274. பனிப்போர்.

Abstract-Coloful-Design-Wh-452

பனிப்போர்.

 

 

எப்போதுமெங்குமொரு பனிப்போர்.

             தப்பாகவோ சரியாகவோவொரு தனிப்போர்.

அப்புமியலாமையிற் சுரக்கும் கசப்பு நீர்.

             உப்பும் போட்டியுணர்வின் பொறாமை நீர்

மூப்பு வகிக்கும் மூலவழியாலெழும் பனிப்போர்.

             ஆப்புவைக்கும் ஆக்கச் சக்திக்காகத போர்.

சப்பென வாழ்வுச் சந்தோசம் கருக்கும் போர்.

               காப்பில்லா மனிதநேயப் பிணிப்போர்.

 

 

பார்க்கும் தொலைக் காட்சிகள் பாதமூன்றப் பனிப்போர்.

                பரிமாறும் வானொலிகளின்  வார்த்தைப் பனிப்போர்.

பாடகர்களிடை பாண்டித்தியத்தால் பனிப் போர்.

                பாவலர்கள் பேசாது பரிமாறும் பனிப்போர்.

பக்தி வளர்ப்போர் பட்டை போடுவோர்

                பந்தடிப்போர் பரிவட்டம் பிடிப்போர்

பட்டம் வாங்கியோருக்கும் எங்கில்லைப் பனிப்போர்.

                பிச்சாண்டிகளுக்கும் பிரத்தியேக இடப்போர்.

 

 

பாரிலியற்கையைச் சீண்டும் செயற்கைக்கும் பலப்போர்.

                 பாசப் பிள்ளைகளிற்கும் பெற்றொரிற்கும் பனிப்போர்.

பிரிய மனைவிக்கும்  கணவனுக்கும் பனிப்போர்.

                 தெரியாது மறைப்போர்  நடிப்போரின் மாயப் போர்.

விரியும் சிந்தனைக்கும் பழமைக்கும் பனிப்போர்.

                  எரியும் காதலுக்காய் இளமையின் பனிப்போர்.

எரிச்சல் தருமிந்தப் பனிப்போரைத் தூண்டுவோர்

                  எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவோர்.

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

8-5-2013.

 

 

Devider

 

 

25 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. ramani
    மே 09, 2013 @ 01:13:00

    பனிப் போரே அனைத்து அழிவுகளுக்கும்ஆணிவேராய் இருக்கிறது எனச் சொல்லிச் செல்லும் கவிதை அதி அற்புதம் மனம் தொட்ட படைப்பு தொடர வாழத்துக்கள்

    மறுமொழி

  2. மகேந்திரன்
    மே 09, 2013 @ 01:48:33

    எங்கெங்கு காணினும் இதுபோன்ற…
    மனதிற்குள் பூட்டிவைத்தும்
    அதுவே கொள்ளளவு பொருக்காமல்
    வெடித்து சிதறியும்
    பனிப்போர்கள் நடந்துகொண்டு தான்
    இருக்கின்றன…
    மிகவும் அழகாக..
    அழகு தமிழ்ச் சொற்களால் நீங்கள் கவியாக்கிய விதம்
    மனத்தைக் கவருகிறது வேதாம்மா…

    மறுமொழி

  3. திண்டுக்கல் தனபாலன்
    மே 09, 2013 @ 02:06:37

    ஒவ்வொன்றையும் சிந்தித்து ஒப்பிட்டு சொன்ன விதம் பிரமாதம்… பாராட்டுக்கள்…

    வாழ்த்துக்கள் சகோதரி… நன்றி…

    மறுமொழி

  4. கவியாழி கண்ணதாசன்
    மே 09, 2013 @ 03:14:41

    எல்லாமே அக்கபோர்தான்.ஆனாலும் உங்கள் கவிதை மிகவும் ஜோர்

    மறுமொழி

  5. அன்பு தோழி
    மே 09, 2013 @ 06:40:54

    சிந்தனை அழகு வாழ்த்துக்கள்…

    மறுமொழி

  6. Rajarajeswari jaghamani
    மே 09, 2013 @ 07:45:37

    எரிச்சல் தருமிந்தப் பனிப்போரைத் தூண்டுவோர்

    எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவோர்.

    வெடித்து சிதறிய பனிப்போர்கள் …!

    மறுமொழி

  7. கவிஞா் கி. பாரதிதாசன்
    மே 09, 2013 @ 08:39:04

    வணக்கம்!

    விருத்த வடிவில் விளைந்த அடிகள்
    பொருத்தம் நிறைந்ததெனப் போற்று!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    மறுமொழி

  8. அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
    மே 09, 2013 @ 20:18:45

    இப்போர் இல்லையெனில் அக்கப்போர் ஆகிவிடும்; பின்னர் “போர்” அடிக்கும் என்பதாலே உலகம் உள்ளளவும் இப்பனிப்போரின் முகில்களின் பணி மழை இருக்கும்.

    மறுமொழி

    • கோவை கவி
      மே 12, 2013 @ 16:38:19

      ”..இப்பனிப்போரின் முகில்களின் பணி மழை இருக்கும்…”’
      ஆம். மிக நன்றியும், மகிழ்ச்சியும் கருத்திடலிற்கு, வருகைக்கும்.

      மறுமொழி

  9. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    மே 11, 2013 @ 03:41:36

    வணக்கம்
    சகோதரி

    படித்தேன் ரசித்தேன் அருமையான கவி படைத்த எங்கள் சகோதரி கோவை கவிக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் பயணத்தை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  10. SEERALAN
    மே 11, 2013 @ 10:35:42

    எங்கும் போர் எதிலும் போர்-இவை
    மங்கும் வரை மனிதர்க்கில்லை ஏற்றம்…!

    அழகிய கவிதை
    வாழ்த்துக்கள்

    மறுமொழி

  11. ranjani135
    மே 11, 2013 @ 17:32:46

    எத்தனை எத்தனை போர்கள்!
    தேவையில்லாத போர்கள்!
    மிக அழகான சொற்கள்!
    அர்த்தம் மிகுந்த கவிதை!

    மறுமொழி

  12. கோவை கவி
    மே 12, 2013 @ 16:43:56

    மிக நன்றியும், மகிழ்ச்சியும் கருத்திடலிற்கு, வருகைக்கும் sis.

    மறுமொழி

  13. பழனிவேல்
    மே 27, 2013 @ 06:03:12

    “பார்க்கும் தொலைக் காட்சிகள் பாதமூன்றப் பனிப்போர்.
    பரிமாறும் வானொலிகளின் வார்த்தைப் பனிப்போர்.
    பாடகர்களிடை பாண்டித்தியத்தால் பனிப் போர்.
    பாவலர்கள் பேசாது பரிமாறும் பனிப்போர்.
    பக்தி வளர்ப்போர் பட்டை போடுவோர்
    பந்தடிப்போர் பரிவட்டம் பிடிப்போர்
    பட்டம் வாங்கியோருக்கும் எங்கில்லைப் பனிப்போர்.
    பிச்சாண்டிகளுக்கும் பிரத்தியேக இடப்போர்.”

    சிறப்பான சிந்தனை வரிகள்.
    மிகவும் மனதை தொட்டது.

    மறுமொழி

  14. கோவை கவி
    ஜூன் 02, 2013 @ 07:13:51

    மிக மிக நன்றி சகோதரா பழனிவேல் இனிய கருத்திடலிற்கு.
    ஆண்டவனாசி நிறையட்டும்.

    மறுமொழி

  15. கோவை கவி
    மார்ச் 24, 2019 @ 20:50:24

    2014 year comments:-

    சங்கரன் ஜி :- ஆமாம் வாழ்க்கையே என்றும் பனிப்போர் தான்

    Kalaimahel Hidaya Risvi :- எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவோர்.

    சிறீ சிறீஸ்கந்தராசா:- “பாரிலியற்கையைச் சீண்டும் செயற்கைக்கும் பலப்போர்.
    பாசப் பிள்ளைகளிற்கும் பெற்றொரிற்கும் பனிப்போர்.
    பிரிய மனைவிக்கும் கணவனுக்கும் பனிப்போர்.

    தெரியாது மறைப்போர் நடிப்போரின் மாயப் போர்.
    விரியும் சிந்தனைக்கும் பழமைக்கும் பனிப்போர்.
    எரியும் காதலுக்காய் இளமையின் பனிப்போர்.
    எரிச்சல் தருமிந்தப் பனிப்போரைத் தூண்டுவோர்
    எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவோர்.
    ******** அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!!

    Anand Maheswaran :- மிகவும் அருமை. பாராட்டுக்கள் .

    Ramadhas Muthuswamy:- // பிரிய மனைவிக்கும் கணவனுக்கும் பனிப்போர்.
    தெரியாது மறைப்போர் நடிப்போரின் மாயப் போர். // …..
    ஆம்….பிரியமான் மனைவிக்கும் அன்பான கணவனுக்கும் பனிப்போர்.!!!
    அதைத் தெரியாது என்று மறைப்போரின் நடிப்பு ஒரு மாயப் போர்.தானே!!!
    மிகவும் அருமை!!! வாழ்த்துக்கள்!!!

    Verona Sharmila: விரியும் சிந்தனைக்கும் பழமைக்கும் பனிப்போர். அருமை..வாழ்த்துக்கள்

    Rajaji Rajagopalan :- போரென்றாலே தப்பான நடவடிக்கைதான். ஆயினும் இத்தகைய போர்கள் விரைவில் அல்லது ஒரு நாள் பனிபோல் கரைந்து முடிவுக்கு வந்துவிடும் என்பதாலா இவை பனிப்போர் என அழைக்கப்படுகின்றன? நாடுகளுக்கிடையேயுள்ள அதிகாரவெறிப் போர்களால் நன்மை ஏற்பட்டதோ தெளிவாகத் தெரியவில்லை ஆனால் குடும்பத்துக்குள் நடக்கும் போர்கள் பெரும்பாலும் நன்மை தந்துள்ளனவல்லவா? வேதா அம்மையார் பனிபோல் மனதைச் சில்லெனத் தொடுகிறார். நன்றி

    Ramadhas Muthuswamy :- அதனால் தான் “ஊடல்” என்று பெருமைப் படுகிறோமோ!!!

    Loganadan Ps :- போரில் இத்தனை வகைகளா? அற்புதம் – பொருளும் வரிகளும்!!!

    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- பனிப்போர் வீட்டிற்குள்ளும் நுழைந்துவிட்டது. நல்ல கவிதை

    சரவண பாரதி :- பனிப்போர்கொண்ட
    கவிப்போர்தன்னில்
    தவிப்போருள் யானும் ஒரு
    துளிப்போர்க்கருவியானேனே !

    Abira Raj :- பாரிலியற்கையைச் சீண்டும் செயற்கைக்கும் பலப்போர்.…See More

    Kalam Shaick Abdul Kader :- இப்போர் இல்லையெனில் அக்கப்போர் ஆகிவிடும்; பின்னர் “போர்” அடிக்கும் என்பதாலே உலகம் உள்ளளவும் இப்பனிப்போரின் முகில்களின் பணி மழை இருக்கும்.

    Seeralan Vee :- எங்கும் போர் எதிலும் போர்-இவை
    மங்கும் வரை மனிதர்க்கில்லை ஏற்றம்…!
    அழகிய கவிதை
    வாழ்த்துக்கள்

    Aangarai Bairavi :- Kavithaiyil mozhi aalumai irukkiradhu.’santhosam’ idharkku veru soll pottu irukkalaam.vazhakku thoni irukku.’magizhvai karukkum ‘ enavum padhivu seyyalaam.

    Vetha Langathilakam:- mikka nanry to all of you. God bless you all.

    மறுமொழி

ranjani135 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி