269. இதுவன்றோ வேண்டும்!

 

BambooStand

 

இதுவன்றோ வேண்டும்!

 

 

குவிந்த கருத்து கூடும் சந்தம்

கவித்துவம் மேவிய கட்டான சொற்கள்

கவியாக்க வேண்டும் வேறென்ன வேண்டும்

செவிகள் குளிர இதுவன்றோ வேண்டும்.      

                                     (மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்)

மதுகை வரிகள் மதுரமாய் விழுந்து

எதுகை மோனை அதுவாயிணைந்து

புதுமை பண்டித பவனியாய் தவழ்ந்து

பதுமமாய் விரியலாம் வரிகள் பிறந்து.      

                                   (மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்)

ஒதுக்கும் பிதற்றல் கட்டுரைப் பாணியால்

சதுப்பு நிலமாம் கவிதை வயல்.

பொதுவான கவனம் கவியாக்க அமைதல்

மதுரவாக்கு மருவிடும் பா புனைவில்.       

                                     (மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்)

 

(மதுகை – அறிவு, வலிமை. பதுமம் – தாமரை- மதுரவாக்கு – இனிய சொல்.)

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

5-4-2013.  

 

 

lines-flowers-and-nature-415906    

 

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 06, 2013 @ 01:55:10

  ரசிக்க வைக்கும் வரிகள் அருமை…

  வாழ்த்துக்கள்…

  /// மூங்கில் தோட்டம்… மூலிகை வாசம்…
  நெறஞ்ச மெளனம்… நீ பாடும் கீதம்…

  பெளர்ணமி இரவு… பனிவிழும் காடு…
  ஒத்தையடி பாதை… உன்கூட பொடி நட

  இது போதும் எனக்கு… இது போதுமே…
  வேறென்ன வேணும்…? நீ போதுமே ///

  படம் : கடல்

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 10, 2013 @ 16:22:51

   அருமையான பாடல் கேட்டுக் கேட்டு ரசித்த போது இவ் வரிகள் வந்தன.
   கருத்திற்கு நன்றியும் மகிழ்வும் தனபாலன்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. ஸாதிகா ஹஸனா
  ஏப் 06, 2013 @ 02:27:05

  ரசிக்க வைக்கும் படத்துடன் ரசிக்க வைத்த கவிதை.வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  ஏப் 06, 2013 @ 02:49:48

  கவித்துவம் மேவிய கட்டான சொற்கள்

  கவியாக்க வேண்டும் வேறென்ன வேண்டும்

  செவிகள் குளிர இதுவன்றோ வேண்டும்.

  மூங்கில் தோட்டம்… மூலிகை வாசம்

  இதுவன்றோ வேண்டும்!

  அருமை…வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 4. VAI. GOPALAKRISHNAN
  ஏப் 06, 2013 @ 03:16:18

  மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் – செவிகள் குளிர இதுவன்றோ வேண்டும்! படமும் படைப்பும் அருமை. வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. nayaki
  ஏப் 06, 2013 @ 09:13:06

  தங்களது கவிதையை வாசிப்பதற்காவே தமிழ் படிக்க வேண்டும் அம்மா !!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 06, 2013 @ 20:03:42

   நல்லது தானேடா. படிப்பு பலருக்குத் திரி ஏற்றுவது அன்றோ!.
   வந்து கருத்திட்டமைக்கு இனிய நன்றி.
   இறையருள் நிறையட்டும்.

   மறுமொழி

 6. ramani
  ஏப் 06, 2013 @ 14:26:37

  இது போன்ற கவிதை வேண்டும் என்பது மட்டும் இல்லை
  எப்போதும் தொடர்ந்தும் வேண்டும்
  மனம் கவர்ந்த கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. raveendran sinnathamby
  ஏப் 07, 2013 @ 14:52:22

  Very nice.reality of one poem.

  மறுமொழி

 8. கவியாழி கண்ணதாசன்
  ஏப் 07, 2013 @ 18:47:46

  எதுகை மோனை அதுவாயிணைந்து//
  இருப்பது தானே கவிதையாம்
  இல்லா நிலையில் எதுவுமே இருப்பது கொஞ்சம் குறையே தான்

  மறுமொழி

 9. பழனிவேல்
  ஏப் 09, 2013 @ 15:53:28

  “மதுகை வரிகள் மதுரமாய் விழுந்து
  எதுகை மோனை அதுவாயிணைந்து
  புதுமை பண்டித பவனியாய் தவழ்ந்து
  பதுமமாய் விரியலாம் வரிகள் பிறந்து.”

  அழகு வரிகள்.
  உண்மையில் இதுவன்றோ வேண்டும்!
  புகைப்படம் மிகஅருமை.

  மறுமொழி

 10. கீதமஞ்சரி
  ஏப் 12, 2013 @ 02:25:58

  பல புதிய தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்தி தமிழை வளர்க்கும் தங்களுக்கு மிகவும் நன்றி. இனிய கவிச்சந்தத்தோடு இசைபாடும் கவி வரிகளுக்குப் பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 11. kowsy2010
  ஆக 02, 2014 @ 11:23:06

  கவித்துவம் வளரட்டும். அழகான வரிகள்

  மறுமொழி

 12. கோவை கவி
  ஆக 03, 2014 @ 08:09:00

  Mikka nanry kowsy.

  மறுமொழி

 13. கோவை கவி
  ஆக 03, 2014 @ 08:11:48

  Ma La, Kannadasan Subbiah, Kannan Sadhasivam, கவிஞர் வாலிதாசன்
  likes this in FB.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: