270. சென்று நாளை வா!

capture-20130319-214425

சென்று நாளை வா!

*

அன்னமே நீரில் தோரணமே!

உன் பிரசன்னக் காரணம்

முன்னைத் தூதெனும் ஆரணமோ!

பின்னோக்கம்  சங்ககாலப் புராணம்.

*

நீள் விசும்பு பிரதிபலிக்கும்

நீருள் நீந்தும் சோடியே!

நீராடுகிறோம் வாழ்விலுன்னைப் போல்

நீளட்டுமெம்மின்பமும் நிலைக்க!

*

தோதுடன் அன்பன் அருகிருக்க

தூது எனக்கேன் அன்னமே!

சாதுரிய மனித குணத்திற்கு

சாகித்தியத்தில் பேர் கொண்டாயே!

*

நிறைகுடமாமெனன்பன் வரும் வரை

நின்றிடுவாய்!  நின்றிடுவாய்!  பின்

சென்று நாளை வா!

நன்று நிலவரம் பேசுவோம்!

*

( ஆரணம் -வேதம்.  தோதுடன் – வசதி, பொருத்தம், தொடர்பு.

சாதுரிய – திறமை, நாகரிகம்.  சாகித்தியம் – இலக்கியம்.)

*

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்

7-4-2013.

*

சகோதரார் வேண்டு கோளின் படி எழுதிய கவிதை .
இந்த இணைப்பில் அவரது வலையில் இதைக் காணலாம் .
அவருக்கு மிக்க நன்றி.         http://venkatnagaraj.blogspot.com/search?updated-max=2013-04-26T06:45:00%2B05:30&max-results=1        

(  http://venkatnagaraj.blogspot.com/search…)

*

12440-1

26 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கோவை கவி
    ஏப் 07, 2013 @ 20:33:13

    சகோதரர் வெங்கட் நாகராஜின் படம் – கேட்ட கவிதை.

    மறுமொழி

  2. இளமதி
    ஏப் 07, 2013 @ 23:04:43

    அழகான கவிதை சகோதரி! நல்ல அரும்பதச் சொற்களால் பாடிய பாமாலை. சிறப்பு. வாழ்த்துக்கள்!

    இன்றுபோய் நாளைவாவென நல்கினையோ சோதரி
    தொன்றுதொட்டு தூதுபோனதால் சோர்வுகண்டாயோ
    இன்னற்படும் எம்மினத்துன்பம் இயம்ப அன்னத்திடம்
    சொன்னசெய்தி விரைந்து சேர்த்திடுமே துயர்நீங்குமே…

    மறுமொழி

  3. Rajarajeswari jaghamani
    ஏப் 08, 2013 @ 06:27:07

    சாகித்தியத்தில் பேர் கொண்டாயே!

    நிறைகுடமாமெனன்பன் வரும் வரை

    நின்றிடுவாய்! நின்றிடுவாய்! பின்

    சென்று நாளை வா!

    நன்று நிலவரம் பேசுவோம்!

    அருமையான கவிதைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    மறுமொழி

  4. திண்டுக்கல் தனபாலன்
    ஏப் 08, 2013 @ 06:42:13

    அருமையான வரிகள் சகோதரி… வாழ்த்துக்கள்…

    மறுமொழி

  5. sasikala
    ஏப் 08, 2013 @ 08:27:05

    தோதுடன் அன்பன் அருகிருக்க

    தூது எனக்கேன் அன்னமே!
    அருமைங்க.

    மறுமொழி

  6. bganesh55
    ஏப் 08, 2013 @ 16:11:26

    ஆஹா… அன்னத்தை தூதனுப்புவீர்கள் என்று நினைத்தால், தோதுடன் அன்பன் அருகிருக்க தூது எனக்கேன் அன்னமேன்னு கேட்டு வித்தியாசமான கோணத்துல கவிதை பாடிட்டீங்க. அருமை! மிக ரசித்தேன்!

    மறுமொழி

  7. sujatha anton
    ஏப் 08, 2013 @ 17:35:12

    தோதுடன் அன்பன் அருகிருக்க

    தூது எனக்கேன் அன்னமே!

    சாதுரிய மனித குணத்திற்கு

    சாகித்தியத்தில் பேர் கொண்டாயே!
    அருமை……அன்னத்துடன் மனிதன் பேசுவது நிஐமே…இதமாக எடுத்து கவிதையாக
    தொடுத்தமை அருமை…

    மறுமொழி

  8. Tamizhmuhil Prakasam
    ஏப் 09, 2013 @ 01:05:51

    அருமையான வரிகள் கவியே !!!

    மறுமொழி

  9. T.N.MURALIDHARAN
    ஏப் 09, 2013 @ 02:42:50

    படைத்திற்கு பொருத்தமான எதிர்பார்க்காத கருத்தில் வித்தியாசமான கவிதை. பாராட்டுக்கள் மேடம்

    மறுமொழி

  10. பழனிவேல்
    ஏப் 09, 2013 @ 15:55:48

    “நிறைகுடமாமெனன்பன் வரும் வரை
    நின்றிடுவாய்! நின்றிடுவாய்! பின்
    சென்று நாளை வா!
    நன்று நிலவரம் பேசுவோம்!”

    அழகு.
    அதிலும்
    “சென்று நாளை வா!
    நன்று நிலவரம் பேசுவோம்!” – மிக அழகு.

    மறுமொழி

  11. கோவை கவி
    ஏப் 10, 2013 @ 17:09:02

    மிக மகிழ்வும் நன்றியும் சகோதரா பழனிவேல்.
    இறையாசி நிறையட்டும்

    மறுமொழி

  12. ranjani135
    ஏப் 11, 2013 @ 10:46:24

    திரு வெங்கட் போட்ட படத்திற்கு நீங்களும் கவிதை எழுதிவிட்டீர்களா? அவருக்கு அனுப்பி வைத்தீர்களா?

    அன்பன் வந்தபின் அங்கு அன்னத்திற்கு என்ன வேலை?
    நல்ல கற்பனை – அருமையான கவிதை!

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 11, 2013 @ 15:12:43

      அன்றே அனுப்பிவிட்டேன் சகோதரி இன்று வரை பதிலில்லை.
      இனி நானென்ன செய்வது. ஓரு வேளை பிந்திவிட்டதோ தெரியவில்லை.
      மிக நன்றியும் மகிழ்வும் சகோதரி இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  13. கீதமஞ்சரி
    ஏப் 12, 2013 @ 02:28:46

    மிகவும் லயித்து ரசித்த வரிகள்! அவன் வந்தபின்பு அன்னத்துக்கு அங்கே என்ன வேலை? மிகச்சரிதான் அவள் சொன்னது. அருமையான கவிதைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    மறுமொழி

  14. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    ஏப் 13, 2013 @ 09:08:18

    வணக்கம்
    சகோதரி
    அழகான சொற்பதங்கள் கொண்டு கவிமாலை தொடுத்த எங்கள் சகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள் அருமையாக உள்ளது

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  15. கோவை கவி
    மார்ச் 24, 2019 @ 21:14:35

    2014 year comments:-
    Vetha Langathilakam :- சகோரர் வெங்கட்டின் படமும் கேட்ட வரிகளும்.

    Seeralan Vee :- இலக்கணத்தின் நன்னடையில்
    இன்புற்றேன் உமகவியுண்டு
    இருந்தாலும் வெளிப்படையாய்
    இயம்புகின்றேன் மேற்கோள் இட்டு
    இளையநிலா என்றொருத்தி
    எழுதிவிட்டாள் வலைப்பூவில்
    இப்படத்தை இட்டு இனியகவி மேலெழுதி
    அன்னத்தை தூதனுப்பி
    அழிகின்ற எம்மவர்க்காய்
    அனுதினமும் அகம்வேக
    அவள் உணரும் ஆன்மாவை
    அழித்துப பாடினாள் கேட்டேன்
    ஈரிரண்டு அறைசுமந்த
    இதயமெல்லாம் வலிக்கிறதே…..!
    தங்கள் வரிகளில் கவிதைகளை ரசித்தலும் ஓர் வரம்…..ஆனால் மேலே நான் எழுதிய வரிகள்
    வேறொரு உறவின் கவிகளை சவைத்ததால் வந்த மாற்றம்….
    வாழ்கவளமுடன்

    சங்கரன் ஜி :- அருமை

    கவிஞர் தாரை கிட்டு தோதுடன் அன்பன் அருகி்ருக்க,தூது என்க்கேன் அன்னமே!……….ஆகா அருமை,அருமை!!!!! சரஷ்வதி உங்கள் நாவில் சத்தியமாக குடியிருகிறாள்…..வாழ்த்துக்கள்.

    மிதயா கானவி like this

    சிறீ சிறீஸ்கந்தராசா :- வாழ்த்துக்கள் அம்மா!! அருமையான பதிவொன்று!!

    Paval Rajadurai :- அருமையான பதிவுக்கு நன்றிகலந்த வாழ்த்துக்கள்…

    Ramadhas Muthuswamy :- //நிறைகுடமாமெனன்பன் வரும் வரை
    நின்றிடுவாய்! நின்றிடுவாய்! பின்
    சென்று நாளை வா!
    நன்று நிலவரம் பேசுவோம்!// மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!!!

    Loganadan Ps :- பார்த்தேன், ரசித்தேன், பரவசம் அடைந்தேன். அருமை. நன்றி!

    Sujatha Anton:- தோதுடன் அன்பன் அருகிருக்க
    தூது எனக்கேன் அன்னமே!
    சாதுரிய மனித குணத்திற்கு
    சாகித்தியத்தில் பேர் கொண்டாயே!
    அருமை……அன்னத்துடன் மனிதன் பேசுவது நிஐமே…இதமாக எடுத்து கவிதையாக
    தொடுத்தமை அருமை…

    Verona Sharmila :- அருமை,அருமை!!

    Abira Raj :- அழகிய படமும் கவியும் வாழ்த்துக்கள்

    Sakthi Sakthithasan :- அன்பினிய சாகோதரி வேத இனியான தமிழில் மனதை மயக்கும் கருத்துக்களைக் கோர்த்து நீங்கள் யாத்துத் தந்த விதமே அருமை

    பிரியசினேகன் :- தமிழன் அழகு கவிதை. வாழ்த்துக்கள்.

    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan சுவையான கவிதை. வாழ்த்துக்கள்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: