278. அவலட்சண அருத்தம் அறியாது….

5059060-thirteen-singer-silhouettes-vector-illustration

இன்றைய காலத்தில் இளவயதினர் மேடையில் பாடுவதில் தமது திறமையை அபாரமாகக் காட்டி வருகிறார்கள். ஒருவரையொருவர் விஞ்சுவதாகத் திறமையைப் பகிருகிறார்கள். அவை மிக நன்றே. திறமையில் முன்னேறும் போது அறிந்தோ அறியாமலோ சில வேண்டத் தகாத விளைவுகளும் உருவாகத் தான் செய்கிறது. அப்படி என் மனதையுறுத்தியது…..

அவலட்சண அருத்தம் அறியாது….

மேடைப் பாடகர் பாடகிகளின்

பீடைக் கலாச்சாரமின்று

ஆடையுரித்ததாய் அசிங்கமாகிறது

இலட்சணமான குரல் மட்டுமல்ல

அவலட்சணமாகக் கைகளும் பாடுகிறது   (அவலட்சண)

குரலசைவின் பிரகாரப் படியாம்

தரமற்ற கையசைவால் பிரபலமாவாரோ!

அரமிட்டுச் சீவுகிறா ரழகை

குரங்குச் சேட்டையாய் விரிகிறது

விரசக் காட்சியாய் திரிகிறது.    (மேடைப்பாடகர்)

குருவிக்குத் தீனி போடுவதும்

அருவி நீரோட்டுவதும்,

வருவாயோ மாட்டாயோவென்பதும,

ஒருவரையறையில்லா வகையதுமாய்

பெருங் கலாட்டா அலட்சியமாய்!          (மேடைப்பாடகர்)

அழகாக ஆதியில் கண்டது

அளவோடு கையசைத்த ” எஸ்பியை”

அவரைப் பின் தொடர்ந்தவர்

அதிகப் பிரசங்கித் தனமானார்

அநாகரீகமாக அளவிலும் மீறுகிறார்

அந்தகோ! இன்னு மெப்படியாகுமோ!!!!!!    (அவலட்சண)

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

31-5-2013.

72

 

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 01, 2013 @ 06:01:01

  மனதையுறுத்திய (சில) அவலட்சணங்களும் உண்டு என்பதை வரிகளில் புரிகிறது….

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூன் 01, 2013 @ 06:45:47

  In FB :-
  Rajagulasingam Kanagasabai, Shara Shan and Pushpalatha Gopalapillai like this.

  Mikka nanry.

  மறுமொழி

 3. sasikala
  ஜூன் 01, 2013 @ 08:19:03

  வளரும் கலைஞர்கள் உணரவேண்டியவற்ற அழகாக சொன்னீர்கள்.

  மறுமொழி

 4. கோமதி அரசு
  ஜூன் 01, 2013 @ 08:46:17

  மனதையுறுத்திய கவிதை அருமை.…

  மறுமொழி

 5. கவியாழி கண்ணதாசன்
  ஜூன் 01, 2013 @ 09:24:42

  மேடைப் பாடகர் பாடகிகளின்
  பீடைக் கலாச்சாரமின்ற
  ஆடையுரித்ததாய் அசிங்கமாகிறது//உண்மைதான்

  மறுமொழி

 6. sujatha
  ஜூன் 01, 2013 @ 13:27:42

  மேடையில் ஏறிவிட்டால் புகழை தேடுவதான நினைப்பு. அதிலும்
  ”மேடைப்பாடகர்” பாடமுடியும் என்று குரலை வெளிப்படுத்துவது
  அழகானது. ஆனாலும் மேடையை அலங்கோலப்படுத்துவது இருக்கும் குரலையும் மட்டுமல்ல……”கவிதாயினி வேதா” வெளிப்படுத்திவிட்டீர்கள் கவிநயத்தில்…..சமுதாயம் திருந்த வேண்டும்.

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜூன் 01, 2013 @ 20:13:27

  Susi Sukanthan :-…..thiramayum arivum yaar seythaalum paaraata veadiyathu……pakkach saarbaanathilai…..poraamai irukka kudathu..but muneeralaaammmm…….

  Vetha ELangathilakam சிலர் செய்வது பார்க்கக் கன்றாவியாய் இருக்கிறதே!…..அதையன்றோ குறிப்பிடுகிறேன்….

  Chembiyan Valavan:- மேடைப் பாடகர் பாடகிகளின்
  பீடைக் கலாச்சாரமின்று
  ஆடையுரித்ததாய் அசிங்கமாகிறது குரலசைவின் பிரகாரப் படியாம்
  தரமற்ற கையசைவால் பிரபலமாவாரோ!
  அரமிட்டுச் சீவுகிறா ரழகை
  குரங்குச் சேட்டையாய் விரிகிறது
  விரசக் காட்சியாய் திரிகிறது. /// உண்மை அம்மா இதை பற்றி பேசினால் நம்மை பிற்போக்கு வாதி என்று கூட கூறுகின்றார்கள் . இந்த விரசம் பாடுபவரிடம் மட்டுமல்ல எழுதுபவரிடமும் விரிந்து பரந்து கிடப்பது மன வேதனையை தருகின்றது …

  மறுமொழி

 8. விமலன்
  ஜூன் 03, 2013 @ 15:07:35

  கல்சர் கவிதை/

  மறுமொழி

 9. seeralan
  ஜூன் 03, 2013 @ 20:02:09

  அருமையானதும் அவசியமானதுமான பதிவு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூன் 05, 2013 @ 12:13:19

  You and முத்து பாலகன் like this..in தமிழ்ச் சங்கம் —-புலமைக்கு மட்டுமே- FB

  முத்து பாலகன்:- அரை குறை ஆசைகளின் அவலட்சணங்கள் தான்

  மறுமொழி

 11. கீதமஞ்சரி
  ஜூன் 07, 2013 @ 00:32:04

  பாடும் பாடலையும் அல்லவா ரசிக்கமுடியாமல் தடைபோடுகின்றன அந்த அரைகுறை உடைகளும் ஆபாச அங்க அசைவுகளும். தீர்க்கமாயொரு கவிதை மூலம் அம்பலப்படுத்திவிட்டீர்கள் பெரும்பான்மையோரின் ஆதங்கத்தை. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 12. பி.தமிழ் முகில்
  ஜூன் 08, 2013 @ 00:39:48

  சீர்கெட்டு வரும் சமுதாயத்தின் அவலங்களை அழகாய் எடுத்தாண்டுள்ளீர்கள் கவியே …

  மறுமொழி

 13. பழனிவேல்
  ஜூன் 19, 2013 @ 13:07:42

  அவசியமான ஒன்றை அழகாக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்.

  மறுமொழி

 14. கோவை கவி
  ஜூன் 01, 2017 @ 08:50:46

  சிறீ சிறீஸ்கந்தராஜா :- அருமையான பதிவு அம்மா!! வாழ்த்துக்கள்!!
  1 June 2013 at 09:39 ·

  அருணாசுந்தரராசன்:- அவசியமானது வேதா! நன்று!!
  1 June 2013 at 09:52 ·

  Vetha Langathilakam :- Aruna.s nanry sir..You told your opinion.
  1 June 2013 at 09:59 ·

  Nadaa Sivarajah :- தெரியப்படுத்த வேண்டிய கருத்து ! அது எங்கள் கடமை .
  1 June 2013 at 10:11 ·

  Vetha Langathilakam :- sure…!Nada!…..Thank you….இப்படியும் கருத்துள்ளது அல்லது வெறுப்பேற்றுகிறதைக் கூறலாம்.
  அல்லது பெரும் நிபுணத்துவம் என்று தொடருமே….
  சமீபத்தில் ஓரு சிறுமியைபப் பார்த்துத் திகைத்து விட்டேன்.
  ஒழுற்காகத்தான் பாடி வந்தார். தீடிரொன மாற்றம் அது.
  இது தொற்றுக் காய்ச்சல் தான். ஆங்கிலோ இந்திய சுப்பா சிங்கர் தானே உதாரணம்……
  1 June 2013 at 10:17 ·

  Shankar Ngv :- unmaithaan manthil valikkirathu athuvum pengalanai ninaththaal
  1 June 2013 at 11:01 ·

  பட்டுக்கோட்டை பாலு :- இனிய வணக்கம் சகோ ..!தமிழகத்தில் கோவில் திருவிழா வென்றால் ..அக்காலத்தில் வள்ளி திருமணம் ….அரிச்சந்திரன் …நல்லதங்காள் போன்ற போன்ற சமூக நாடகங்கள் அரங்கேறின ..!ஆனால் இன்று …அதே திருவிழாக்களில் பழைய காலத்தில் நடந்த ரிக்கார்ட் டான்ஸை ..ஆடல பாடல் என்ற பெயரில் …அரங்கேற்றி ..மக்களின் மனதில் ஒரு விரும்பத் தகாத கலாச்சாரத்தை அரங்கேற்றுகின்றனர் .பாலுணர்வை தூண்டும் அளவுக்கு ..விரசமான ஆடைகள் அணிந்து …விரசமான பாடல்களுக்கு பாடும் அவல நிலை இப்போது …இங்கே அதிகம் ..!இந்த ஆடல பாடல் நிகழ்ச்சி ..இப்போது எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அரங்கேறுகிறது …மக்களின் மனமும் அதை நோக்கி திரும்புகிறது …!
  உங்களின் பதிவு வரவேற்கத் தக்கது !வாழ்க வளமுடன் !
  1 June 2013 at 13:56

  மறுமொழி

 15. கோவை கவி
  ஜூன் 01, 2017 @ 08:53:49

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan இனிய படைப்பு
  1 June 2013 at 18:20 ·
  Abira Raj :- அருமையான பதிவு
  1 June 2013 at 20:00 ·
  சரவண பாரதி :- நற்கருத்து அம்மா !
  செவியை இனிக்கசெய்ய வேண்டியவர்கள் ,
  கண்ணை கவர்வதாய் எண்ணி
  கரங்களையும் அங்கங்களையும்
  கன்றாவியாய் அசைப்பது இசையை கொலை செய்வது போலாகும் !!!
  நளினம் வேண்டுமென்றால் நாட்டியம் கற்று ஆடட்டும் !!!
  அரைவேக்காடுகள் தப்பைத்தானே மீண்டும் மீண்டும் செய்யும் !!!
  2 June 2013 at 05:42 ·
  Loganadan Ps :- நல்ல அறிவுரை. உண்மையும் கூட
  2 June 2013 at 13:22 ·
  கவிஞர் தாரை கிட்டு:- அம்மா அருமையான அறிவுரை!கவியரசு மொழியில் சொல்வதானால் அறிந்தவர் அறிவாராக!!!!
  3 June 2013 at 20:31
  Seeralan Vee:- அருமையானதும் அவசியமானதுமான பதிவு வாழ்த்துக்கள்
  3 June 2013 at 22:01 ·
  Ramadhas Muthuswamy :- மிகவும் அருமையான பதிவு. பாடல் திறமை இருப்பினும் தெருவில் கீழ்த்தரமான விரசங்களால் நம் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது.
  8 June 2013 at 02:20 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: