271. நேர்த்தியாய் மலர்க!

-_1_~1

நேர்த்தியாய் மலர்க!

நேர்த்தியாய் மலர்க புத்தாண்டு!

சேர்த்திடு சுகங்கள் நீண்டு!

போர்த்திடு மகிழ்வு ஈண்டு!

கீர்த்தி பெருகச் சீண்டு!

பொங்குது மனம் எதிர்பார்ப்பாய்!

ஏங்குது மனம் புதுக்கனவாய்!

இங்கும் புத்தெழில்  நினைவாய்

சங்கொலி முழங்கிட வருவாய்!

பந்த பாசம் இணைந்திட

வெந்த மனங்கள் ஆறிட

நந்தவனமாய் மகிழ்ந்திட

வந்திடு 2013ம் ஆண்டே!

நேற்றைய ஆண்டு நம்மில்

ஏற்றிய சுமைகள் மீண்டு

வெற்றிகரமாய் தாண்ட

வெற்றி ஆண்டாய் வருவாய்!

நிர்க்கதியானவர் வாழ்வுயர்ந்திட

சர்க்கரையாக அமைதி கலக்கட்டும்.

அர்த்தமுடை புத்தாண்டுப் பால்சோறு

அர்ப்பணிக்கட்டும் அச்சாரமாய் அமைதியை.

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

13-4-2013.

images 2356

 

Advertisements

32 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. angelin
  ஏப் 13, 2013 @ 21:30:18

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்அக்கா.அருமையான கவிதை வரிகள்

  மறுமொழி

 2. sujatha anton
  ஏப் 13, 2013 @ 21:33:47

  நேற்றைய ஆண்டு நம்மில்

  ஏற்றிய சுமைகள் மீண்டு

  வெற்றிகரமாய் தாண்ட

  வெற்றி ஆண்டாய் வருவாய்! அருமை…அருமை…கவிநயம்போல் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!! ”கவிதாயினி வேதா”. பகவான் ஆசி வேண்டி வாழ்த்துகின்றோம்.!!!!!

  மறுமொழி

 3. VAI. GOPALAKRISHNAN
  ஏப் 13, 2013 @ 22:21:06

  அருமையான கவிதை வரிகள். பாராட்டுக்கள்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. விச்சு
  ஏப் 14, 2013 @ 00:47:30

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் முக்கியமாக வெற்றிக்கு என் அன்பான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. venkat
  ஏப் 14, 2013 @ 01:04:18

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்……

  மறுமொழி

 6. கவியாழி கண்ணதாசன்
  ஏப் 14, 2013 @ 01:29:52

  ,தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 14, 2013 @ 01:51:37

  கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி – எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 8. ranjani135
  ஏப் 14, 2013 @ 05:40:02

  புத்தாண்டை நேர்த்தியாய் மலரச் சொல்லும் கவிதை அருமை சகோதரி.
  இனிய விஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  மறுமொழி

 9. Rajarajeswari jaghamani
  ஏப் 14, 2013 @ 05:59:17

  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  மறுமொழி

 10. கோமதி அரசு
  ஏப் 14, 2013 @ 10:00:03

  அர்த்தமுடை புத்தாண்டுப் பால்சோறு

  அர்ப்பணிக்கட்டும் அச்சாரமாய் அமைதியை.//

  உலக அமைதி மலரட்டும்!
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 11. திருமதி.பி.தமிழ்முகில் நீலமேகம்
  ஏப் 14, 2013 @ 10:47:39

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!

  மறுமொழி

 12. இளமதி
  ஏப் 14, 2013 @ 11:41:56

  மிக்க நன்றி சகோதரி!
  அருமையான கவிதை! மிகச்சிறப்பு.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய அன்பான சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  மறுமொழி

 13. கோவை கவி
  ஏப் 15, 2013 @ 05:16:35

  Suppu thaaththa padiyathu…

  மறுமொழி

 14. T.N.MURALIDHARAN
  ஏப் 15, 2013 @ 15:48:22

  தாமதமாக வந்துவிட்டேன். புத்தாண்டுக் கவிதை அருமை

  மறுமொழி

 15. mahalakshmivijayan
  ஏப் 16, 2013 @ 13:45:54

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 16. பழனிவேல்
  ஏப் 17, 2013 @ 04:19:55

  “பந்த பாசம் இணைந்திட
  வெந்த மனங்கள் ஆறிட
  நந்தவனமாய் மகிழ்ந்திட”

  புத்தாண்டு புதுக் கவிதை அருமை.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: