38. பரிணாம மந்திரம்.

3

பரிணாம மந்திரம்.

 

உருகி ஓடும் பனியாறாய்

பெருகும் அன்பு பேராறாய்

தரும் நேசம் அமைதியானது.

பெரும் ஆதரவான கைப்பிடியது.

 

 

கருவோடு திருவான பெருமையது.

பருகிடும் பெற்றவர் பாசமது        

குருவானது. நாம் பெரும்  தருவாக

இருவரும் ஒருமையாய்த் தருவது,

 

 

 

கருவறை தொடங்கிக் கல்லறையீறாக

சில்லறையின்றிப் பெறும் தூயது.

நல்லறமாகவிது வாய்த்திட்டால் வாழ்வு

பல்லறமுடையவொரு பரிணாமமாகும்.

 

 

 

பா ஆக்கம்  பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

 18-6-2010.

 

 

 

 

clipart_purpleline2

21 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. bganesh55
    மே 18, 2013 @ 02:12:44

    ரசிக்க வைத்த மந்திரம்! அருமை!

    மறுமொழி

  2. Rajarajeswari jaghamani
    மே 18, 2013 @ 02:12:57

    நல்லறமாகவிது வாய்த்திட்டால் வாழ்வு

    பல்லறமுடையவொரு பரிணாமமாகும்.

    அருமையான கவிதை ..!பாராட்டுக்கள்..

    மறுமொழி

  3. கவியாழி கண்ணதாசன்
    மே 18, 2013 @ 02:29:32

    அன்பு மட்டுமே இவ்வாறு ஆட்கொள்ள முடியும்

    மறுமொழி

  4. seeralan
    மே 18, 2013 @ 06:18:25

    பரிணாம மந்திரம் கண்டேன்
    இருமனத்தின் ஒருசேர்க்கையென
    தருநிழலில் தங்கினாற் போல்
    திருமணத் தந்திரமும் கண்டேன்

    அருமையான பகிர்வு

    வாழ்த்துக்கள்

    மறுமொழி

  5. கோமதி அரசு
    மே 18, 2013 @ 09:58:40

    நல்லறமாகவிது வாய்த்திட்டால் வாழ்வு

    பல்லறமுடையவொரு பரிணாமமாகும்.//
    பரிணாம மந்திரம் மிக அருமை.

    மறுமொழி

    • கோவை கவி
      மே 26, 2013 @ 13:30:06

      மிக நன்றி சகோதரி…கோமதி அரசு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டும் வரிகளுக்கு.- இனிய கருத்திற்கும் தங்கள் ரசனைக்கும்

      மறுமொழி

  6. ramani
    மே 18, 2013 @ 14:05:40

    நேரெதிர் சொற்களைத் தலைப்பாக்கியவிதமும்
    அதற்கான அருமையான விளக்கமாய் அமைந்த
    கவிதையும் மிக மிக அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    மறுமொழி

  7. திண்டுக்கல் தனபாலன்
    மே 19, 2013 @ 01:04:18

    மந்திரம் மிகவும் அருமை… வாழ்த்துக்கள் சகோதரி…

    மறுமொழி

  8. மகேந்திரன்
    மே 19, 2013 @ 02:05:43

    இருவேறு மனங்கள்
    இணைந்து ஆங்கே
    இல்லறம் புகுந்து
    நல்லறம் செய்வித்தால்
    பல்லறமாகும் வாழ்வின் பரிமாணம்…
    இதுவே பரிணாம மந்திரம்

    என அருமையாக கவி படைத்தீர்கள் வேதாம்மா…

    மறுமொழி

  9. பழனிவேல்
    மே 27, 2013 @ 06:00:07

    “கருவறை தொடங்கிக் கல்லறையீறாக
    சில்லறையின்றிப் பெறும் தூயது.
    நல்லறமாகவிது வாய்த்திட்டால் வாழ்வு
    பல்லறமுடையவொரு பரிணாமமாகும்.”

    அழகாய் சொன்னீர்கள்…
    மிகவும் ரசித்தேன்…

    மறுமொழி

    • கோவை கவி
      மே 27, 2013 @ 08:15:20

      மிக மிக மகழ்ச்சியும், நன்றியும் பழனிவேல் உமது வருகைக்கு, கருத்திற்கும்.
      நேரத்தின்படி உமது வலைக்கு வருவேன்.

      மறுமொழி

  10. kovaimusarala
    மே 31, 2013 @ 11:20:37

    வார்த்தை அழகாய் வசபடுகிறது எதுகைகள் மோனைகள் கூடி கொஞ்சிடும் அழகுதமிழ் படிக்க ஆனந்தம்

    மறுமொழி

  11. கோவை கவி
    மார்ச் 26, 2019 @ 17:02:58

    Gowry Sivapalan:- சிறந்த எதிர்கால சமுதாயத்தின் ஓரு தாரகை மந்திரம்

    Seeralan Vee :- பரிணாம மந்திரம் கண்டேன்
    இருமனத்தின் ஒருசேர்க்கையென
    தருநிழலில் தங்கினார்ப் போல்
    திருமணத் தந்திரமும் கண்டேன்
    அருமையான பகிர்வு
    வாழ்த்துக்கள்
    2014
    சங்கரன் ஜி :- Arumai

    Loganadan Ps :- கவிதையில் வெளிப்படும் பாசமும் நேசமும் தனிச் சிறப்பு. அருமை
    2015
    Verona Sharmila :- அருமையான வரிகள்…கருவறை தொடங்கிக் கல்லறையீறாக
    சில்லறையின்றிப் பெறும் தூயது.
    நல்லறமாகவிது வாய்த்திட்டால் வாழ்வு
    பல்லறமுடையவொரு பரிணாமமாகும்.
    2014
    சுந்தரகுமார் கனகசுந்தரம் :- Good Evening.
    2014
    Rajaji Rajagopalan :- கருவறை தொடங்கிக் கல்லறையீறாக
    சில்லறையின்றிப் பெறும் தூயது…// காசில்லாமலே கிடைப்பது அன்பு ஒன்று மட்டுமே!
    2014
    Ramadhas Muthuswamy :- மிகவும் அருமை!!! அன்பிற்கு விலை பேசமுடியாது!!!
    அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் அன்பர்காள்
    இன்பத்தை ஈட்டுதல் அன்பதே – பண்புடன்
    பாசமாய்ப் பார்த்திடும் பக்குவம் அன்பேதான்
    காசில்லாக் கண்ணிய மே!
    2015
    Rajendran Raju Raju:- India
    2015

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: