273. அறுபடும் வேரும் அன்னியமாகும் உறவும்.

lotas

அறுபடும் வேரும் அன்னியமாகும் உறவும்.

 

 

நீர் ஊற்றி நிலம் நெகிழ வைத்தல்,

வேர் அறுபடாது வெளியே மரமிழுத்தல்

வேளாண்மை வழியொரு எளிமை வழி.

வேதனையின்றி உறவு வேர் அறுபடாத வழி.

 

 

ஆதரவை அழுக்கின்றிப் பூரணமாய்க் கொடுத்திட்டால்,

ஆனந்தமாய் அன்பை அள்ளி வழங்கிட்டால்,

ஆட்கொள்ளும் அமைதி அன்னியமாகாது

ஆணித்தரமாயுறவு வேர் அறுபடாது.

 

 அலட்சியக் காற்றின் அவலட்சண அலை

அன்பெனும் வேரை அறுபட வைக்கும்.

அகங்காரப் பட்டாடை தரித்து அலங்கோலமாய்

அன்னியமாக்கும் நல்லுறவு நிலையை.

 

 

 

அறுபடும் வேர் துடித்துச் சோர்வதும்,

அறுபட்டும் அதிலொரு புத்தளிர் துளிர்ப்பதும்

அன்னியமாகிய உறவு மனிதரை வதைப்பதும்

மென்னியைத் திருகிடும் மன அமைப்பு.

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

1-5-2013

 

 

humming-bird

 

Advertisements

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pkandaswamy
  மே 01, 2013 @ 21:33:24

  கவிதை மனதைத் தொட்டது.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 05, 2013 @ 06:26:26

   மிக்க நன்றி ஐயா. இறையாசி நிறையட்டும்.
   ஐயா தங்கள் பெயரைக் கிளிக்கினால் கிறவெட்டாருக்குப் போகிறது. தங்கள் வலைக்கு வரவில்லை.

   மறுமொழி

 2. bganesh55
  மே 02, 2013 @ 00:49:06

  அலட்சியக் காற்றில் அவலட்‌சண அலை அன்பெனும் வேரை அறுபட வைக்கும் – க்ளாžஸ்! நல்லதொரு கருத்தைச் சொல்லி மிக ரசிக்க வைத்தது உங்களின் கவிதை!

  மறுமொழி

  • கோவை கவி
   மே 05, 2013 @ 06:27:47

   மிக்க நன்றி நண்பா. இறையாசி நிறையட்டும்.
   (தங்கள் பெயரைக் கிளிக்கினால் கிறவெட்டாருக்குப் போகிறது. தங்கள் வலைக்கு வரவில்லை.)

   மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மே 02, 2013 @ 02:01:29

  /// ஆணித்தரமாயுறவு வேர் அறுபடாது. ///

  அருமை சகோதரி…

  மறுமொழி

 4. seeralan
  மே 02, 2013 @ 06:29:17

  அலட்சியக் காற்றின் அவலட்சண அலை

  அன்பெனும் வேரை அறுபட வைக்கும்………………………..

  அருமை அருமை

  மறுமொழி

 5. கோமதி அரசு
  மே 02, 2013 @ 07:51:26

  அலட்சியக் காற்றின் அவலட்சண அலை

  அன்பெனும் வேரை அறுபட வைக்கும்.

  அகங்காரப் பட்டாடை தரித்து அலங்கோலமாய்

  அன்னியமாக்கும் நல்லுறவு நிலையை.

  உறவின் நிலையை நன்றாக சொன்னீர்கள்..

  ஆதரவை அழுக்கின்றிப் பூரணமாய்க் கொடுத்திட்டால்,

  ஆனந்தமாய் அன்பை அள்ளி வழங்கிட்டால்,

  ஆட்கொள்ளும் அமைதி அன்னியமாகாது

  ஆணித்தரமாயுறவு வேர் அறுபடாது.//

  அன்பை அள்ளி வழங்கினால் உறவு வேர் அறுபடாது.
  உண்மை, உண்மை.
  அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 6. கீதமஞ்சரி
  மே 02, 2013 @ 10:00:12

  நீரூற்றி நிலத்தை நெகிழ வைத்து வேர் அறுபடாது மரத்தை வெளியேற்றும் வேளாண்செயலோடு, வெடுக்கெனும் வார்த்தைகளால் அன்பின் வேரைப்பிடுங்கி உறவை வெளியேற்றும் கொடுஞ்செயலைக் குறிப்பிட்டு வரைந்த கவிதை மனம் தொட்டு நெகிழ்த்துகிறது. உறவின் உன்னதம் அறியாதவர்களின் செயலை ஆதங்கத்தோடு கவியாக்கியவிதம் நன்று. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 7. பழனிவேல்
  மே 02, 2013 @ 10:06:18

  “அலட்சியக் காற்றின் அவலட்சண அலை
  அன்பெனும் வேரை அறுபட வைக்கும்.”

  உண்மை.
  அன்புக் கவிதை மிக மிக அழகு.
  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்.

  மறுமொழி

 8. Muhil
  மே 02, 2013 @ 12:42:47

  உறவுகளின் பெருமையை விளக்கும் அருமையானதொரு படைப்பு.ஆனால், இன்றோ எங்கே உறவுகளுடன் பழகினால், நாளை அவர்கட்கு நாம் உதவி செய்ய வேண்டிய நிலை வந்து விடுமோ என்றெண்ணியே ஒதுங்கியும், உறவுகளை ஒதுக்கியும் வாழ்கின்றனர்.இவர்கள் தம் தவறை உணர்வது என்றோ??

  மறுமொழி

 9. Mrs.Mano Saminathan
  மே 02, 2013 @ 18:24:57

  ஆதரவை அழுக்கின்றிப் பூரணமாய்க் கொடுத்திட்டால்,

  ஆனந்தமாய் அன்பை அள்ளி வழங்கிட்டால்,

  ஆட்கொள்ளும் அமைதி அன்னியமாகாது

  ஆணித்தரமாயுறவு வேர் அறுபடாது.//

  அருமையான வரிகள்!

  மறுமொழி

 10. மகேந்திரன்
  மே 02, 2013 @ 23:30:19

  இனிய வணக்கம் வேதாம்மா…
  மிகவும் அருமையான ஆக்கம்…
  உவமையுடன் ஆரம்பித்து
  கருத்தினை விளம்பிய விதம்
  மனதில் நின்றது…
  சொல்லும் சொல்லிலும் செய்யும் செயலிலும்..
  பிறரை கெடுத்திடாத எண்ணம் வேண்டும்.
  அதனை உள்நோக்கமாக கொண்டிடல் வேண்டும்..
  அருமை அருமை.

  மறுமொழி

 11. கவியாழி கண்ணதாசன்
  மே 02, 2013 @ 23:41:57

  அன்னியமாகிய உறவு மனிதரை வதைப்பதும்

  மென்னியைத் திருகிடும் மன அமைப்பு.

  சரியா சொன்னீங்க இன்றைய உறவின் நிலையை.

  மறுமொழி

 12. கோவை கவி
  மே 04, 2013 @ 18:39:30

  முத்து பாலகன்:- (In FB) உறுதியில்லா உணர்வுகளில் ஊறிக்களிக்கும் உறவுகள்
  உறுவது தான் குழப்பங்களி னூழித் தாண்டவம்
  பெறுவது தான் வாழ்ந்துவரும் பிழைகளின் ஆணந்தம்
  நிறுவிவிடும் வேதனைகள் நீங்காது எந்நாளுமே

  மறுமொழி

 13. sasikala
  மே 06, 2013 @ 02:24:14

  ஆதரவை அழுக்கின்றிப் பூரணமாய்க் கொடுத்திட்டால்,

  ஆனந்தமாய் அன்பை அள்ளி வழங்கிட்டால்,

  ஆட்கொள்ளும் அமைதி அன்னியமாகாது

  ஆணித்தரமாயுறவு வேர் அறுபடாது.

  ஆணித்தரமாய் மனதில் பதிந்த வரிகள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: