50. கம்பன் ஏமாந்தான்!…

 

 kampan

 

 

 

கம்பன் ஏமாந்தான்!…

 

கும்பன் இலக்கண வரிகள்

உம்பல் தமிழ் வரிகள்

உம்பர் தரும் வரிகள்.

சம்பகம் நிறை வரிகள்

கம்பனும் ரசித்த வரிகள்.

 

கம்பளிப் பூச்சி ஊரலாக

அம்பலத்தில் வந்து ஆடும்

கொம்பனல்லாதவன் வரிகளென்ற

வெம்பல் வரிகள் கண்டால்

கம்பன் கடிதாய் ஏமாறுவான்!

 

 

(கும்பன் -அகத்தியன். உம்பல் – வலிமை.  உம்பர் – உயர்ச்சி  சம்பகம் – தற்பெருமை.

கொம்பனல்லாதவன் – ஆற்றலற்றவன். வெம்பல் – பிஞ்சில் பழுத்தல் )

 

 

பா வரியாக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டெக்மார்க்.

22-4-2013.

 

 

abar132ba

 

 

 

 

 

 

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. இளமதி
  ஏப் 22, 2013 @ 20:59:56

  அருமை! ஆழ்ந்த தமிழ்சொற்களில் புனைந்த அழகிய கவிதை!. கருத்தும் சேர்த்தே தந்திருப்பதால் ரசிக்க இலகுவாக இருக்கிறது.

  வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 23, 2013 @ 03:02:36

  அருமையான கவிதை… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  ஏப் 23, 2013 @ 03:16:42

  கம்பனும் ரசித்த வரிகள்.

  அருமையாக வரிகள் ..பாராட்டுக்கள்..

  மறுமொழி

 4. sujatha anton
  ஏப் 23, 2013 @ 15:15:07

  இலக்கணம் ததும்பும் வரிகள் அருமை….”கவிதாயினி வேதா”

  மறுமொழி

 5. Tamizhmuhil Prakasam
  ஏப் 24, 2013 @ 01:52:32

  அருமையான கவிதை. வாழ்த்துகள் கவியே !!!

  மறுமொழி

 6. பூங்குழலி !!!
  ஏப் 25, 2013 @ 02:33:25

  அருமை அம்மா அழகான தமிழில் அருமையான
  கவிதை இதை எமக்கு படிக்க
  கொடுத்தமைக்கு மிக்க நன்றி ……
  பூங்குழலி !!!

  மறுமொழி

 7. Dr.M.K.Muruganandan
  ஏப் 25, 2013 @ 02:41:36

  நல்ல கவிதை
  பல நல்ல தமிழ் சொற்களைக் கற்றுக் கொண்டேன்.

  மறுமொழி

 8. raveendran sinnathamby
  ஏப் 25, 2013 @ 03:12:14

  சொற்சுவை பொருட்சுவை
  நற்சுவையாக நயமொடுகவிதை.

  வதிரி.சி.ரவீந்திரன்.

  மறுமொழி

 9. கோவை கவி
  ஏப் 25, 2013 @ 05:06:11

  IN FB:-

  நாயகி கிருஷ்ணா and Chembiyan Valavan like this..

  நாயகி கிருஷ்ணா அருமை அம்மா அழகான தமிழில் அருமையான
  கவிதை இதை எமக்கு படிக்க
  கொடுத்தமைக்கு மிக்க நன்றி ……
  பூங்குழலி !!!

  Vetha ELangathilakam Mikka nanry poonkulaly. god bless you all+Chembiyan Valavn. Thank you.

  மறுமொழி

 10. கீதமஞ்சரி
  ஏப் 29, 2013 @ 02:27:36

  அறியாத பல சொற்களை அறிந்தேன். இனிய கவிநயம் ரசித்தேன். மனமுவந்த பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: