276. தனிமை.

loneliness

தனிமை.

 

” தனிமையை ரசி!”  என்று ஒரு கவிதையை இதற்கு முன்னர் எழுதிவிட்டு இது என்ன மறுபடியும் என்று எண்ணுவது இயல்பு.

சமீபத்தில் எழுதியது – தனிமையை ரசி.

தனிமையை நான் ரசிப்பதுண்டு. இதே நேரம் கூட்டுறவும் பிடிக்கும். 

இப்போது தருவது 2004ல் யான் எழுதி ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் வாசித்தது.

பின்னர் 2005ல் (ஐப்பசி, கார்த்திகை, மார்கழி) யேர்மனிய கலைவிளக்கு சஞ்சிகை பிரசுரித்தது.

2006ல் சி.ஐ.ரிவியில் நான் தொலைபேசி மூலம் வாசித்தது.

சில சொல்லிணைப்பின் திருத்தத்துடன்

இப்போது ரசியுங்கள்!…….

 

தனியன் நீயென்று தவிப்பது ஏன்!

இனியன் நீயென்று நினைத்திடு தேன்!

தனிமையோடொரு பட்டிமன்றம் வீண்!

இனி–மை போடுன் பேனாவுக்குத் தான்.

 

ஏக்கமெதற்கு தூக்கியுதறிடு!

ஏதேனுமியக்க நிலையில் ஈடுபடு!

இயக்கத்தில் மனதைப் பதியவிடு!

இணைந்து ரசனையில் மனம் மயங்கிடு!

 

ஊனம் கொண்ட அறிவினிறக்கம்

ஞானம் கழன்ற உணர்வினேக்கம்.

சுய இயக்கம் சுயதிருப்தியினூக்கம்

வியக்க வைக்கும் மனநிம்மதித் தேக்கம்.

 

பூ மலர்ந்த மணம் பரப்பும் தனியே.

பூமி சுழன்றுவரும் இயக்கமும் தனியே.

பூப்படையும் பெண்ணிலையும் தனியே.

பூமத்தியரேகையெனும் மதிப்பும் தனியே.

 

பிறப்பிலும் வாழ்வில் மனிதன் தனியே.

இறப்பிலும் இறுதியில் மனிதன் தனியே.

மறப்பதேன்! சுயம்பிக்கைக் கொடியேற்று!

திறப்பதுன் மன மகிழ்வினூற்று.

 

தவிப்பு நிலை தருமிந்திரியங்களோடு

தகர்த்தெறிந்து வழக்கை விலக்கு!

தனிமையைத் தணிவோடு கையாண்டு கலக்கு!

தத்துவமாயுன் வாழ்வைத் துலக்கு!

 

 

பா ஆக்கம்  பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

10-2-2004.

 

https://kovaikkavi.wordpress.com/2013/05/12/275-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf/

 

 

 

barbluea

 

Advertisements

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  மே 15, 2013 @ 06:57:33

  //இனி–மை போடும் உன் பேனாவுக்குத் தான்.//

  அரு-மை. மிகவும் ரஸித்தேன். பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  மே 15, 2013 @ 07:44:30

  கருத்துள்ள ரசிக்க வைக்கும் வரிகள் சகோதரி… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. மகேந்திரன்
  மே 15, 2013 @ 07:58:14

  ////ஊனம் கொண்ட அறிவினிறக்கம்

  ஞானம் கழன்ற உணர்வினேக்கம்.////

  எனக்கு பிடித்த வரிகள் வேதாம்மா…
  இனிமையான தனிமை நமக்கு விட்டுச் செல்லும்
  அற்புதமான வரிகள்…

  மறுமொழி

 4. ramani
  மே 15, 2013 @ 12:58:23

  தனிமையின் சிறப்பை
  இனிமையாகச் சொல்லிப்போனவிதம் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. கீதமஞ்சரி
  மே 16, 2013 @ 06:03:35

  \\தனியன் நீயென்று தவிப்பது ஏன்!

  இனியன் நீயென்று நினைத்திடு தேன்! \\

  ஆரம்ப வரிகளே அசத்தல். நம்மில் நாம் கொள்ளும் நம்பிக்கையே தனிமையின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும் திறவுகோல். ஊக்கமும் உற்சாகமும் ஊட்டும் வரிகளுக்குப் பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 6. கோமதி அரசு
  மே 16, 2013 @ 11:19:18

  தனிமையை நான் ரசிப்பதுண்டு. இதே நேரம் கூட்டுறவும் பிடிக்கும்//
  சில நேரங்களில் தனிமையும் இனிமை.
  சிலநேரங்களில் கூட்டுறவு இனிமைதான்.

  . தனிமையைத் தணிவோடு கையாண்டு கலக்கு!

  தத்துவமாயுன் வாழ்வைத் துலக்கு!//

  அருமையான் வரிகள்.

  மறுமொழி

 7. poongulali
  மே 17, 2013 @ 04:00:10

  அருமையான் வரிகள்.

  மறுமொழி

 8. பழனிவேல்
  மே 27, 2013 @ 06:06:34

  “தனிமையை நான் ரசிப்பதுண்டு. இதே நேரம் கூட்டுறவும் பிடிக்கும்.”

  தங்கள் வரிகளில் என்னை நான் காண்பது போல் உள்ளது.
  அழகு.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: