27. நாண்.

thammmil

 

 

நாண்.

(2004ல் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எழுதி வழமையான வானொலியில் நான் வாசித்த கவிதையிது. ” நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்”  பாடலின் தாக்கம். பிடித்த பாடலும் கூட)

நல்ல தமிழ்  நல்ல இலக்கணம்

நல்ல அறிவு  நல்ல அனுபவம்

நல்ல தகுதி நல்ல ஆய்வு

நனைத்து நடும் நற்றமிழ் நடவு!

நல்ல கவிதை விளைச்சல் கனவு!

நல்ல நம்பிக்கை உயர்த்தும் தரவு!

நற்றமிழ் நடவு கிறுக்கல் அல்ல!

நற்றமிழ் இலக்கணப் பொறுக்கல் அல்ல!

நானே திருத்தி நானே பொருத்தும் நாணே!

தமிழைத் திரிக்கும் நூல்!

ஏனோ நூலை அலைத்துக் குலைத்து

வானில் பட்டம் உயராது தடுக்கிறாய்!

அருவக்காற்றே நீ சாற்றிடு!

அருமைக்கவி இலக்கியம் கற்றாயா!

சுகந்தம் விரிக்கச் சுத்தம் செய்கிறாய்!

மகரந்தம்  பரப்பி இனம் பெருக்குகிறாய்!

சுந்தரக் கவிப்பட்டம் நானேற்றுவதாய்

சுகவாழ்வுச் சமூகப்பணி நீ செய்திடுவாய்!

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

24-4-2004.

Big Blue Divider

 

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  மே 24, 2013 @ 00:04:32

  நானும் நாணும் பொருத்தப்பட்ட அழகில்
  சொக்கிப்போனேன்
  நல்ல சிந்தனை நல்ல மொழி ஞானம்
  நல்ல அற்புதமான கவிதை
  “நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க”

  மறுமொழி

 2. Ramani S
  மே 24, 2013 @ 00:06:34

  நானும் நாணும் பொருத்தப்பட்ட அழகில்
  சொக்கிப்போனேன்
  நல்ல சிந்தனை நல்ல மொழி ஞானம்
  நல்ல அற்புதமான கவிதை
  “நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க”

  மறுமொழி

  • கோவை கவி
   மே 27, 2013 @ 08:19:00

   மிக மிக மகழ்ச்சியும், நன்றியும் சகோதரா வருகைக்கும், கருத்திற்கும்.
   மிக மகிழ்ச்சி.
   தங்கள் கருத்திடல் 2 ஆக 2 பெயரில் விழுகிறது. ஏனோ தெரியவில்லை.

   மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மே 24, 2013 @ 01:37:10

  இனிமையான பாடலின் தாக்கம் எங்கள் மனதையும் தாக்கி மகிழ்வித்தது… வாழ்த்துக்கள்… நன்றி…

  மறுமொழி

  • கோவை கவி
   மே 27, 2013 @ 08:20:41

   எனக்குத் தெரியும் தனபாலன் தாங்களும் ஓரு பாடல் பிரியர் என்று.

   மிக மிக மகழ்ச்சியும், நன்றியும் சகோதரா வருகைக்கும், கருத்திற்கும்.

   மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  மே 24, 2013 @ 02:58:52

  அருவக்காற்றே நீ சாற்றிடு!

  அருமைக்கவி இலக்கியம் கற்றாயா!

  சுகந்தம் விரிக்கச் சுத்தம் செய்கிறாய்!

  மகரந்தம் பரப்பி இனம் பெருக்;குகிறாய்!

  சுந்தரக் கவிப்பட்டம் நானேற்றுவதாய்

  சுகவாழ்வுச் சமூகப்பணி நீ செய்திடுவாய்!

  தென்றல் காற்றாய் தவழும் வரிகள் அருமை ..! பாராட்டுக்கள்..

  மறுமொழி

 5. கோமதி அரசு
  மே 24, 2013 @ 03:12:22

  சுகந்தம் விரிக்கச் சுத்தம் செய்கிறாய்!

  மகரந்தம் பரப்பி இனம் பெருக்;குகிறாய்!

  சுந்தரக் கவிப்பட்டம் நானேற்றுவதாய்

  சுகவாழ்வுச் சமூகப்பணி நீ செய்திடுவாய்!
  அழகாய் சொன்னீர்கள்.
  அருமையான கவிதை.

  மறுமொழி

 6. கோவை கவி
  மே 24, 2013 @ 15:11:05

  Arul Mozhi likes this..in FB
  Arul Mozhi:- அருவக்காற்றே நீ சாற்றிடு!

  அருமைக்கவி இலக்கியம் கற்றாயா!////அருமை

  மறுமொழி

 7. kuttan
  மே 24, 2013 @ 15:12:00

  அருமையான சிந்தனை வரிகள்

  மறுமொழி

 8. கோவை கவி
  மே 24, 2013 @ 15:18:40

  முத்து பாலகன்likes this.
  முத்து பாலகன்:-
  அருமை…

  மறுமொழி

 9. இளமதி
  மே 24, 2013 @ 16:43:26

  /// நற்றமிழ் நடவு கிறுக்கல் அல்ல!

  நற்றமிழ் இலக்கணப் பொறுக்கல் அல்ல!

  நானே திருத்தி நானே பொருத்தும் நாணே! ///
  மிகமிக அருமை சகோதரி!
  நானும் நாணும் மிகமிக அழகாகப் பொருத்தியுள்ளீர்கள்.
  வாழ்த்துகள்!

  மறுமொழி

 10. sasikala
  மே 25, 2013 @ 06:51:18

  நானே திருத்தி நானே பொருத்தும் நாணே!

  நானே நாணாகி நல்ல நல்ல வசந்தங்களை வீசிச் சென்றது. அருமைங்க.

  மறுமொழி

 11. Mrs.Mano Saminathan
  மே 25, 2013 @ 12:38:59

  தமிழுக்கு அழகிய மகுடம் சூட்டியிருக்கிறீர்கள்! மிக அழகிய கவிதை வேதா!

  சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அந்தப்பாடல் எந்தப்படத்தில் இடம் பெற்றது?

  மறுமொழி

 12. கவியாழி கண்ணதாசன்
  மே 25, 2013 @ 15:16:03

  நானே திருத்தி நானே பொருத்தும் நாணே!//தமிழுக்குப் பெருமைச் சேர்த்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்

  மறுமொழி

 13. seeralan
  மே 25, 2013 @ 22:12:54

  நற்றமிழ் நடவு கிறுக்கல் அல்ல!

  நற்றமிழ் இலக்கணப் பொறுக்கல் அல்ல!

  நானே திருத்தி நானே பொருத்தும் நாணே!

  என்னே ஒரு அழகிய வரிகள அருமை அருமை…..

  வாழ்த்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: