20. அழகன் முருகன்

Image5

அழகன் முருகன்

 

 

மாதொருபாகன் மைந்தன் முருகன்

மாபெரும் கோபத்தில் வன்முறை செய்தான்.

மாம்பழம் கையில் சேராத முருகன்

மயிலேறிப்  பழனிமலைக்குப் பறந்தான்.

 

தெய்வயானையைத் தேவியாய் கொண்டும்

தெய்வக் காதல் சிருங்கார வன்முறையில்,

தொந்தியப்பனைத் துணையாய் கொண்டும்,

தெய்வச்செயலாய் வள்ளியை மணந்தான்.

 

மகாதேவன் மாதொருபாகன்

மாதிருபாகமாய் மகனவன் நிற்கிறான்.

மக்கள் வணங்கும் மயில்வாகனனவன்

சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலன்.

 

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ் டென்மார்க்.

4-9-2005.

 

 

peacock-feather-line[2]b

 

 

Advertisements

30 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஜூன் 04, 2013 @ 01:17:30

  அழகன் திருமுருகனின்
  திருவுருவப் படமும் அதற்கு
  அற்புத அழகிய விளக்கமாய் அமைந்த
  கவிதையும் அருமையிலும் அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 04, 2013 @ 01:22:08

  ஒரு கதையே சொல்லி விட்டீர்கள்…

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 06, 2013 @ 08:41:10

   பாருங்கள் தளபாலன்!
   எழுதிய ஆண்டை. எனக்கே ஆச்சரியமாக உள்ளது….நானா எழுதினேன் என்று.
   மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு.
   மிக மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 3. கவியாழி கண்ணதாசன்
  ஜூன் 04, 2013 @ 01:50:42

  அழகென்ற சொல்லுக்கு முருகா…விளக்கமும் படமும் அருமை

  மறுமொழி

 4. T.N.MURALIDHARAN
  ஜூன் 04, 2013 @ 01:53:35

  முருகன் பெருமையை அழகான கவிதையில் சொல்லிட்டீங்க

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  ஜூன் 04, 2013 @ 01:54:20

  மக்கள் வணங்கும் மயில்வாகனனவன்

  சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலன்.

  அழகான ஆக்கம் ..பாராட்டுக்கள்…

  மறுமொழி

 6. VAI. GOPALAKRISHNAN
  ஜூன் 04, 2013 @ 01:57:18

  அழகாகவே எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  மறுமொழி

 7. ranjani135
  ஜூன் 04, 2013 @ 04:49:32

  முருகு என்றால் அழகு என்று பள்ளியில் படித்த நினைவு. அந்த அழகன் முருகனுக்கு நீங்கள் சூட்டிய பாமாலையும் வெகு அழகு!
  படத்தில் வள்ளி, தேவானையுடன் முருகன் மிக மிக அழகு!

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூன் 04, 2013 @ 05:54:54

  FROM E’MAIL:_

  Sadhu Chandu

  அழகன் முருகன் அழகுக் கவிதை அவனைப் போலவே !

  மாதொரு பாகன் , மாதிரு பாகன் ….

  மிக ரசித்தேன்.

  வாழ்த்துக்கள். தொடர்க. ( Sravani)

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூன் 04, 2013 @ 14:54:14

  in ஒன்றே குலம் ஒருவனே தேவன் FB….
  Yashotha Kanth and Nalini Shunmugam like this..

  Yashotha Kanth:- அழகன் முருகன்

  அன்பு தோழி likes this….in…முப்பொழுதும் உன் நினைவுகள் – FB

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூன் 04, 2013 @ 15:00:34

  IN வித்யாசாகர்…Group..in….Fb

  Umah Thevi likes this…

  Devaki Kanna:- azhagenre solluku muruga..

  in ….கவிதை குழுமம் – Kavithai Kulumam

  சுதா கணேஷராஜா likes this.

  மறுமொழி

 11. இளமதி
  ஜூன் 05, 2013 @ 08:03:14

  அழகன் முருகனின் அற்புதமான படமும் அழகானவனுக்கு அழகான பாடலும் சகோதரி.
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 12. வெற்றிவேல்
  ஜூன் 05, 2013 @ 17:23:15

  எதுகை மோனை உட்பட அழகாக எழுதியுள்ளீர்கள்….

  அழகு…

  மறுமொழி

 13. கீதமஞ்சரி
  ஜூன் 07, 2013 @ 00:34:17

  அழகன் முருகனின் புகழ்பாடும் கவிதையும் அழகு. சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலன்… சிக்கல் உறையும் சிங்காரவேலன். வார்த்தைநயம் அசத்துகிறது. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 14. பி.தமிழ் முகில்
  ஜூன் 08, 2013 @ 00:50:09

  அழகன் முருகன் மீது அழகான பாடல் கவியே ….

  மறுமொழி

 15. பழனிவேல்
  ஜூன் 19, 2013 @ 13:14:29

  முருகன் – அழகு
  கவிதை – மிக அழகு

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: