9. வெற்றி நடை…..

P1050028

*

வெற்றி நடை…..

*

தத்தக்கா பித்தக்கா தளிர் நடை.

தத்தக்கா பித்தக்கா தளர் நடை.

முத்தக்கா வெற்றியின் முதல் நடை.

தித்தக்கா தையா மழலை நடை.

*

பஞ்சுப் பாதம் மெல்லக் கடிதாக

அஞ்சும் மனம் சிறு தயக்கமாக

குஞ்சுப் பாதம் எடுக்குதே சிற்றடி!

விஞ்சும் அழகில் மனது மயங்குதடி!

*

நீயாவலாய் எடுக்கும் அடி

தீ மிதிக்கும் நடையடி!

ஏனித்தனை தயக்கமடி!

ஏணிப்படியாய் ஏறும் உலகமடி!

*

கோகுலம் சிரிக்கக் கோகுலக்கண்ணனாயெம்

ஆகுலம் விரட்டும் ஆயர்பாடியிவன்

நீ குலம் சிறக்க வந்தாய்!

நற்குலமகனாய் நடப்பாய்!

*

(ஆகுலம் – துன்பம், மனக்கலக்கம். குலம் – குடும்பம், வீடு)

*

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

4-6-2013

*

footprints-blog-photo

 

Advertisements

36 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வை. கோபாலகிருஷ்ணன்
  ஜூன் 06, 2013 @ 07:25:47

  //விஞ்சும் அழகில் மனது மயங்குதடி!// ;)))))

  மிகவும் அழகான வெற்றி நடை. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. இளமதி
  ஜூன் 06, 2013 @ 07:34:47

  சின்னப்பாதம் சிவ்வெனத்தூக்கி
  சிங்காரமாய் நடந்து வந்தானோ பேராண்டி…

  அழகு… கவிதையும் பேரக்குட்டியும்!
  வாழ்த்துக்கள் இருவருக்கும்!

  மறுமொழி

 3. ramani
  ஜூன் 06, 2013 @ 08:21:58

  பேரனின் நடையழகையும்
  அதற்கான தங்கள் அழகு தமிழ்
  கவிதை நடையையும் கண்டு மகிழ்ந்தோம்
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 06, 2013 @ 08:40:26

  அழகு… அருமை… உங்கள் கவி நடையும்… ரசித்தேன்… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 5. kavignar ara
  ஜூன் 06, 2013 @ 08:49:26

  அருமை அருமை இனி மை இல்லா இடமே இல்லை என்ன சொல்ல ஏது சொல்ல ஆரா

  மறுமொழி

 6. ranjani135
  ஜூன் 06, 2013 @ 10:20:54

  வெற்றியின் நடை, பாட்டியின் கவி நடை மட்டுமல்ல அழகு.
  தனது ஒவ்வொரு செயலுக்கும் பேரன் பாட்டியிடமிருந்து கவிதை வாங்கும் சிறப்பும் அழகோ அழகு!

  பஞ்சுப் பாதம், குஞ்சுப் பாதம் – எல்லாமே விஞ்சும் அழகுதான்!
  வெற்றிக்கு ஆசிகள்!

  மறுமொழி

 7. Rajarajeswari jaghamani
  ஜூன் 06, 2013 @ 11:32:49

  வெற்றி நடை…..
  கவிநடை
  மடை திறந்த வெள்ளமென அழகு ..!

  மறுமொழி

 8. வெற்றிவேல்
  ஜூன் 06, 2013 @ 14:27:03

  கவி நடை அழகு….

  அதுகை, மோனையும் அழகு…

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூன் 06, 2013 @ 18:37:45

  Through E’mail:-

  //இன்பம் மயிலை ஆடவும்

  துன்பம் குதிரையை ஓடவும்// அருமை அருமை..கவிதையை ரசித்தேன் கோவைக்கவி அவர்களே, நன்றி!

  அன்புடன்,

  கிரேஸ்

  மறுமொழி

 10. கீதமஞ்சரி
  ஜூன் 07, 2013 @ 00:37:42

  அசத்தும் அழகுநடை… அழகு வெற்றிநடை… அருமைக் கவிதைநடை… குழந்தையின் தத்தக்கா பித்தக்கா நடையைப் போலவே தித்திக்கும் பாடல் வரிகள். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 11. கிரேஸ்
  ஜூன் 07, 2013 @ 04:48:28

  முதல் நடை வெற்றி நடை
  அதை அருமைக் கவியாக்கி விட்டீர்கள்

  மறுமொழி

 12. பி.தமிழ் முகில்
  ஜூன் 08, 2013 @ 00:55:17

  கிள்ளை எடுத்து வைத்த முதல் அடிக்கு,பாட்டியின் கவிதை அடிகள் அருமை !!!

  மறுமொழி

 13. sasikala
  ஜூன் 08, 2013 @ 05:34:45

  நீ குலம் சிறக்க வந்தாய்!

  நற்குலமகனாய் நடப்பாய்!

  வர்ணனைகளுடன் ஆசியும் தந்த வரிகள். அழகுங்க.

  மறுமொழி

 14. கோவை கவி
  ஜூன் 08, 2013 @ 05:48:33

  ஸ்ரீஸ்கந்தராஜா, Shankaran Gee and முத்து பாலகன் like this..

  முத்து பாலகன்:-
  வாழ்க வளமுடன்

  Mikka nanry….all of you.

  மறுமொழி

 15. தி தமிழ் இளங்கோ
  ஜூன் 10, 2013 @ 07:48:36

  ” நீ குலம் சிறக்க வந்தாய்!
  நற்குலமகனாய் நடப்பாய்! “
  தளிர்நடை, தளர் நடை, முதல் நடை, மழலை நடை – என்று பேரனின் நடையழகை வாயாரப் பாடிய கவிஞர் கோவை கவிக்கு வாழ்த்துக்கள்! பேரனுக்கும் வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 16. rajalakshmiparamasivam
  ஜூன் 18, 2013 @ 02:39:53

  உங்கள் கவிதையிலா? இல்லை உங்கள் பேரனின் நடை அழகிலா?
  எதுவோ ஒன்றில் என் மனம் கொள்ளை போனதே.
  (அட ,உங்கள் வலைதளத்திற்கு வந்ததும் நானும் மனம்… கொள்ளை என்று கவித்துவமாக(?) எழுத ஆரம்பித்து விட்டேனோ?

  மறுமொழி

 17. பழனிவேல்
  ஜூன் 19, 2013 @ 13:19:42

  “நீயாவலாய் எடுக்கும் அடி
  தீ மிதிக்கும் நடையடி!
  ஏனித்தனை தயக்கமடி!
  ஏணிப்படியாய் ஏறும் உலகமடி!”

  வெற்றியின் நடையை
  வெற்றி நடையாக்கிய
  தங்கள் கவிதை அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 20, 2013 @ 06:09:01

   சகோதரா 12 கடிதங்கள் கருத்தாக வந்திருந்த நாள். நானே ஊகித்திட்டேன் இது சகோ பழனிவேலின் விஐயம் என்று.
   கருத்திடலிற்கு மிக மகிழ்ச்சியும் மிக மிக நன்றியும் அன்புறவே.

   மறுமொழி

 18. கோமதி அரசு
  ஜூன் 20, 2013 @ 13:42:15

  கோகுலம் சிரிக்கக் கோகுலக்கண்ணனாயெம்

  ஆகுலம் விரட்டும் ஆயர்பாடியிவன்

  நீ குலம் சிறக்க வந்தாய்!

  நற்குலமகனாய் நடப்பாய்!//

  பேரனின் நடை கணடு களித்து ஆக்கிய கவிதை அருமை.
  பேரனுக்கு வாழ்த்துக்கள்.
  வெற்றி நடை போடு கண்ணே!

  மறுமொழி

 19. வே.நடனசபாபதி
  ஜூன் 23, 2013 @ 06:36:56

  தங்கள் பெயரனல்லவா! நிச்சயம் ஆகுலம் விரட்டி, உங்கள் குலம் சிறக்க வைப்பார். அவருக்கும் நல்ல கவிதை தந்த தங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: