கலையும் கற்பனையும் ( கைவினை). 9

P1040970

கலையும் கற்பனையும் ( கைவினை). 9

அது 1991 குழந்தைகள் பராமரிப்புப் படிப்பிலிருந்தேன். (1990 – 1993). டெனிஸ் மொழியில்  3 வருடப் படிப்பு.

 சங்கீதம் ஒரு பாடம்.

முழுவதும் பிள்ளைகள்  சம்பந்தமாகவே இருக்கும். செயல் முறைப் பாடமும் இருந்தது.

எக்ஸ்.90 எமது வகுப்பின் பெயர்.

அதில் தான் இந்த சங்கீதக் கருவியைச் செய்தேன். ஆசிரியை உதவினார். பலர் பெரிய டோலக் செய்தனர். நானே தான் எனக்கு – சிறிதாகத் தெரிவு செய்தேன். இதை வீட்டில் செய்ய முடியாது. மரம், மேலே போட்டு மூடும் தோல் இவைகள் உரிய இடங்களில் தான் எடுக்க முடியும். செமினாரியம் பெரும் நிறுவனமாதலால் வசதிகள் உண்டு.

நாம் வீட்டில் பாவிப்பதுண்டு ஒன்று சேர்ந்து இசைக்கும் போது.

drum

சிரட்டையை நன்கு சீவி மற்றைய சிறு கருவி செய்தது. அதன் பெயர் தெரியாது.

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

இப்பொது பேரனுடன் இருக்கும் போது ஏதும் வாசித்தால் அவரும் வந்து வாசிப்பார். புத்தகம் கிழிப்பார்.

நான் பென்சிலும் பேப்பரும் கொடுத்து விட்டால் கீறுவார்.

P1050004

மிகவும் ஆனந்தப் படுவார். கை தட்டி உற்சாகப் படுத்துவேன். விரல்கள் கட்டுப் பாட்டிற்குள் இல்லாததால் நேர் கோடான கீறல்கள் தானே ஆரம்பம்.

vethriart

பின்னர் ஓரளவு கட்டுப்பாடு வர வளைவுகள் வரும். எழுதுகோலைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்கள். இங்கு தான் எழுத்து எழுத வருகிறது.

இது போலவே நிறம் தீட்டும் விடயத்திலும். நிறத்துடன் முதலில் விளையாட விடுவது. கரத்தில் சாயத்தைப் பூசி ரீ சேட் பிறின்ட் பண்ணுவதுண்டு. அதை வீட்டிற்கு கொண்டு போய் காட்டி பெருமைப்படுவார்கள்.

இங்கு நீங்கள் காண்பது கைகள், விரல்கள் கட்டுப்பாடுடைய – நிறம் தீட்டும் பயிற்சி.

இப்படி வெற்றுக் கட்டங்களை அச்சடித்துக் கொடுப்போம்.

20031_1294791487068_1324105_n

கட்டத்திற்கு வெளியே நிறம் பூசுப்படாது நிறம் தீட்டிப் பழகுவார்கள்.

முயன்று பார்க்கலாம்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

29-5-2013.

crayon_line

29 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  மே 30, 2013 @ 01:21:00

  கலையும் கற்பனையும் ஒன்றை ஒன்று
  மிஞ்சும் அற்புதம்
  புள்ளிகளும் கோடுகளும்தானே அனைத்திற்கும்
  துவக்கம்,பிள்ளையார் சுழி’
  அதனை வெற்றிப்படமாக பதிவு செய்தமை
  வித்தியாசமாகவும் மனம் கவரும்படியாகவும் இருந்தது
  வருங்கால ரவிவர்மாவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  மே 30, 2013 @ 01:37:39

  செல்லத்திற்கு எனது வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. வை. கோபாலகிருஷ்ணன்
  மே 30, 2013 @ 01:45:42

  //மிகவும் ஆனந்தப் படுவார். கை தட்டி உற்சாகப் படுத்துவேன். விரல்கள் கட்டுப் பாட்டிற்குள் இல்லாததால் நேர் கோடான கீறல்கள் தானே ஆரம்பம்.//

  வெற்றிப்படம் அழகு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிக்ள்>
  ..

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  மே 30, 2013 @ 01:56:29

  கலையும் கற்பனையும் அருமை..பாராட்டுக்கள்…

  மறுமொழி

 5. அன்பு தோழி
  மே 30, 2013 @ 06:52:27

  அற்புதம்…வெற்றி செல்லத்திற்கு பாராட்டுக்களுடம் மனசு நிறைந்த வாழ்த்துக்கள் .

  மறுமொழி

 6. கோவை கவி
  மே 30, 2013 @ 08:57:30

  IN FB:-
  கயல்விழி சுப்ரமணியன் likes this..

  Rtn S Sankar Ganesh likes this.,,,in…kavithai sangamam 2.0

  மறுமொழி

 7. sasikala
  மே 30, 2013 @ 09:18:05

  கலையும் கற்பனையும் அழகு . வெற்றுக் கட்டங்களுக்கு வண்ணம் தீட்டியது அழகாக இருக்கிறது.

  மறுமொழி

 8. seeralan
  மே 30, 2013 @ 16:32:03

  இளமையில் கல்வி சிலையில் எழுத்தாம் …பேரனை இப்போதே கவனிக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் அவன் எதிர்காலம் சிறக்கவும் வாழ்வில் எல்லாவளமும் பெற்று வாழவும் உளமார வாழ்த்துகின்றேன்…..
  .[ பாட்டியின் அருமை இருப்பவனுக்கே தெரியும் ]

  மறுமொழி

 9. கோவை கவி
  மே 31, 2013 @ 15:50:38

  வித்யா லட்சுமி and Sathish Sämúråi like this. in கவிதை தோட்டம் FB.

  மறுமொழி

 10. கோமதி அரசு
  ஜூன் 01, 2013 @ 08:52:29

  வெற்றியின் வரைகலை அழகு.

  வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
  வாழ்கவளமுடன்.
  உங்கள் கைவேலை அருமை.

  மறுமொழி

 11. கோவை கவி
  ஜூன் 05, 2013 @ 12:26:47

  முத்து பாலகன் likes this. in தமிழ்ச் சங்கம் —-புலமைக்கு மட்டுமே – FB.

  முத்து பாலகன்:- அருமை அருமை

  மறுமொழி

 12. கீதமஞ்சரி
  ஜூன் 07, 2013 @ 00:28:08

  இசைக்கருவி அமைப்பு அற்புதம். பாராட்டுகள். வெற்றியின் படம் அழகு. அவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கும் படங்களைத் தொகுத்து அவன் பெரியவனானதும் பரிசளிக்கலாம். நமக்கே அவை மாபெரும் நினைவுத் தொகுப்பாக இருக்கும். வெற்றிக்குப் பாராட்டுகள்.

  மறுமொழி

 13. கோவை கவி
  ஜூன் 08, 2013 @ 07:17:47

  மிக்க நன்றி. கீதமஞ்சரி.
  மகிழ்ந்தேன். .ஆண்டவனாசி நிறையட்டும்.

  மறுமொழி

 14. பழனிவேல்
  ஜூன் 19, 2013 @ 12:54:07

  கலையும் கற்பனையும் அழகு .
  பயனுள்ள செய்தி…

  மறுமொழி

 15. இமா
  டிசம்பர் 01, 2013 @ 17:31:15

  //சிரட்டையை நன்கு சீவி மற்றைய சிறு கருவி செய்தது. அதன் பெயர் தெரியாது.// maracas

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 02, 2013 @ 09:35:31

   ஆம் சகோதரி மரக்காஸ். இதையும் செய்தேன் வீட்டில் உள்ளது . .
   அதன் தமிழ் தெரியவில்லை.
   தங்கள் வரவு, கருத்திடலிற்கு மிக மிக நன்றியும், மகிழ்வும்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 16. கோவை கவி
  மார்ச் 25, 2019 @ 14:50:32

  சிறீ சிறீஸ்கந்தராசா :- எதிர்கால ரவிவர்மனுக்கு வாழ்த்துக்கள்!!

  Vetha Langathilakam :- Thank you all and very good morning.

  Rajagulasingam Kanagasabai :- Ugal pillai nanraga varavendum.

  சங்கரன் ஜி :- அறுமையான பதிவு வாழ்த்துக்கள்

  Sakthi Sakthithasan :- வாழ்த்துக்கள் . சகோதரி

  சுந்தரகுமார் கனகசுந்தரம்:- வாழ்த்துகள்.

  Grastley Jeya:- வாழ்த்துக்கள்

  Ramadhas Muthuswamy.—- மிகவும் அருமையான ஆரம்பம்!!!

  Seeralan Vee:- இளமையில் கல்வி சிலையில் எழுத்தாம் …பேரனை இப்போதே கவனிக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் அவன் எதிர்காலம் சிறக்கவும் வாழ்வில் எல்லாவளமும் பெற்று வாழவும் உளமார வாழ்த்துகின்றேன்…..
  .[ பாட்டியின் அருமை இருப்பவனுக்கே தெரியும் ]

  Abira Raj :- வாழ்த்துக்கள்

  Rajaji Rajagopalan :- வேதா, இங்கே ஆச்சரியமான விஷயங்கள் நிறைய எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கைவினையில் உருவான மேளம் என்னை மிகவும் கவர்ந்தது. மரக்கோதின்மேல் Shell எருமை மாட்டுத் Buffalo தோலைப் பண்படுத்தி வரிந்து ஆணிகளால் அறைந்து முழுமையான மேளம் ஆக்கியிருக்கிறீர்கள். இந்தியர்கள் அழைப்பதுபோல் இதனை டோலக் எனக் கூறினீர்கள். இதுபோன்ற மேளத்தை ஆபிரிக்க கானாவைச் சேர்ந்த என் நண்பியின் தகப்பனார் வாசிக்கும்படி தந்தா. இதை அவர்கள் நாட்டில் Djembe என அழைப்பார்கள். இனி நீங்கள் செய்யும் அடுத்த மேளம் இந்த ஆபிரிக்க மேளம்போன்றே இன்னும் கூடிய உயிர்த்துடிப்புள்ள இசையைத் தருமென எதிர்பார்க்கிறேன். நன்றி

  Vetha Langathilakam அல்ல! அல்ல! இது செமினாரியத்தில் என் படிப்போடு சேர்ந்து செய்தது. இனி செய்யமாட்டேனே.
  ;யினும் தங்கள் ஊக்கவரிகளிற்கு மிக நன்றி. மகிழ்ச்சி.

  Sivasuthan Sivagnanam ***
  பாட்டியின் அரவணைப்பு இன்று காண்பது அரிது.
  அதன் பெறுமதி இங்கு தெரிகிறது அம்மா .

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- வாழ்த்துகள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: