53. கவிதை பாருங்கள்(photo,poem)

 

 

374212_393374230759533_601523515_n[1]-a

 

 

தீண்டத் தகாத சினத்தை

நீண்ட காலமாய் கனத்து

பாண்டலாகத் தேக்கியுறவின்

மாண்பை உடைப்பதை நீக்கலாம்!

தோண்டத் தேண்ட எம்மை

மீண்டும் தாங்கும் நிலம்!

ஈண்டு மானிடம் மனிதம்

தாண்டி அருவருப்பின் விளிம்பில்!

(ஈண்டு – இவ்விடம். பாண்டல் – பூஞ்சணம் பிடித்து நாறல்)

 

 

one line

30 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தொழிற்களம் மின்னிதழ்
  ஜூன் 18, 2013 @ 07:35:24

  வாசிக்க அருமை….

  மறுமொழி

 2. இளமதி
  ஜூன் 18, 2013 @ 07:50:40

  ஆழ்ந்த கருத்து! சிறந்த சிந்தனை!
  ரசித்தேன். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • kovaikkavi
   ஜூன் 23, 2013 @ 13:25:16

   படம் கவிதை-வரியின் கருத்திற்கு மிக மிக நன்றியும், அதனால் மகிழ்ந்தேன் என்பதையும் தெரிவிக்கின்றேன் சகோதரி இளமதி..

   மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 18, 2013 @ 08:46:48

  அருமை சகோதரி… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 4. தி தமிழ் இளங்கோ
  ஜூன் 18, 2013 @ 10:00:11

  அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல – என்ற வள்ளுவன் வாக்கினுக்கு வடிவம் கொடுத்த போட்டோ கவிதை! (பாண்டல் – பூஞ்சணம் பிடித்து நாறல் . இங்கு எங்கள் ( திருச்சி ) பக்கம் ரொம்பவும் அழுக்காக இருப்பவனை “டேய் பாண்டை “ என்பார்கள் )

  மறுமொழி

  • kovaikkavi
   ஜூன் 23, 2013 @ 13:31:38

   நாமும் ”..என்ன பாண்டல் கதை கதைக்கிறாய்!”….
   ”..அவர்கள் பொல்லாத பாண்டல்கள்!..”…
   என்றெல்லாம் சர்வ சாதாரணமாகப் பெசுவோம் சகோதரரே- எமது ஊரில்.
   தங்கள் இனிய கருத்திடலிற்கு மிக மிக நன்றி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 5. பி.தமிழ் முகில்
  ஜூன் 19, 2013 @ 03:09:20

  கவிதை அருமை கவியே !!! வாழ்த்துகள் !!!

  மறுமொழி

 6. kovaimusarala
  ஜூன் 19, 2013 @ 05:07:07

  அருமையான பாடம் சொல்லும் கவிதை

  சினம் எப்போதும் சிதைத்துவிடும்
  உறவுகளை உணர்ந்தால்

  உன்னதம்

  மறுமொழி

 7. Dr.M.K.Muruganandan
  ஜூன் 19, 2013 @ 10:25:00

  “தீண்டத் தகாதது சினம்” மிக அருமையாகச் சொன்னீர்கள்

  மறுமொழி

 8. பழனிவேல்
  ஜூன் 19, 2013 @ 13:47:40

  “தீண்டத் தகாத சினத்தை”

  முதல்வரியே முத்திரை.
  மிகவும் ரசித்தேன்.

  மறுமொழி

 9. ranjani135
  ஜூன் 19, 2013 @ 16:33:08

  தீண்டத் தகாத சினத்தை கொண்டவன் மனிதம் தாண்டிய அருவருப்பின் விளிம்பில்.

  நன்றாகச் சொன்னீர்கள்.

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூன் 19, 2013 @ 17:26:33

  Yashotha Kanth likes this..in FB ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

  Yashotha Kanth:-
  தீண்டத் தகாத சினத்தை

  நீண்ட காலமாய் கனத்து

  பாண்டலாகத் தேக்கியுறவின்

  மாண்பை உடைப்பதை நீக்கலாம்!

  தோண்டத் தேண்ட எம்மை

  மீண்டும் தாங்கும் நிலம்!

  ஈண்டு மானிடம் மனிதம்

  தாண்டி அருவருப்பின் விளிம்பில்!/////////////////////அருமை அக்கா

  Vetha wrote:–
  mikka nanry sis…God bless you all.

  மறுமொழி

 11. jayarajanpr
  ஜூன் 20, 2013 @ 06:29:52

  Nice lines with profound meaning….

  மறுமொழி

 12. கோமதி அரசு
  ஜூன் 20, 2013 @ 12:49:56

  தீண்டத் தகாத சினத்தை//
  ஆம் , சினம் தீண்ட தகாத குணம் தான்.
  கவிதை அருமை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 13. sujatha
  ஜூன் 20, 2013 @ 17:06:57

  வம்சாவளிக்கு எடுத்துக்காட்டு உறவுகள். அதிலும் மனஸ்தாபங்கள் இடம் கொடுத்தாலும் உறவு அடிஅடியாய் நமக்கு வழிகாட்டி இங்கு கவிநயத்தில்
  பிரிவு தரும் வேதனையை அழகாக கவிநயத்தில் வெளிக்காட்டியிருக்கின்றீர்கள்
  ”கவிதாயினி வேதா” அருமை…….
  தீண்டத் தகாத சினத்தை

  நீண்ட காலமாய் கனத்து

  பாண்டலாகத் தேக்கியுறவின்

  மாண்பை உடைப்பதை நீக்கலாம்!

  மறுமொழி

 14. கீதமஞ்சரி
  ஜூன் 24, 2013 @ 02:39:13

  பொறுமையைத் தொலைத்துவிட்டு பொசுக்கென்று முகம் காட்டும் சினத்தில் தொலைத்துவிடுகிறோம் சுற்றத்தையும் சூழும் சிநேகத்தையும். அழகான கருத்துடன் மனம் தொட்ட கவிதை. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 15. கவிஞர் தாரை கிட்டு
  ஜூன் 29, 2013 @ 07:04:37

  தோணடத் தோணட எம்மை
  மீண்டும் தாங்கும் நிலம்!……….அருமையான சொல்லாட்சி,
  வாழ்த்துக்கள்! தொடரட்டும் கவிப்பயணம்!!

  மறுமொழி

 16. கோவை கவி
  ஜூலை 07, 2013 @ 08:11:59

  அன்பான கவிஞர் தாரை கிட்டு! இதயம் அள்ளும் தங்கள் கருத்தால் மிக மிக மகிழ்ந்தேன்.
  இனிய நன்றி…நன்றி…
  இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 17. கோவை கவி
  மார்ச் 25, 2019 @ 15:29:32

  2014 year comments:-

  Rajaji Rajagopalan :- பாண்டல் என்ற சொல்லைப் பக்குவமாய்ப் பயன்படுத்திய கவிதையை இன்றுதான் கண்டேன். உங்கள் பிடிக்கு அடங்காதது எதுவுமேயில்லை.

  சிறீ சிறீஸ்கந்தராசா:- “தோண்டத் தோண்ட எம்மை
  மீண்டும் தாங்கும் நிலம்!”
  ***** “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல…” அருமை வாழ்த்துக்கள்!!

  Mageswari Periasamy:- மீண்டும் மீண்டும் படித்தால் தான், மீண்டு வரும் என் தமிழறிவு. இந்தக் கவிதை வரிகளில் காணப்படும் சொற்றொடர்கள் எனக்கு புதிது ஆனாலும் சுவைக்கின்றது. அருமை தோழி.

  R Thevathi Rajan சினம் என்பதே வெறுக்கத்தக்க ஒதுக்கப்படவேண்டிய
  ஒன்று என்பதை அழகாக கையாடு இருக்கிறீர்கள்…
  அப்படி சினத்தை சேர்ப்பவர்களை அருவருக்கத்தக்க
  ஒரு உயிரில்லா பொருளை போன்று சொல்லி இருப்பது மேலும் சிறப்பு…
  தோண்டத்தோண்ட தாங்கும் பக்குவம்
  தாய்க்கு அடுத்தபடியாக சிறப்பு நிலத்திற்கே…
  தாயினை பிள்ளைகள் எப்படி வருத்தினாலும் வெறுப்பினை
  காரி உமிழ்ந்தாலும் பொறுமையோடு அப்பிள்ளையை வாழ்த்தும் ஒரே தெய்வம்…
  தாயின் பொறுமையும் மன்னிக்கும் பேராண்மையும்
  அத்தகைய பொறுத்தருளும் எண்ணம் கொண்ட மற்றொரு அன்னை பூமித்தாய்…
  கடவுளுக்கு இருப்பதே தாயின் உள்ளம்தானே
  அதனால் தானே இறைவனுக்கே தனிச்சிறப்பு யாருக்கும் இல்லாததாய்…
  வளரட்டும் வேதா அவர்களே… தங்களின் சீரிய எழுத்துப்பணி… பாராட்டுக்கள்..

  Vetha Langathilakam:- @ R.R.Gopalan……..பாண்டல் 2வது தடவையான பயன் என் எழுத்துப் பாதையில். மிக நன்றி தோழரே!.

  Vetha Langathilakam:- @ G.G.A Eniya kaalai vanakkam. Have a nice day.

  Vetha Langathilakam:- @R Thevathi Rajan….மிக நீண்ட கருத்து . மிக்க மகிழ்ச்சி சகோதரா.
  மிக்க நன்றி.

  Pushpalatha Gopalapillai:- ” அருமை வாழ்த்துக்கள்!!

  Verona Sharmila :- கவிதை வரிகள்..அருமை

  Loganadan Ps :- அபாரம். வாழ்த்துக்கள்

  Gowry Nesan :- காட்சியும் கவிதையும் அருமை!

  Yogi Yogi 111111111111111111111111111111111111111like arumaiyana vareegal

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: