கலையும் கற்பனையும் (கைவினை). 7

P1040836

கலையும் கற்பனையும் (கைவினை). 7

சிறு வயதில் ஊரில் களி மண்ணில் உருவங்கள் செய்து விளையாடினோம். இவற்றில் முக்கியமாகப் பிள்ளையார் பிடித்தும் விளையாடியது நினைவு வருகிறது.

இது போல இங்கு பாலர் நிலையத்தில் கடையில் வாங்கிய நிறமூட்டிய களிகளில் உரு அமைப்ப்பது மிகப் பிரபலம்.

இதில் இரண்டு வகைகள் உண்டு. டெனிஸ் மொழியில் எல்இஆர் என்று ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டும் ”லிய” என்போம். அல்லது ”மொடலிய வொக்ஸ்”  என்போம்.

ஒரு வகை எந்த நாளும் இடிபாப்பம் செய்யும் மாக்கலவை போல பிடித்து விளையாடிய  பின்னர் ஒரு கிண்ணத்தில் வைத்து அடுத்த அடுத்த நாட்களும் செய்வோம். இறுகிவிட மாட்டாது. மாதக் கணக்கிலிருக்கும். பிள்ளைகள் இதனோடு விளையாடுவதை மிக நேசிப்பார்கள். ஏனெனில் இதைப் பினையும் உணர்வு மிக இதமானது. 

மேசையில் மெழுகு சீலை விரித்து, பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு ஆடை (ஏப்றன் என்று கூறுவோம்) அணிய வைத்து, ஓரிரு பெரியவர்களின் மேற்பார்வையில் இருந்து அனுபவிக்க, விளையாட விடுவோம். நாமும் அவர்களோடு குழந்தையாக செய்து காட்டலாம். இதைப்பார்த்து அவர்களும் வித விதமாக உரு அமைப்பார்கள்.

தொடும் உணர்வு, பினையும் உணர்வு, கற்பனை, கூட்டுறவு, விரல்களின் இயக்கச் சக்தி முன்னேற என்று பல முன்னெற்றம் கருதி இதைச் செய்வதுண்டு.

இதை விட இன்னோரு வகையானது. பல பல நிறங்களில் உள்ளது. உருவங்களைச் செய்து அவுணில் சுடுவது. பின்னர் எடுத்து நிறமூட்டுவது.

இங்கு படத்தில் நீங்கள் காண்பது சங்கிலி, மாலைகளிற்கு தொங்கவிடும் பென்ரன்.  பெரிய பிள்ளைகளுடன் சேர்ந்து நானும் செய்து சுட்டு, நிறமுட்டியது. சாவிகளுடன் தெங்கும் உருவம் இன்னும் வேறு என்னென்னவோ அவரவர் கற்பனையின் பிரகாரம் செய்யலாம். அவுணில் சுட்டதும் கடினமாகிவிடும்.

நீங்களும் செய்து பாருங்கள்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

26-4-2013.

fruiti

 

 

Advertisements

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஏப் 26, 2013 @ 07:49:05

  தொடும் உணர்வு, பினையும் உணர்வு, கற்பனை, கூட்டுறவு, விரல்களின் இயக்கச் சக்தி முன்னேற என்று பல முன்னெற்றம் கருதி இதைச் செய்வதுண்டு

  பணம் கொடுத்து ஒரு பொருளை
  வாங்கி மகிழ்தலை விட நாமாகச் செய்த
  பொருட்கள் நிச்சயம் கூடுதல் மகிழ்வைத்தரும்
  படமும் பகிர்வும் செய்திறனும் அதிக
  மகிழ்வளித்தது.வாழ்த்துக்கள்//

  .

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 27, 2013 @ 06:38:00

   ஆம் நானே செய்யும் பொருள் தருவது பெரும் மகிழ்வும் நிம்மதியுமே!
   கருத்திற்கு மிக நன்றி. இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. கோமதி அரசு
  ஏப் 26, 2013 @ 08:02:09

  தொடும் உணர்வு, பினையும் உணர்வு, கற்பனை, கூட்டுறவு, விரல்களின் இயக்கச் சக்தி முன்னேற என்று பல முன்னெற்றம் கருதி இதைச் செய்வதுண்டு.//

  நாமும் குழந்தைகளுடன் சேர்ந்து செய்து குழந்தைகளின் கற்பனை திறனை பாராட்டி செய்யும் போது குழந்தைகளுக்கும் இன்பம். நமக்கும் பேரின்பம்.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 26, 2013 @ 08:17:06

  விடுமுறையை இப்படி சிறப்பாக கொண்டாடலாம்…

  வாழ்த்துக்கள்… நன்றி…

  மறுமொழி

 4. Dr.M.K.Muruganandan
  ஏப் 26, 2013 @ 08:50:05

  “தொடும் உணர்வு, பினையும் உணர்வு, கற்பனை, கூட்டுறவு, விரல்களின் இயக்கச் சக்தி முன்னேற என்று பல முன்னெற்றம் கருதி இதைச் செய்வதுண்டு.”

  நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. seeralan
  ஏப் 26, 2013 @ 08:59:23

  நல்ல ரசனையும் கலை நயமும் கொண்டவர்களால் மட்டுமே இவ்வாறு எல்லாம் பண்ண முடியும்

  பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  ஏப் 26, 2013 @ 10:34:06

  தொடும் உணர்வு, பினையும் உணர்வு, கற்பனை, கூட்டுறவு, விரல்களின் இயக்கச் சக்தி முன்னேற என்று பல முன்னெற்றம் கருதி இதைச் செய்வதுண்டு.

  ரச்னைகள் நிரம்பிய அழகான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

  மறுமொழி

 7. sujatha anton
  ஏப் 26, 2013 @ 12:54:10

  கற்பனைத்திறன் கைவண்ணத்தில் வெளிப்படும்போது கலைகளின் வடிவங்களும் வெளிப்படுகின்றது….அருமை.. உங்கள் கைப்பணி.வாழ்த்துக்கள்” கவிதாயினி வேதா”.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 27, 2013 @ 07:00:53

   ”..கற்பனைத்திறன் கைவண்ணத்தில் வெளிப்படும்போது கலைகளின் வடிவங்களும் வெளிப்படுகின்றது..

   Unmai….மிக நன்றி Sujatha.
   இறையாசி நிறையட்டும்

   மறுமொழி

 8. angelin
  ஏப் 26, 2013 @ 18:32:45

  ஆமாம் அக்கா .இப்படியான கைவினைகள் பிள்ளைகளுடன் செய்யும்போது மன மகிழ்வும் ஏற்படும் .
  பயனுள்ள கலையை கற்றது போலவும் ஆகும் ..பயனுள்ள பொழுது போக்கும் கூட
  சங்கிலி பென்டன்ட் ரொம்ப அழகா இருக்கு

  மறுமொழி

 9. கவியாழி கண்ணதாசன்
  ஏப் 27, 2013 @ 09:19:39

  கலையும் கைவண்ணமும் அருமை.வாழ்த்துக்கள்

  மறுமொழி

 10. DHAVAPPUDHALVAN
  ஏப் 28, 2013 @ 07:34:17

  கற்பனை நினைவுகள்
  கைவிரல்கள் பிடிக்க
  கோணலாகிப் போனாலும்
  கொந்தளிக்கும் நினைவுகள்.

  பாட்டி சுட்ட வடை போல
  பக்குவம் இன்றி போனாலும்
  பரவசத்தில் மிதக்குமே
  பாவித்த உருவங்கள்.

  இம்மெழுகை பேத்தி
  தன் தாயையும் தொட விடாமல்
  விருப்பத்திற்கேற்று பிஞ்சு விரல்களால்
  பிணைந்த காட்சிகள்
  நெஞ்சைக் கொண்டதே கொள்ளை.

  மறுமொழி

 11. இளமதி
  ஏப் 28, 2013 @ 09:20:01

  சகோதரி…
  நல்ல கற்பனைத்திறனும் ரசனையும் கைவேலைத்திறனும் மிக்க செயல்.
  அருமை. எனக்கும் இப்படியானவை செய்வதற்கு மிகவும் பிடித்தமானதே….
  தொடருங்கள். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 12. கோவை கவி
  ஏப் 28, 2013 @ 15:59:32

  ”..அருமை. எனக்கும் இப்படியானவை செய்வதற்கு மிகவும் பிடித்தமானதே….”
  கருத்திற்கு மிக நன்றி சகோதரி இளமதி
  இறையாசி நிறையட்டும்

  மறுமொழி

 13. கீதமஞ்சரி
  ஏப் 29, 2013 @ 02:31:00

  நல்ல அழகான கைவேலைப்பாடு. குழந்தைகளின் செய்திறனையும் கற்பனைத்திறனையும் வெளிப்படுத்தும் அற்புதக் கலை. ஊக்குவிக்கும் தங்களுக்குப் பாராட்டுகள்.

  மறுமொழி

 14. பழனிவேல்
  மே 02, 2013 @ 09:56:27

  “தொடும் உணர்வு, பினையும் உணர்வு, கற்பனை, கூட்டுறவு, விரல்களின் இயக்கச் சக்தி முன்னேற என்று பல முன்னெற்றம் கருதி இதைச் செய்வதுண்டு. ”

  அழகிய அனுபவத்தை அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி.
  தொடருங்கள்…

  மறுமொழி

 15. sujatha
  ஜூன் 02, 2013 @ 06:01:12

  கலைத்திறன் நமக்குள் இருந்து கற்பனையாக வெளிப்படுபவை.
  அதிலும் கூட்டாக சேரும்போது மேலும் வெளிப்படுகின்றது. அதிலும் குழந்தைகளோடு இணைந்து நீங்கள் மேலும் கற்றுக்கொண்ட கலையின் வெளிப்பாடு அருமை……”.கவிதாயினி வேதா”

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: