277. சோம்பல் மிகக் கெடுதி.

800px-apple_juice_with_3apples

*

சோம்பல் மிகக் கெடுதி.

*

சோலைவனக் கவி பாரதி அந்நாளில்

             சோம்பல் மிகக் கெடுதியென்றான் தாளில்.

சோம்பித் திரியேலென்று ஒளவை மொழிந்தாள்.

            சோதியை வாழ்வில் தருகின்ற வரிகள்!

சோதிடமோ வெனும் நம்பிக்கை வரிகள்!

             சோபனமா யிவை தொடரும் மொழிகள்.

*

அரைகுறைத் தூக்கம், ஓய்வற்ற முயற்சி

            வரையற்ற தூக்கம், முயற்சியற்ற சுழற்சி,

குறைந்த ஓய்வு, குளப்பச் சூழல்

           நிறைக்கும் உடலில் மயக்கம், சோர்வை,

சிறையிடும் உடலின் சில பகுதிச்செயலை.

           குறையாக்கும் நற் குடும்ப அழகை.

*

எறும்புச் சுறுசுறுப்பு தொலைந்து போகும்.

           ஏவல் மறந்துடல் எந்திர இயக்கமாகும்.

எரிச்சல் ஏணையிட்டு எக்காளம் போடும்.

           ஏனோ தானேவென்ற நிலையுருவாகும்.

எங்கோ மூலையில் சாய்ந்திடத் தோன்றும்.

            என்ன செய்திட்டால் உற்சாகம் தோன்றும்!!!

*

குளிர் நீரருந்தல், பழச்சாறு சுவைத்தல்,

            குளிர் நீராடல், வெளிக்காற்றி லுலாவல்,

களிப்பிசைக் குளியல், உடலியக்கம்

            எளிமையாய்  தருமே மனப் புத்துணர்வு.

வழிகள் பலதை வழக்கப் படுத்தவும்

             குழிக்குள் சோம்பல் குடங்கிப் படுக்கும்.

*

 

(சோபனம் – நன்மை, அழகு. குடங்கி – வளைந்து)

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

13-8-2005.

*

fruiti

 

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  மே 26, 2013 @ 23:48:19

  அனைவரும் மனதில் ஏற்றுக் கொள்ளவேண்டிய
  அருமையான கருத்தை மிக மிக அழகாகச்
  சொல்லிப் போனவிதம் மனம் கவர்ந்தது
  ஒவ்வொரு கவிதையிலும் கவிதை இன்பத்துடன்
  அரும்பொருட் சொற்கள் சிலவற்றை தங்கள்
  பதிவின் மூலம் அனைவரும் கற்றுக் கொள்ள முடிவது
  கூடுதல் சிறப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. b.ganesh
  மே 27, 2013 @ 01:47:06

  சோம்பல் கெடுதி என்பதை நயம்படச் சொன்னதோடு சுறுசுறுப்பாக இருக்கு என்ன தேவை என்பதையும் விண்டுரைத்த கவிதை மனம் கவர்ந்தது. அருமை!

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மே 27, 2013 @ 02:20:59

  சரியாகச் சொன்னீர்கள்…. வாழ்த்துக்கள் சகோதரி….

  மறுமொழி

 4. கவியாழி கண்ணதாசன்
  மே 27, 2013 @ 03:23:06

  சோம்பல் உடலுக்கும் மனதுக்கும் நல்லதல்ல அதை கவிதையாக்கியமை அருமை

  மறுமொழி

 5. sasikala
  மே 27, 2013 @ 06:08:15

  குளிர் நீரருந்தல், பழச்சாறு சுவைத்தல்,

  குளிர் நீராடல், வெளிக்காற்றி லுலாவல்,

  களிப்பிசைக் குளியல், உடலியக்கம்…
  சோம்பலெனும் நோய்க்கு மருந்தாக சொன்ன விடயங்கள் சிறப்புங்க.

  மறுமொழி

 6. seeralan
  மே 27, 2013 @ 17:11:20

  சோம்பல் கெடுதி என்று அழகாய் சொல்லி அதன் தீர்வுகளும் சொன்ன விதம் அருமை

  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. கோவை கவி
  மே 27, 2013 @ 19:27:45

  மிக மிக மகிழ்ந்தேன் சீராளன் உமது கருத்துக் கண்டு.
  மனமார்ந்த நன்றி. நன்றி.

  மறுமொழி

 8. Dhavappudhalvan
  மே 28, 2013 @ 10:58:00

  சோம்பலைக் கழிக்க, சுகமாய் வாழ, சுவையாய் நீரும், சுவையூட்டிக் கொடுத்திரே! நல்ல கருத்து சகோ.

  மறுமொழி

 9. பி.தமிழ் முகில்
  மே 28, 2013 @ 12:55:44

  சோம்பலின் தீமைகளையும், அவற்றை எதிர்கொள்ளும் வழிகளையும் அழகாய் எடுத்துக் கூறியுள்ளீர்கள் . கவிதை மிக அருமை.

  மறுமொழி

 10. கோவை கவி
  மே 28, 2013 @ 20:18:02

  மிக மிக நன்றி. தமிழ் முகில். கருத்துக் கண்டு. மகிழ்ந்தேன்.

  மறுமொழி

 11. கோமதி அரசு
  ஜூன் 01, 2013 @ 08:58:55

  குளிர் நீரருந்தல், பழச்சாறு சுவைத்தல்,

  குளிர் நீராடல், வெளிக்காற்றி லுலாவல்,

  களிப்பிசைக் குளியல், உடலியக்கம்

  எளிமையாய் தருமே மனப் புத்துணர்வு.//
  புத்துண்ர்வு கிடைக்க செய்ய வேண்டியவற்றை அழகாய் சொன்னீர்கள்.
  கவிதை அருமை. சோம்பி கிடத்தல் கெடுதி அதை போக்கி வளம் பெறுவோம்.
  நன்றி.

  மறுமொழி

 12. கோவை கவி
  மே 27, 2016 @ 09:14:22

  Kalaimahel Hidaya Risvi :-
  அரைகுறைத் தூக்கம், ஓய்வற்ற முயற்சி
  வரையற்ற தூக்கம், முயற்சியற்ற சுழற்சி,எறும்புச் சுறுசுறுப்பு தொலைந்து போகும்.
  ஏவல் மறந்துடல் எந்திர இயக்கமாகும்.குளிர் நீரருந்தல், பழச்சாறு சுவைத்தல்,
  குளிர் நீராடல், வெளிக்காற்றி லுலாவல்,
  களிப்பிசைக் குளியல், உடலியக்கம்
  எளிமையாய் தருமே மனப் புத்துணர்வு.
  வழிகள் பலதை வழக்கப் படுத்தவும்
  குழிக்குள் சோம்பல் குடங்கிப் படுக்கும்.கற்பனை சூட்டுக்கு
  கவிதை குளிர்சி
  தாகத்துக்கு
  பானம் வரட்சி போக்கும்
  வாழ்த்துக்கள் சகோதரி
  கவிதை அருமை பிடித்தவரிகள்
  பார்வைக்காய் தொட்டுள்ளேன் நன்றி
  May 27, 2013 at 8:42am · Unlike · 1

  Shankar Ngv :- அறுமையான பதிவு, இனிய கருத்துக்கள்
  May 27, 2013 at 8:50am · Unlike · 1

  Paval Rajadurai :- இனிய வணக்கம்..அருமையான பகிர்வு…..
  May 27, 2013 at 9:16am · Unlike · 2

  மறுமொழி

 13. கோவை கவி
  மே 27, 2016 @ 09:16:37

  Pena Manoharan:- பட்டுகோட்டையின் ‘தூங்காதே தம்பி துங்காதே’ வரிகலையும் தொட்டுச் சென்றிருக்கலாம்.வையையின் நல்வாழ்த்துக்கள்.
  May 27, 2013 at 9:36am · Unlike · 4

  Vetha Langathilakam:- @Pena Manoharan தாங்கள் தான் தொட்டு விட்டீர்களே! மிக்க நன்றி.
  May 27, 2013 at 10:02am · Like · 2

  Vetha Langathilakam :- நாயகி கிருஷ்ணா and Siva Rama Krishnan like this in கவிதை தோட்டம்.
  May 27, 2013 at 10:04am · Like · 1

  Menaka Subburathinam :- நெடுநீர் மறவி மடிதுயி னான்குங்
  கெடுநீரார் காமக் கலன்.
  எனும் வள்ளுவன் குறள் காண்க.
  சுப்பு தாத்தா.
  May 27, 2013 at 11:56am · Unlike · 3

  யாழ். இலக்கியக் குவியம் :- குளிர் நீரருந்தல், பழச்சாறு சுவைத்தல்,

  குளிர் நீராடல், வெளிக்காற்றி லுலாவல்,
  களிப்பிசைக் குளியல், உடலியக்கம்
  எளிமையாய் தருமே மனப் புத்துணர்வு. mm arumai .
  May 27, 2013 at 12:33pm · Unlike · 3

  மறுமொழி

 14. கோவை கவி
  மே 27, 2016 @ 09:18:51

  Rajaji Rajagopalan :- எறும்புச் சுறுசுறுப்பு தொலைந்து போகும்.
  ஏவல் மறந்துடல் எந்திர இயக்கமாகும்.
  எரிச்சல் ஏணையிட்டு எக்காளம் போடும்.
  ஏனோ தானேவென்ற நிலையுருவாகும்.
  எங்கோ மூலையில் சாய்ந்திடத் தோன்றும்.
  என்ன செய்திட்டால் உற்சாகம் தோன்றும்!!!..// குறைகளையும் சொல்லி குறைக்கு மருந்தையும் தந்திருக்கிறீர்கள் – சொல்லாலும் படத்தாலும். நன்றி, வேதா.
  May 27, 2013 at 4:29pm · Unlike · 2

  Abi Raj :- கவிதையினூடாக பயனுள்ள தகவல் நன்றி
  May 27, 2013 at 5:36pm · Unlike · 2

  Nalayiny Thamarachselvan :- அரைகுறைத் தூக்கம், ஓய்வற்ற முயற்சி
  வரையற்ற தூக்கம், முயற்சியற்ற சுழற்சி,
  குறைந்த ஓய்வு, குளப்பச் சூழல்
  நிறைக்கும் உடலில் மயக்கம், சோர்வை,
  சிறையிடும் உடலின் சில பகுதிச்செயலை.
  குறையாக்கும் நற் குடும்ப அழகை.
  May 27, 2013 at 5:51pm · Unlike · 2

  மறுமொழி

 15. கோவை கவி
  மே 27, 2016 @ 09:21:03

  Ganesalingam Ganes Arumugam :- இனிய மாலை வணக்கம்.
  May 27, 2013 at 6:58pm · Like

  Seeralan Vee:- சோம்பல் கெடுதி என்று அழகாய் சொல்லி அதன் தீர்வுகளும் சொன்ன விதம் அருமை
  வாழ்த்துக்கள்
  May 27, 2013 at 7:09pm · Unlike · 1

  Punitha Gangaimagan :- சோம்பலுக்கு சோம்பல் தந்து புத்துணர்வுக்கு பல வழிகள் சொல்லும் கவிதை மிக அருமை….
  May 28, 2013 at 3:57am · Unlike · 1

  Dhavappudhalvan Badrinarayanan A M :- சோம்பலைக் கழிக்க, சுகமாய் வாழ, சுவையாய் நீரும், சுவையூட்டிக் கொடுத்திரே! நல்ல கருத்து. வலையிலும் கருத்து பதித்து விட்டேன் சகோ.
  May 28, 2013 at 12:59pm · Unlike · 1

  Kalam Shaick Abdul Kader:- சோம்பல் என்னும் சாம்பலை விலக்கினால், அங்குத் திறமை என்னும் தீ உண்டாகும்!
  May 28, 2013 at 7:26pm · Unlike · 1

  Vetha Langathilakam :- Ellorukkum mikka nanry.God bless you all.
  May 29, 2013 at 9:12am · Like · 1

  Loganadan Ps :- அருமையான அறிவுரைப் பாடல்.
  May 29, 2013 at 6:26pm · Unlike · 1

  Sakthi Sakthithasan :- அன்பினிய சகோதரி,
  சோம்பல் எனும் ஒரு உணர்வினை விலக்க வேண்டியதன் அவசியத்தை திறம்பட வடித்துள்ளீர்கள் . வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி
  May 30, 2013 at 10:22am · Unlike · 1

  மறுமொழி

 16. கோவை கவி
  மே 27, 2016 @ 09:21:55

  Sivasuthan Sivagnanam *******
  மிகவும் பயனுள்ள தகவலை
  பாடலூடாக தந்துள்ளீர்கள் அம்மா .
  சிறப்பு .
  June 1, 2013 at 5:37pm · Unlike · 1

  கோவை தமிழ்பாலா · :- 8 mutual friends
  “களிப்பிசைக் குளியல்” எனக்குப் பிடித்தது தோழி! சுவைத்தேன்! வாழ்த்துக்கள்!
  June 4, 2013 at 8:28am · Unlike · 1

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: