21. அல்லாவே அல்லாஹ்!

Ka%92aba%20The%20House%20Of%20Allah%203

அல்லாவே அல்லாஹ்!

 

 

அல்லாவே அல்லாஹ்! அன்பின் இரட்சகரே!

அல்லாவிற் கிணை யாரு மில்லையே!

அன்புடை மனிதருக்காய் பூமியை விரித்தீர்!

அகண்ட வானத்தை ஒரு முகடாக்கினீர்!    (அல்லாவே)

 

அனைத்தையும் எமக்காய் அன்புடன் படைத்தீர்!

அழகு வானத்தால் மழையைத் தந்தீர்!

அதனால் பயிர்கள் கனிகள் எழுந்தன.

அரிய உணவாக அவைகளை யாக்கினீர்!   (அல்லாவே)

 

அல்லாவே உமது கொடையை மறவோம்.

அரிய நேர்வழியில் பின் தொடர்வோம்.

அற்புத உண்மைகளைப் பொய்யுடன் இணைக்கோம்.

ஆத்ம சாந்திக்காய் உம்மைத்  தொழுவோம்….(அல்லாவே)

 

 

 

 

பா  ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

24-9-2005.

 

 

divider1

 

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவியாழி கண்ணதாசன்
  ஜூன் 09, 2013 @ 07:23:39

  எல்லா புகழும் இறைவனுக்கே.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 09, 2013 @ 07:33:33

  அருமை… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 3. இளமதி
  ஜூன் 09, 2013 @ 15:16:36

  அனைத்தும் அவன் செயல்! ரசித்தேன்…
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 4. தி தமிழ் இளங்கோ
  ஜூன் 10, 2013 @ 07:57:49

  எம்மதமும் சம்மதம் என்ற பரந்த உள்ளம் கொண்ட சகோதரியின் மத நல்லிணக்கக் கவிதை!

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூன் 11, 2013 @ 05:49:13

  IN Fb முப்பொழுதும் உன் நினைவுகள்:_

  நாயகி கிருஷ்ணா, அன்பு தோழி and Shahul Hameed Basha like this..

  Vetha:- Thank you all.

  மறுமொழி

 6. பி.தமிழ் முகில்
  ஜூன் 12, 2013 @ 15:16:09

  அல்லாஹ்வின் மீதான பாமாலை அருமை கவியே….வாழ்த்துகள் !!!

  மறுமொழி

 7. பழனிவேல்
  ஜூன் 19, 2013 @ 13:29:17

  “அனைத்தையும் எமக்காய் அன்புடன் படைத்தீர்!
  அழகு வானத்தால் மழையைத் தந்தீர்!
  அதனால் பயிர்கள் கனிகள் எழுந்தன.
  அரிய உணவாக அவைகளை யாக்கினீர்! ”

  மிக அழகு…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 20, 2013 @ 06:11:56

   கருத்திடலிற்கு மிக மகிழ்ச்சியும் மிக மிக நன்றியும் அன்புறவே. பழனிவேல்.
   குர்ஆன் வாசித்த இனிய பாதிப்பு இக்கவிதை

   மறுமொழி

 8. கோமதி அரசு
  ஜூன் 20, 2013 @ 13:39:15

  கவிதை அருமை.

  மறுமொழி

 9. shivam
  ஜூன் 24, 2013 @ 13:33:53

  வணக்கம்

  கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
  நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

  ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

  இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், …. இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

  நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

  இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

  திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

  உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

  அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
  இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

  அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

  லிங்க்ஐ படியுங்க.

  http://tamil.vallalyaar.com/?page_id=80

  blogs

  sagakalvi.blogspot.com
  kanmanimaalai.blogspot.in

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 25, 2019 @ 15:11:33

  2014 year comments:-

  Kalaimahel Hidaya Risvi :- மற்றவர்கள் விடும் பிழைகளை கண்டு மனம் வலித்து வேதனைப் படும் நீங்களே பிழை விட்டால் ? நாம் என்ன சொல்வது
  ஆத்ம சாந்திக்காய் உம்மைத் தொழுவொம்….(அல்லாவே)
  தொழுவொம்அல்ல(தொழுவோம் )என்று வர வேண்டும்

  Vetha Langathilakam:- oh!……very good mikka mikka nanry.

  Loganadan Ps:- “கறுப்பில்லே வெளுப்புமில்லே கடவுற்கு உருவமில்லே – கடலுக்குள் பிரிவுமில்லை, கடவுளில் பேதமில்லை – முதலுக்கு அன்னை என்போம் – முடிவுக்கு தந்தை என்போம் – மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய்க் கூடுவோம்”

  Sakthi Sakthithasan :- அன்பான வாழ்த்துக்கள்

  சிறீ சிறீஸ்கந்தராசா :- எல்லா நதிகளும் கடலினைச்சேரும்!! எல்லா மதங்களும் இறைவனை நாடும்!! அற்புதமான பதிவு!! பகிர்வு!! வாழ்த்துக்கள் அம்மா!!

  Vetha Langathilakam :- இனிய மதிய வணக்கம். Nanry.

  Sivasuthan Sivagnanam :- எந்த மதமும் அன்பின் கடலிலே தான் சங்கமிக்கிறது .

  R Thevathi Rajan :- ஆண்டவன் என்பவனை வணங்க வேண்டும்…
  எப்படி யாரை என்பது மட்டுமே அவரவர்களின் வழிப்படி அமையும்..
  கடவுளினால் நெறிப்பட வேண்டும் மனிதன்… அதுதான் முக்கியம்.
  நல்லதொரு பதிவு…அதை பகிர்ந்த விதமும் அருமை… வாழ்த்துக்கள் தங்களுக்கு.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: