கலையும் கற்பனையும் ( கைவினை). 9

P1040970

கலையும் கற்பனையும் ( கைவினை). 9

அது 1991 குழந்தைகள் பராமரிப்புப் படிப்பிலிருந்தேன். (1990 – 1993). டெனிஸ் மொழியில்  3 வருடப் படிப்பு.

 சங்கீதம் ஒரு பாடம்.

முழுவதும் பிள்ளைகள்  சம்பந்தமாகவே இருக்கும். செயல் முறைப் பாடமும் இருந்தது.

எக்ஸ்.90 எமது வகுப்பின் பெயர்.

அதில் தான் இந்த சங்கீதக் கருவியைச் செய்தேன். ஆசிரியை உதவினார். பலர் பெரிய டோலக் செய்தனர். நானே தான் எனக்கு – சிறிதாகத் தெரிவு செய்தேன். இதை வீட்டில் செய்ய முடியாது. மரம், மேலே போட்டு மூடும் தோல் இவைகள் உரிய இடங்களில் தான் எடுக்க முடியும். செமினாரியம் பெரும் நிறுவனமாதலால் வசதிகள் உண்டு.

நாம் வீட்டில் பாவிப்பதுண்டு ஒன்று சேர்ந்து இசைக்கும் போது.

drum

சிரட்டையை நன்கு சீவி மற்றைய சிறு கருவி செய்தது. அதன் பெயர் தெரியாது.

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

இப்பொது பேரனுடன் இருக்கும் போது ஏதும் வாசித்தால் அவரும் வந்து வாசிப்பார். புத்தகம் கிழிப்பார்.

நான் பென்சிலும் பேப்பரும் கொடுத்து விட்டால் கீறுவார்.

P1050004

மிகவும் ஆனந்தப் படுவார். கை தட்டி உற்சாகப் படுத்துவேன். விரல்கள் கட்டுப் பாட்டிற்குள் இல்லாததால் நேர் கோடான கீறல்கள் தானே ஆரம்பம்.

vethriart

பின்னர் ஓரளவு கட்டுப்பாடு வர வளைவுகள் வரும். எழுதுகோலைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்கள். இங்கு தான் எழுத்து எழுத வருகிறது.

இது போலவே நிறம் தீட்டும் விடயத்திலும். நிறத்துடன் முதலில் விளையாட விடுவது. கரத்தில் சாயத்தைப் பூசி ரீ சேட் பிறின்ட் பண்ணுவதுண்டு. அதை வீட்டிற்கு கொண்டு போய் காட்டி பெருமைப்படுவார்கள்.

இங்கு நீங்கள் காண்பது கைகள், விரல்கள் கட்டுப்பாடுடைய – நிறம் தீட்டும் பயிற்சி.

இப்படி வெற்றுக் கட்டங்களை அச்சடித்துக் கொடுப்போம்.

20031_1294791487068_1324105_n

கட்டத்திற்கு வெளியே நிறம் பூசுப்படாது நிறம் தீட்டிப் பழகுவார்கள்.

முயன்று பார்க்கலாம்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

29-5-2013.

crayon_line

Advertisements

277. சோம்பல் மிகக் கெடுதி.

800px-apple_juice_with_3apples

*

சோம்பல் மிகக் கெடுதி.

*

சோலைவனக் கவி பாரதி அந்நாளில்

             சோம்பல் மிகக் கெடுதியென்றான் தாளில்.

சோம்பித் திரியேலென்று ஒளவை மொழிந்தாள்.

            சோதியை வாழ்வில் தருகின்ற வரிகள்!

சோதிடமோ வெனும் நம்பிக்கை வரிகள்!

             சோபனமா யிவை தொடரும் மொழிகள்.

*

அரைகுறைத் தூக்கம், ஓய்வற்ற முயற்சி

            வரையற்ற தூக்கம், முயற்சியற்ற சுழற்சி,

குறைந்த ஓய்வு, குளப்பச் சூழல்

           நிறைக்கும் உடலில் மயக்கம், சோர்வை,

சிறையிடும் உடலின் சில பகுதிச்செயலை.

           குறையாக்கும் நற் குடும்ப அழகை.

*

எறும்புச் சுறுசுறுப்பு தொலைந்து போகும்.

           ஏவல் மறந்துடல் எந்திர இயக்கமாகும்.

எரிச்சல் ஏணையிட்டு எக்காளம் போடும்.

           ஏனோ தானேவென்ற நிலையுருவாகும்.

எங்கோ மூலையில் சாய்ந்திடத் தோன்றும்.

            என்ன செய்திட்டால் உற்சாகம் தோன்றும்!!!

*

குளிர் நீரருந்தல், பழச்சாறு சுவைத்தல்,

            குளிர் நீராடல், வெளிக்காற்றி லுலாவல்,

களிப்பிசைக் குளியல், உடலியக்கம்

            எளிமையாய்  தருமே மனப் புத்துணர்வு.

வழிகள் பலதை வழக்கப் படுத்தவும்

             குழிக்குள் சோம்பல் குடங்கிப் படுக்கும்.

*

 

(சோபனம் – நன்மை, அழகு. குடங்கி – வளைந்து)

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

13-8-2005.

*

fruiti

 

27. நாண்.

thammmil

 

 

நாண்.

(2004ல் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எழுதி வழமையான வானொலியில் நான் வாசித்த கவிதையிது. ” நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்”  பாடலின் தாக்கம். பிடித்த பாடலும் கூட)

நல்ல தமிழ்  நல்ல இலக்கணம்

நல்ல அறிவு  நல்ல அனுபவம்

நல்ல தகுதி நல்ல ஆய்வு

நனைத்து நடும் நற்றமிழ் நடவு!

நல்ல கவிதை விளைச்சல் கனவு!

நல்ல நம்பிக்கை உயர்த்தும் தரவு!

நற்றமிழ் நடவு கிறுக்கல் அல்ல!

நற்றமிழ் இலக்கணப் பொறுக்கல் அல்ல!

நானே திருத்தி நானே பொருத்தும் நாணே!

தமிழைத் திரிக்கும் நூல்!

ஏனோ நூலை அலைத்துக் குலைத்து

வானில் பட்டம் உயராது தடுக்கிறாய்!

அருவக்காற்றே நீ சாற்றிடு!

அருமைக்கவி இலக்கியம் கற்றாயா!

சுகந்தம் விரிக்கச் சுத்தம் செய்கிறாய்!

மகரந்தம்  பரப்பி இனம் பெருக்குகிறாய்!

சுந்தரக் கவிப்பட்டம் நானேற்றுவதாய்

சுகவாழ்வுச் சமூகப்பணி நீ செய்திடுவாய்!

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

24-4-2004.

Big Blue Divider

 

Advertisements

கலையும் கற்பனையும் 8.(கைவினை)

P1040572

கலையும் கற்பனையும் 8.(கைவினை)

 

சிறுவர்களிற்கு பொத்தான் என்றால் நன்கு பிடிக்கும்.

சட்டையிலிருந்து களன்றவைகளை சிலர் சேகரித்து வைத்து விளையாடுவார்கள். ஒரு தகர டப்பாவிலோ அல்லது போத்தலிலோ போட்டு வைத்து பாவிக்கலாம். இப்படி சேர்த்தவைகளைப் பிள்ளைகளோடு பல வகையில் விளையாடலாம். லூடோ போன்ற விளையாட்டிற்குக் காய்களாகவும் பாவிக்கலாம்.

நானும் இப்படி வகை வகையான அழகான பொத்தான்களை சேகரித்து வைத்திருந்தது  நினைவு வருகிறது.

இங்கு நீங்கள் காண்பது நிறமூட்டிய சாக்குத் துணியில் பொத்தான்களை மரம் போன்ற அமைப்பில் பிள்ளைகளோடு நான் செய்தது.

இப்படி பல உருவங்களைக் கற்பனை செய்து அமைக்கலாம். உருவில் மிகப் பெரிய பொத்தானில் வண்ணங்கள் வரையலாம்.

Buttons08

சின்னஞ்சிறிய  பூக்கள் கொண்ட சீத்தைத்துணியால் பொத்தானை மூடிக்கட்டி அழகாக்கலாம்.

இதை விட கூகிளில் கண்ட சில படங்களையும் தந்துள்ளேன் ரசியுங்கள்.

IAH-330-ButtonFlowers-Hero

JFIAL_Buttons_01

N_ZeccaButtonsB

 

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ் டென்மார்க்.

20-5-2013.

Advertisements

38. பரிணாம மந்திரம்.

3

பரிணாம மந்திரம்.

 

உருகி ஓடும் பனியாறாய்

பெருகும் அன்பு பேராறாய்

தரும் நேசம் அமைதியானது.

பெரும் ஆதரவான கைப்பிடியது.

 

 

கருவோடு திருவான பெருமையது.

பருகிடும் பெற்றவர் பாசமது        

குருவானது. நாம் பெரும்  தருவாக

இருவரும் ஒருமையாய்த் தருவது,

 

 

 

கருவறை தொடங்கிக் கல்லறையீறாக

சில்லறையின்றிப் பெறும் தூயது.

நல்லறமாகவிது வாய்த்திட்டால் வாழ்வு

பல்லறமுடையவொரு பரிணாமமாகும்.

 

 

 

பா ஆக்கம்  பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

 18-6-2010.

 

 

 

 

clipart_purpleline2

Advertisements

276. தனிமை.

loneliness

தனிமை.

 

” தனிமையை ரசி!”  என்று ஒரு கவிதையை இதற்கு முன்னர் எழுதிவிட்டு இது என்ன மறுபடியும் என்று எண்ணுவது இயல்பு.

சமீபத்தில் எழுதியது – தனிமையை ரசி.

தனிமையை நான் ரசிப்பதுண்டு. இதே நேரம் கூட்டுறவும் பிடிக்கும். 

இப்போது தருவது 2004ல் யான் எழுதி ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் வாசித்தது.

பின்னர் 2005ல் (ஐப்பசி, கார்த்திகை, மார்கழி) யேர்மனிய கலைவிளக்கு சஞ்சிகை பிரசுரித்தது.

2006ல் சி.ஐ.ரிவியில் நான் தொலைபேசி மூலம் வாசித்தது.

சில சொல்லிணைப்பின் திருத்தத்துடன்

இப்போது ரசியுங்கள்!…….

 

தனியன் நீயென்று தவிப்பது ஏன்!

இனியன் நீயென்று நினைத்திடு தேன்!

தனிமையோடொரு பட்டிமன்றம் வீண்!

இனி–மை போடுன் பேனாவுக்குத் தான்.

 

ஏக்கமெதற்கு தூக்கியுதறிடு!

ஏதேனுமியக்க நிலையில் ஈடுபடு!

இயக்கத்தில் மனதைப் பதியவிடு!

இணைந்து ரசனையில் மனம் மயங்கிடு!

 

ஊனம் கொண்ட அறிவினிறக்கம்

ஞானம் கழன்ற உணர்வினேக்கம்.

சுய இயக்கம் சுயதிருப்தியினூக்கம்

வியக்க வைக்கும் மனநிம்மதித் தேக்கம்.

 

பூ மலர்ந்த மணம் பரப்பும் தனியே.

பூமி சுழன்றுவரும் இயக்கமும் தனியே.

பூப்படையும் பெண்ணிலையும் தனியே.

பூமத்தியரேகையெனும் மதிப்பும் தனியே.

 

பிறப்பிலும் வாழ்வில் மனிதன் தனியே.

இறப்பிலும் இறுதியில் மனிதன் தனியே.

மறப்பதேன்! சுயம்பிக்கைக் கொடியேற்று!

திறப்பதுன் மன மகிழ்வினூற்று.

 

தவிப்பு நிலை தருமிந்திரியங்களோடு

தகர்த்தெறிந்து வழக்கை விலக்கு!

தனிமையைத் தணிவோடு கையாண்டு கலக்கு!

தத்துவமாயுன் வாழ்வைத் துலக்கு!

 

 

பா ஆக்கம்  பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

10-2-2004.

 

https://kovaikkavi.wordpress.com/2013/05/12/275-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf/

 

 

 

barbluea

 

Advertisements

275. தனிமையை ரசி!

483928_414893435252210_248079144_n

தனிமையை ரசி!

 

தனிமையே தத்துவமாகு தகவோடு!

தனிமையே தத்தளிக்காது தாண்டு!

இனிமையே தருக்கோடு கலந்தாடு

தனிமையோடிணைந்து இசைந்தாடு!          (தனிமை)

 

சீரில்லா உறவுக் கூடு

சீற்றத்தின் வெற்றுக் கோடு

தீராத வெறுமைக் காடு

தீமூட்டும் தனிமைக் கோடு.                             (தனிமை)

 

ஓற்றைப் பெற்றோருக்கும் தனிமை.

இரண்டகப் பெற்றோருக்கும் வெறுமை.

திரண்ட ஏமாற்றத்தால் வெம்மை.

மிரண்டெரியூட்டும் கசப்புக் காடு              (தனிமை)

 

சுக்கு நூறாகும் மனம் பாளமாகும்

இக்கட்டில் நொறுங்கிக் காயமாகும்

திக்கறியாது தடுமாறிப் பெருமூச்சிடும்.

முக்குளிக்கும் தனிமை மனம்.              (தனிமை)

 

சுய நம்பிக்கைத் துணையுடன்

பயம் துணிவால் வெம்பிடும்.

பிணக்குக ளழிந்து இணக்கமாகும்.

கணக்கில் தனிமை தூரவாகும்.         (தனிமை)

 

தனிமையை மனம் துனித்தல்

சனியன், சூனியமெனக் கருதல்,

குனிவு நிலைளே நினைத்தால்.

வனித மனம் தனிமையையும் ரசிக்கும்.    (தனிமை)

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

12-5-2013.

 

(துனித்தல் – வெறுத்தல். வனித – சிறப்பு, மேன்மை)

 

இதே சாயலுடைய இன்னொரு கவிதை.

https://kovaikkavi.wordpress.com/2013/05/15/276-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/

 

div178

Advertisements

Previous Older Entries