றிய சுமைகள் மீண்டு

வெற்றிகரமாய் தாண்ட

வெற்றி ஆண்டாய் வருவாய்!

நிர்க்கதியானவர் வாழ்வுயர்ந்திட

சர்க்கரையாக அமைதி கலக்கட்டும்.

அர்த்தமுடை புத்தாண்டுப் பால்சோறு

அர்ப்பணிக்கட்டும் அச்சாரமாய் அமைதியை.

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

13-4-2013.

images 2356

 

49. கவிதை பாருங்கள்(photo,poem)

stock-vector-abstract-floral-background-84538762

சிரிப்பெனும்….

சிரிப்பென்ற அமுத சுரபி

விரித்துக் குலுங்கும் மகிழ்வு பரப்பி.

எரிக்கும் கவலையை இன்பம் நிரப்பி

வரிசையிடும் நோயிலிருந்தோடலாம் தப்பி.

எழில் மலர் மலர்ந்து சிரித்து

வழிய வழிய இன்பம் தெளிக்கிறது.

அழிவில்லாத் திறமையாளன் மனிதனேன்

அழிபடர் சூழ்ந்ததாய் உம்மென்றிருக்கிறான்!

(அழிபடர் – மிகுந்த துன்பம்.)

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

10-4-2013.

(இதனோடு ஒட்டிய புன்னகைப் பதிவு.  https://kovaikkavi.wordpress.com/2010/11/03/133-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88/

Nyt billede

Previous Older Entries