275. தனிமையை ரசி!

483928_414893435252210_248079144_n

தனிமையை ரசி!

 

தனிமையே தத்துவமாகு தகவோடு!

தனிமையே தத்தளிக்காது தாண்டு!

இனிமையே தருக்கோடு கலந்தாடு

தனிமையோடிணைந்து இசைந்தாடு!          (தனிமை)

 

சீரில்லா உறவுக் கூடு

சீற்றத்தின் வெற்றுக் கோடு

தீராத வெறுமைக் காடு

தீமூட்டும் தனிமைக் கோடு.                             (தனிமை)

 

ஓற்றைப் பெற்றோருக்கும் தனிமை.

இரண்டகப் பெற்றோருக்கும் வெறுமை.

திரண்ட ஏமாற்றத்தால் வெம்மை.

மிரண்டெரியூட்டும் கசப்புக் காடு              (தனிமை)

 

சுக்கு நூறாகும் மனம் பாளமாகும்

இக்கட்டில் நொறுங்கிக் காயமாகும்

திக்கறியாது தடுமாறிப் பெருமூச்சிடும்.

முக்குளிக்கும் தனிமை மனம்.              (தனிமை)

 

சுய நம்பிக்கைத் துணையுடன்

பயம் துணிவால் வெம்பிடும்.

பிணக்குக ளழிந்து இணக்கமாகும்.

கணக்கில் தனிமை தூரவாகும்.         (தனிமை)

 

தனிமையை மனம் துனித்தல்

சனியன், சூனியமெனக் கருதல்,

குனிவு நிலைளே நினைத்தால்.

வனித மனம் தனிமையையும் ரசிக்கும்.    (தனிமை)

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

12-5-2013.

 

(துனித்தல் – வெறுத்தல். வனித – சிறப்பு, மேன்மை)

 

இதே சாயலுடைய இன்னொரு கவிதை.

https://kovaikkavi.wordpress.com/2013/05/15/276-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/

 

div178

34 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  மே 12, 2013 @ 07:53:32

  தனிமையை ரசிப்பது பற்றிய இனிமையான கவிதை. பாராட்டுக்கள்,

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  மே 12, 2013 @ 07:57:19

  சுய நம்பிக்கைத் துணையுடன்

  பயம் துணிவால் வெம்பிடும்.

  பிணக்குக ளழிந்து இணக்கமாகும்.

  கணக்கில் தனிமை தூரவாகும்.

  அழகான தனிமை ..!

  மறுமொழி

 3. மகேந்திரன்
  மே 12, 2013 @ 08:06:35

  தனிமை என்பது தவம் போன்றது…
  அதனை ரசிக்கச் சொல்லும்
  அழகிய பதிவு வேதாம்மா…
  சந்தங்கள் அருமையாக இருக்கின்றன கவிதையில்…

  மறுமொழி

  • கோவை கவி
   மே 15, 2013 @ 07:12:44

   ”.. தனிமை என்பது தவம் போன்றது…”
   முழுக்க முழுக்க உண்மை.
   மிக நன்றி மகேந்திரன்.
   மகிழ்ந்தேன்..
   ஆண்டவனாசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  மே 12, 2013 @ 08:09:09

  /// சுக்கு நூறாகும் மனம் பாளமாகும்
  இக்கட்டில் நொறுங்கிக் காயமாகும்
  திக்கறியாது தடுமாறிப் பெருமூச்சிடும்.
  முக்குளிக்கும் தனிமை மனம். ///

  100% உண்மை…

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 5. கவியாழி கண்ணதாசன்
  மே 12, 2013 @ 11:36:04

  ஓற்றைப் பெற்றோருக்கும் தனிமை.//நானும் அதுபோலவே.இருந்தாலும் கவிதை எனக்கு துணையை சேர்க்கும் இதுவே எனக்கு துணையாய் இருக்கும் என்பதாய் கருதுகிறேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 15, 2013 @ 19:42:41

   இதுவே எனக்கு துணையாய் இருக்கும் என்பதாய் கருதுகிறேன்.
   மிக மகிழ்ச்சி என் வரிகள் தங்களுக்கு ஆறுதலாவதற்கு. மேலும் மகிழ்வு பொங்கட்டும் சகோதரா.
   கருத்திடலிற்கும் நன்றி.

   மறுமொழி

 6. maathevi
  மே 12, 2013 @ 13:16:08

  தனிமையிலே இனிமை. ரசனையான கவிதை.

  மறுமொழி

 7. கோமதி அரசு
  மே 12, 2013 @ 13:40:43

  சுய நம்பிக்கைத் துணையுடன்

  பயம் துணிவால் வெம்பிடும்.

  பிணக்குக ளழிந்து இணக்கமாகும்.

  கணக்கில் தனிமை தூரவாகும். //

  தனிமை கவிதை அருமை.

  மறுமொழி

 8. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மே 12, 2013 @ 16:46:18

  வணக்கம்
  சகோதரி

  ஓற்றைப் பெற்றோருக்கும் தனிமை.

  இரண்டகப் பெற்றோருக்கும் வெறுமை.

  திரண்ட ஏமாற்றத்தால் வெம்மை.

  மிரண்டெரியூட்டும் கசப்புக் காடு

  அருமையான வரிகள் தொடர்ந்து படைக்க எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 9. abdulkadersyedali
  மே 13, 2013 @ 06:50:46

  உண்மைதான்
  அருமையான கவிதை

  மறுமொழி

 10. seeralan
  மே 13, 2013 @ 07:43:01

  தனிமை ரசிக்கும் வேளை
  இனிமை யாகும் மாழை
  கனியை போலே ருசிக்கும்
  கண்டேன் நானும் வாழ்வில்….!

  அழகிய கவிதை வாழ்த்துக்கள்

  மறுமொழி

 11. Dr.M.K.Muruganandan
  மே 13, 2013 @ 16:42:10

  தனிமை இனியது
  தனக்குள் தானே திளைத்து
  இரசித்து மகிழலாம்.

  “பயம் துணிவால் வெம்பிடும்.
  பிணக்குக ளழிந்து இணக்கமாகும். ..”

  மறுமொழி

 12. பி.தமிழ் முகில்
  மே 14, 2013 @ 23:34:15

  தனிமையில் காணும் இனிமை குறித்த கவிதை அருமை கவியே !!!

  மறுமொழி

 13. கீதமஞ்சரி
  மே 16, 2013 @ 06:01:14

  ஆக்கமுள்ள மனத்துக்கு தனிமையே துணையாகும். அவதிப்படும் மனத்துக்கோ அது மிகக் கொடுமையாகும். மிக அழகாய் தனிமையை நேசிக்கும் வழிகளை எடுத்தியம்பிய கவிதைக்குப் பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 14. கோவை கவி
  மே 18, 2013 @ 21:24:05

  மிக நன்றி ரசனையான தங்கள் வரிகளிற்கு.
  மிக மகிழ்ந்தேன் கீதமஞ்சரி.

  மறுமொழி

 15. raveendran sinnathamby
  மே 26, 2013 @ 16:07:53

  தனிமையை இனிமையாய் ரசித் தேன்.

  வதிரி.சி.ரவீந்திரன்.

  மறுமொழி

 16. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
  ஜூன் 26, 2014 @ 03:08:33

  மனம் பாளமாகும் எனபது உண்மையே. சுய நம்பிக்கைத் துணையுடன் தனிமையை வெல்லலாம். சிறந்த மனம் தனிமையை ரசிக்கும் எனச் சொல்லும் அருமையான கவிதை. வாழ்த்துக்கள் சகோதரி

  மறுமொழி

 17. கோவை கவி
  பிப் 08, 2015 @ 22:49:38

  மிக நன்றி Grace தங்கள் வருகை, கருத்திடலிற்கு.
  என்றும் கருத்திட வர ஆண்டவன் துணை நிற்கட்டும்

  மறுமொழி

 18. சங்கர் நீதிமாணிக்கம்
  டிசம்பர் 24, 2015 @ 17:19:52

  அருமை அம்மா

  மறுமொழி

 19. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 15:07:56

  மிக நன்றி dear சங்கர் நீதிமாணிக்கம் தங்கள் வருகை, கருத்திடலிற்கு.
  என்றும் கருத்திட வர ஆண்டவன் துணை நிற்கட்டும்

  மறுமொழி

 20. கோவை கவி
  மார்ச் 24, 2019 @ 21:43:38

  2014 year comments:-

  சங்கரன் ஜி இனிய வரிகள் அறுமை

  Vetha Langathilakam :- மிக்க நன்றி இனிய நாள் அமையட்டும் சகோதரா.
  ( இனிய வரிகள் அருமை.- இங்கு று இன்றி ” ரு ” வருதல் கவனிக்கற்பாலது சகோதரா.)

  Kalaimahel Hidaya Risvi :- ஓற்றைப் பெற்றோருக்கும் தனிமை.
  இரண்டகப் பெற்றோருக்கும் வெறுமை.
  திரண்ட ஏமாற்றத்தால் வெம்மை.
  மிரண்டெரியூட்டும் கசப்புக் காடு அறுமைஅறுமைவேதா.

  சங்கரன் ஜி :- நன்றி என் இனிய சகோதரி வாழ்க என்றுமெ வளமுடன்

  Syed Ali Abdul Kader :- உண்மைதான்
  அருமையான கவிதை

  Vetha Langathilakam:- ha!..ha..அறுமைஅறுமைவேதா…kalaimahel Hidaya Risvi…..

  சிறீ சிறீஸ்கந்தராசா:- “தனிமையே தத்துவமாகு தகவோடு!
  தனிமையே தத்தளிக்காது தாண்டு! இனிமையே தருக்கோடு கலந்தாடு

  தனிமையோடிணைந்து இசைந்தாடு!

  Seeralan Vee :- தனிமை ரசிக்கும் வேளை
  இனிமை யாகும் மாழை
  கனியை போலே ருசிக்கும்
  கண்டேன் நானும் வாழ்வில்….!
  அழகிய கவிதை வாழ்த்துக்கள்

  Pushpalatha Gopalapillai :- அருமையான வரிகள் வாழ்த்துக்கள்..

  Dushanthikka Shuhumar :- சுய நம்பிக்கைத் துணையுடன்
  பயம் துணிவால் வெம்பிடும்.// மிக நன்று அம்மா. சிறப்பான எழுத்து நடை. பகிர்விற்கு நன்றி.

  Amalraj Francis :– அருமையான வரிகள்… வாழ்த்துக்கள்

  Gowry Nesan :- சீரில்லா உறவுக் கூடு
  சீற்றத்தின் வெற்றுக் கோடு
  தீராத வெறுமைக் காடு
  தீமூட்டும் தனிமைக் கோடு.

  Raji Krish :-தனிமை .. ஒரு சில நேரம் இனிமையா இருக்கும்…
  தனிமை…பலமணி நேரம் கடந்தால் கசப்பாக இருக்கும்..

  Loganadan Ps:- கோர்வையாய் வரும் அழகுத் தமிழ் வரிகள். அற்புதம்.

  சரவண பாரதி :- வரிகள் அதற்குள் முடிந்துவிட்டதே என்ற வருத்தம் எனக்கு !

  Abira Raj :- தனிமையே தத்துவமாகு தகவோடு!
  தனிமையே தத்தளிக்காது தாண்டு!
  இனிமையே தருக்கோடு கலந்தாடு
  தனிமையோடிணைந்து இசைந்தாடு!

  சுந்தரகுமார் கனகசுந்தரம்:- MORNING

  Verona Sharmila :- அழகிய கவிதை வாழ்த்துக்கள்

  Mageswari Periasamy :- ராகத்தில் வேகம் இருந்தால்,
  தேகத்தில் ஆட்டம் வரும்…உந்தன்
  கவிதையில் தமிழின் வேகம் இருப்பதால்,,,
  தித்திக்கின்றது நாவிலிருந்து இதயம் வரை….

  Rajaji Rajagopalan :- சுய நம்பிக்கைத் துணையுடன்
  பயம் துணிவால் வெம்பிடும்.
  பிணக்குக ளழிந்து இணக்கமாகும்.
  கணக்கில் தனிமை தூரவாகும். ..// பாடல்களனைத்தும் சந்தத்தோடு சேர்ந்து கருத்துக்களை வாரி வழங்குகிறது. அழகும் நளினமும் துள்ளி விளையாடுகின்றன. நன்றி

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- அருமை. “பயம் துணிவால் வெம்பிடும்.
  பிணக்குக ளழிந்து இணக்கமாகும். “

  மறுமொழி

 21. கோவை கவி
  மே 13, 2021 @ 08:28:16

  Yogi Yogi
  வேதங்கள் போன்று வேதாந்த வரிகள் தனிமையின் இனிமை இதைவிட இனிமையாக சொல்ல முடியாது அனைவருக்கும் காலத்தால் வெல்ல முடியாத வரிகள் அத்தனை வரிகளும் வலிகளுடன் வருங்காலத்திற்கான வழிகளை கொண்டதாக உள்ளது மிக அருமை வாழ்க வளமுடன் இறைவன் திருவருளால் தொடர்ந்து எழுதுங்கள் வருங்கால சந்ததியினரின் வாழ்விற்கு வழிகாட்டும்
  2019

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: