22. தூயவன் பாதம்.

lord-shiva-33h

தூயவன் பாதம்.

 

பிறைநிலவைச் சடையில் பின்னியவன்

நிறை கங்கையை உச்சியிலணிந்தவன்.

மறைமுதல்வன் பாம்பு மாலையாளன்

கறையான நீலகண்டம் அமைந்தவன்.  (பிறை)

நிலைகுலையும் நேரமென் நெஞ்சம்

அலையா தமைதி தரும் அமலன்!

உலையாதுலகோர் உயர்ந்து வாழ்ந்திட

விலையாகப் பக்தி மட்டும் விரும்புவான்.  (பிறை)

உமையொரு பாகமாயுலகை ஆள்பவன்.

இமைப் பொழுதுமென்னைத் தினமுமாள்பவன்

சுமையென பக்தனையெண்ணாத அற்புதன்.

நமையாளப் பற்றுவோம் தூயவன் பாதம்.  (பிறை)

 

(இலண்டன் தமிழ் வானொலியில் சகோதரர் சர்மா இசையமைத்துப் பாடியது.)

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

27-5-2005

unnamed

Advertisements

25 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. வை. கோபாலகிருஷ்ணன்
    ஜூன் 15, 2013 @ 08:08:10

    படங்களும், பாடலும் அழகு. பாராட்டுக்கள்.

    மறுமொழி

  2. ramani
    ஜூன் 15, 2013 @ 11:31:35

    அருமையான பாடல்
    ஒலி நாடா இணைக்கப்பட்டிருப்பின்
    இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ
    என்கிற ஆசையைத் தவிர்க்க இயலவில்லை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    மறுமொழி

  3. venkat
    ஜூன் 15, 2013 @ 12:28:54

    அருமையான பாடல். ரமணி ஜி சொன்னது போல ஒலி வடிவிலும் இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்…..

    மறுமொழி

  4. ranjani135
    ஜூன் 15, 2013 @ 14:17:34

    தூயவன் பாதம் துணை நமக்கே.

    இலண்டன் வானொலியில் பாடலாக இசையமைத்து பாடப் பெற்ற பாடலுக்கு பாராட்டுக்கள்!

    மறுமொழி

  5. திண்டுக்கல் தனபாலன்
    ஜூன் 15, 2013 @ 15:13:49

    பாடல் மிகவும் அருமை… சகோதரர் சர்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்…

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோதரி…

    மறுமொழி

  6. Rajarajeswari jaghamani
    ஜூன் 16, 2013 @ 08:07:04

    உமையொரு பாகமாயுலகை ஆள்பவன்.

    இமைப் பொழுதுமென்னைத் தினமுமாள்பவன்

    இனிதான ஆக்கம் ..பாராட்டுக்கள்..

    மறுமொழி

  7. jayarajanpr
    ஜூன் 16, 2013 @ 18:18:09

    ஆடல் கலையாளனுக்கு
    எதுகையில் பாடல்.
    பனிரெண்டு வரிகளை விட்டு
    கண்ணிரண்டு எங்கும் அகலவில்லை.

    மிக்க ரசித்தேன். நன்றி.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 20, 2013 @ 06:15:30

      ”..பனிரெண்டு வரிகளை விட்டு
      கண்ணிரண்டு எங்கும் அகலவில்லை. ..”
      Aaha!…ரசித்தேன்.
      கருத்திடலிற்கு மிக மகிழ்ச்சியும் மிக மிக நன்றியும் அன்புறவே.(jayarajanpr)

      மறுமொழி

  8. கோவை கவி
    ஜூன் 19, 2013 @ 06:12:23

    Sai Tukky likes this..in FB – கவிதை முகம்.

    Vetha ELangathilakam:-
    Mikka nanry.

    நாயகி கிருஷ்ணா and Sathish Sämúråi like this..in FB – கவிதை தோட்டம்.

    Vetha ELangathilakam:-
    Mikka nanry.

    மறுமொழி

  9. பழனிவேல்
    ஜூன் 19, 2013 @ 13:46:12

    “பிறைநிலவைச் சடையில் பின்னியவன்
    நிறை கங்கையை உச்சியிலணிந்தவன்
    மறைமுதல்வன் பாம்பு மாலையாளன்
    கறையான நீலகண்டம் அமைந்தவன்”

    அழகு

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 20, 2013 @ 06:13:41

      சகோதரா 12 கடிதங்கள் கருத்தாக வந்திருந்த நாள். நானே ஊகித்திட்டேன் இது சகோ பழனிவேலின் விஐயம் என்று.
      கருத்திடலிற்கு மிக மகிழ்ச்சியும் மிக மிக நன்றியும் அன்புறவே.

      மறுமொழி

  10. கோமதி அரசு
    ஜூன் 20, 2013 @ 12:59:33

    இமைப் பொழுதுமென்னைத் தினமுமாள்பவன்

    சுமையென பக்தனையெண்ணாத அற்புதன்.//
    தினமும் அவரை நினைப்போரை சுமையென நினைக்காதவர் அருமையாக சொன்னீர்கள்.

    அருமையான கவிதை.

    மறுமொழி

  11. sujatha
    ஜூன் 20, 2013 @ 17:10:59

    படத்துடன் கூடிய படலின் கவிநயம் சிவனை வழிபடவைத்துள்ளது. அருமை வாழ்த்துக்கள்!!!!!! ”கவிதாயினி வேதா”

    மறுமொழி

  12. தி தமிழ் இளங்கோ
    ஜூன் 22, 2013 @ 15:49:16

    அன்பு சகோதரி அவர்களுக்கு! ” தூயவன் பாதம். “ என்ற இந்த பாடலை சுப்புதாத்தா அவர்கள் மனம் உருகப் பாடியதோடு தனது வலைப்பதிவிலும் இணைத்துள்ளார். ஒரு தகவலுக்காக மட்டும். அவர் பதிவின் இணைப்பு இதோ:
    http://subbuthatha.blogspot.in/2013/06/arsha-vidhya-meditation-centre-at.html

    மறுமொழி

  13. kovaikkavi
    ஜூன் 23, 2013 @ 13:15:09

    சுப்பு தாத்தா ஏற்கெனவே முகநூலில் தனது பாடல் போட்டுள்ளார். (எனது வரிகளைப் பாடி).
    தகவலிற்கு மிக நன்றி. தங்கள் கருத்திற்கும் மிக மிக நன்றி மகிழ்ந்தேன்.

    மறுமொழி

  14. கோவை கவி
    ஜூன் 15, 2017 @ 10:37:16

    Ganesalingam Arumugam :- அழகான பாடல். கோயில் மணி ஓசையில் பதியப்பட்டிருக்கிறது. நன்றி வேதா.
    15 June 2013 at 15:41 ·
    Vetha:- Mikka nanry urave.

    Rajaji Rajagopalan :- இந்த அழகிய பாடலின் ஒலிக்கோப்பையும் தாருங்கள், இன்னும் இரசிக்கலாம்.
    15 June 2013 at 15:55

    Vetha Langathilakam:- in 2005 . sorry I don’t have that.
    15 June 2013 at 15:56 ·

    Shankar Ngv :- ஆண்டவனின் பாதங்களில் அறுமையான பாமாலை, இனிய வரிகள் வாழ்த்துக்கள்
    15 June 2013 at 16:13 ·

    Loganadan Ps:- “கங்கை அணிந்தவா – கண்டோர் தொழும் விலாசா – சதங்கை ஆடும் பாத வினோதா – லிங்கேஷ்வரா – நின் தாள் துணை நீ தா” – அருமை, அருமை!!!!
    15 June 2013 at 17:36 ·

    சிறீ சிறீஸ்கந்தராஜா :- மிக அற்புதமான படைப்பு!! வாழ்த்துக்கள் அம்மா!!
    15 June 2013 at 18:30

    இளம் பரிதியன்:- இனித்த பொற்பாத வாலறிவனை வழுத்தும் அழகிய வரிகள் வாழ்த்துகள் ……….
    15 June 2013 at 19:42 ·

    Verona Sharmila :- நிலைகுலையும் நேரமென் நெஞ்சம்
    அலையா தமைதி தரும் அமலன்! அருமை. வாழ்த்துகள்.
    16 June 2013 at 07:40 ·

    Meena Sury:- http://www.youtube.com/watch?v=nUd6p8AKSHs

    தூயவன் பாதம்.
    SHIVA STHUTHI COMPOSED BY MRS.VEDHA ILANGA THILAGAM SUNG…
    YOUTUBE.COM
    16 June 2013 at 18:44 ·

    Vetha Langathilakam :- தாத்தா மிக்க மிக்க நன்றி தாத்தா.
    தங்கள் முயற்சி ஊக்கம் போற்றற்கரியது.
    மிக மகிழ்ச்சி. இறையாசி நிறையட்டும்.
    மிக்க நன்றி.
    16 June 2013 at 20:24 ·

    Veena:- nice & super
    13 July 2013 at 10:55 ·

    மறுமொழி

  15. கோவை கவி
    ஜூன் 15, 2017 @ 10:37:37

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: