272. புகையால்….

Stop%20Smoking

புகையால்….

 

பெருவாரியாக மக்கள் கூடும்

பேருந்து நிலையம் தெருவெங்கும்

வருந்தாது புகைக்கிறார்கள் பிறர்

வருத்தம் அறியாது மடைமையாய்.

 

பாதையில் நடக்கும் போதும்

கீதையெனக் கையில் கொண்டு

வாதையெனும் புகையோடு பலரும்

பூதையாய் இதயத்தைத் தாக்குகிறாரே!

 

அங்கும் இங்கும் எங்கும்

தங்கும் புகை! புகை!

கிங்கரன் இயமன் போல்

வாங்குதே வதைக்குதே உயிரை.

 

அருமையாம் நிம்மதி குலைகிறது.

கருமைப் புகையால் பதைப்பு.

திருமை மனம் திகைக்கிறது.

தெருவிலும் எங்கும் அனுபவம் கொடுமை.

 

 

(பூதை – அம்பு.  திருமை – அழகு.)

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

15-4-2013.

reflection-swirl

Advertisements

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவியாழி கண்ணதாசன்
  ஏப் 15, 2013 @ 23:12:23

  மூச்சு திணறல் நோய் உள்ளவர்கள் தான் பாவம்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 16, 2013 @ 02:01:12

  தானும் கெட்டு, அடுத்தவர்களையும் கெடுத்து…

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  ஏப் 16, 2013 @ 02:31:11

  அருமையாம் நிம்மதி குலைகிறது.

  கருமைப் புகையால் பதைப்பு.

  திருமை மனம் திகைக்கிறது.

  தெருவிலும் எங்கும் அனுபவம் கொடுமை.

  கேடு தரும் கொடுமை..!

  மறுமொழி

 4. Dr.M.K.Muruganandan
  ஏப் 16, 2013 @ 16:31:18

  “வருந்தாது புகைக்கிறார்கள் ”
  வருத்தம் தனைப் பீடிக்கத் தேடி
  வருவதை அறியாது புகைக்கிறார்கள்
  சேருமிடம் சுடுகாடு
  நெருங்குதை
  அறியாது புகைக்கிறார்கள்
  பொறுங்கள் ஆழ்ந்த அனுதாபம்
  தெரிவிக்க காத்திருக்கிறார்கள்
  புகையுங்கள்
  புகையுங்கள்
  புகைத்துக்கொண்டே இருங்கள்.

  மறுமொழி

 5. இளமதி
  ஏப் 16, 2013 @ 18:22:02

  சிறப்பான சிந்தனைக் கவிதை சகோதரி!
  அருமை. வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 6. பழனிவேல்
  ஏப் 17, 2013 @ 04:16:41

  கவிப் புகையை ரசித்து ருசித்தேன்.
  அழகு அருமை.
  அதிலும்

  “பாதையில் நடக்கும் போதும்
  கீதையெனக் கையில் கொண்டு
  வாதையெனும் புகையோடு பலரும்
  பூதையாய் இதயத்தைத் தாக்குகிறாரே!”

  மிக மிக அழகு.

  மறுமொழி

 7. seeralan
  ஏப் 21, 2013 @ 16:40:48

  நல்ல சமூக அக்கறை

  இனிய கவிதை வாழ்த்துக்கள்

  மறுமொழி

 8. பி.தமிழ் முகில் நீலமேகம்
  ஏப் 24, 2013 @ 21:56:46

  “அங்கும் இங்கும் எங்கும்

  தங்கும் புகை! புகை!

  கிங்கரன் இயமன் போல்

  வாங்குதே வதைக்குதே உயிரை.”

  இவ்வரிகளை மிகவும் இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல கவியே !!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: