8. வெற்றிக்கு ஒரு வயது

1st-birthday

வெற்றிக்கு ஒரு வயது

 

 

எங்கள் செல்லப் பேரன்

தங்கக்கட்டி ராசன்

உங்கு குடித்து வளர்ந்தான்.

இங்கு ஒரு வயதாகிறான்.

 

திலீபன் – சாந்தியின் அரும்

திலகம் தினகரன் ”வெற்றி”

உலவி நிறைகிறார் இன்று

கலகலப்பு ஒரு ஆண்டு.

 

எட்டியடி வைக்கிறார்

சுட்டிச் செல்வன் எங்கள்

கட்டி வராகன் வெற்றியே

பட்டுக் குஞ்சப் பெட்டகமே!

 

அச்சுப் பிச்சு மழலையால்

கிச்சுக் கிச்சு மூட்டுகிறார்

பச்சை மரகதமே! பல்லாண்டு

சீரும் சிறப்பாக வாழ்ந்திடு!

 

 

(கட்டி வராகன் – தங்கநாணயம்.   தினகரன் – சூரியன்)

 

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

16-4-2013.  

 

 

 

 

baloonz

34 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  ஏப் 16, 2013 @ 21:17:17

  தங்கள் செல்லப்பேரனுக்கான கவிதை அருமை. பாராட்டுக்கள். தங்கள் பேரக் குழந்தைக்கு நல்வாழ்த்துகள் / நல்லாசிகள்.

  மறுமொழி

 2. k
  ஏப் 16, 2013 @ 22:07:04

  அம்மா உங்கள் செல்லப் பெயரனுக்கு எங்கள் சிந்தை நிறைந்த வாழ்த்துக்கள்,உங்களைப் போலவே அன்போடும்,தமிழ்ப் பண்போடும்
  நல்லறிவோடும் வாழ்க பல்லாண்டு! வளர்க தமிழ்ச் சொல்லாண்டு என வாழ்த்துகிறேன்!!

  மறுமொழி

 3. ramani
  ஏப் 17, 2013 @ 02:16:29

  கவிதாயினிப் பாட்டியின்
  செல்ல அணைப்பில் வளரும் குழந்தை
  நிச்சயம் சாதனைத் திலகமாகத் திகழும் என்பதில்
  எவ்வித சந்தேகமும் இல்லை
  குழந்தைக்கு எனது மனம் கனிந்த இனிய
  பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 17, 2013 @ 02:31:20

  உங்களின் செல்லப்பேரனுக்கு அன்பான வாழ்த்துக்கள்… DD சொன்னதாக சொல்லி விடுவீங்க தானே…? ஹிஹி… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 5. கவியாழி கண்ணதாசன்
  ஏப் 17, 2013 @ 03:15:54

  அதைவிட உங்களை எப்போதும் மகிழ்ச்சியாய் வைத்துள்ளார் ,உண்மைதானே?

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 23, 2013 @ 17:26:29

   ஆமாம் கவியாளி அவரால் மிக மகிழ்வே எமக்கு.
   20ம் திகதி ஓரு கொண்டாட்டம் செய்தோம் ஓரு 70 பேருடன்.
   சில படங்கள் முகநூலில் உள்ளது.
   மிக நன்றி. கருத்திற்கு.

   மறுமொழி

 6. பழனிவேல்
  ஏப் 17, 2013 @ 04:10:49

  பாட்டியின் பாசமொழி பாலகனை பார் சிறக்கச் செய்யும்.
  “ஓர் நாளுக்காக ஓராண்டு காத்திருக்கும் உன்னத நாள் – பிறந்தநாள்.”
  என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  வெற்றி தொடரட்டும்…

  மறுமொழி

 7. கோமதி அரசு
  ஏப் 17, 2013 @ 04:25:52

  பச்சை மரகதமே! பல்லாண்டு

  சீரும் சிறப்பாக வாழ்ந்திடு!//

  இந்த பாட்டியும் வாழ்த்துகிறேன்.
  வாழ்கபல்லாண்டு. வளர்க சீரும், சிறப்புமாய்..
  வாழ்க வளமுடன்!
  வாழ்கநலமுடன்!

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 17, 2013 @ 05:44:51

  IN FB:-

  Priya Manohaan likes this..

  Chembiyan Valavan சுட்டிச் செல்வன் வெற்றிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!!

  மறுமொழி

 9. angelin
  ஏப் 17, 2013 @ 09:09:48

  வெற்றிக்கு அன்பான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
  அவருக்கென தாங்கள் எழுதிய கவிதை மிக அருமை

  மறுமொழி

 10. Rajarajeswari jaghamani
  ஏப் 17, 2013 @ 12:29:35

  வெற்றிக்கு ஒரு வயது
  பல்லாண்டு
  சீரும் சிறப்பாக வாழ்ந்திட வாழ்த்துகள்…

  மறுமொழி

 11. Ahil
  ஏப் 17, 2013 @ 12:51:24

  வேதா, அருமை….

  மறுமொழி

 12. Ahil
  ஏப் 17, 2013 @ 12:52:05

  வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 13. இளமதி
  ஏப் 17, 2013 @ 13:42:50

  உங்களின் பேரனுக்கு என் அன்பான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!
  உங்கள் கவிதையும் மிகச்சிறப்பு! உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 14. seeralan
  ஏப் 18, 2013 @ 07:46:18

  தங்கள் அன்பு பேரன் பல்லாண்டு ஆரோக்கியமாய் வாழ உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழட்டும் வளமுடன்

  மறுமொழி

 15. ranjani135
  ஏப் 18, 2013 @ 15:39:20

  அழகான, அருமையான, கவிதை எழுதி பேரனை பாச மழையில் நனைத்திருக்கிறீர்கள், சகோதரி.
  பாட்டியின் பாடல்கள் இன்னும் நூறு நூறு பெறட்டும் வெற்றி!
  எங்களது ஆசிகளும் அன்பும் வெற்றிக்கு அவனது பெற்றோர்களுக்கும்.

  மறுமொழி

 16. JOKER
  ஏப் 22, 2013 @ 14:14:38

  பெற்ற குழந்தை முதல் அடியெடுத்து வைத்த போது இருந்த
  மகிழ்ச்சி பல நூறு.
  பேரன் முதல் அடியெடுத்து வைக்கும் போது இருக்கும்
  மகிழ்ச்சி பல கோடி.
  எதிர்காலத்தில் பாட்டியின் எழுத்துக்களை சுவாசிக்கும் போது
  இன்றைய குட்டி இளவரசனின் மகிழ்ச்சி பல லட்சம் கோடி.
  சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழியில்
  திருஷ்டி பொட்டு வைக்க மறக்க வேண்டாம்.
  36500 நாட்களும் சீரும், சிறப்போடும் இனிய வாழ்க்கை
  வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 17. Dr.M.K.Muruganandan
  ஏப் 25, 2013 @ 02:42:36

  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: