15. நடிப்பற்ற கண்ணதாசன் வரிகள்.

1012648_394241854026106_678276515_n

நடிப்பற்ற கண்ணதாசன் வரிகள்.

(கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாளையொட்டி.)

 

சிந்தை நிறை கருத்துகள்

உந்துதலாய் உலகிற்கீந்தவர்

இந்தியப் புலத்து முன்மாதிரி

சந்தப் பா வாரிதி.

 

கிண்ணம் நிறை வரிகள்

எண்ணம் கிளறும் எளிமை

கண்ணதாசன் கருவிலுதித்த

வண்ண வரிகளின் திறன்.

 

கவி வரித் தூறல்

புவியெங்கும் சாரல்

செவியெங்கும் பாடல்

குவிவது தமிழ் கதிர்.

 

ஓவியமானவன் அறிவு மாட்சி

காவியங்களாக விரியும் நீட்சி.

சாவிலும் மறையாப் பாவாட்சி

தூவுகிறது விசுவரூப ஆட்சி.

 

கேட்கக் கேட்க வளர்கிறது.

படிக்கப் படிக்கச் சுவைக்கிறது.

வடிக்க வடிக்கத் தூண்டுகிறது

நடிப்பற்ற கண்ணதாசன் வரிகள்.

 

உறங்காதவன் உன்னத வரிகள்

கிறங்க வைக்கிறது எம்மை.

நிறங்குணமுடை  வரிகளால்

யாரும் இறங்கமாட்டார் என்றும் தமிழில்.

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

20-6-2013

(நிறங்குணம் – இயல்புடைய)

 

sunburst

 

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ranjani135
  ஜூன் 20, 2013 @ 07:10:14

  கவியரசருக்கு மிகச் சிறப்பாக ஒரு பாமாலை வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
  //சிந்தை நிறை கருத்துகள்
  உந்துதலாய் உலகிற்கீந்தவர்//

  //உறங்காதவன் உன்னத வரிகள்
  கிறங்க வைக்கிறது எம்மை.//

  வெகு சிறப்பு!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2013 @ 07:36:57

   மிக மிக நன்றி சகோதரி ranjani தங்கள் இனிய கருத்திடலிற்கு.
   மனம் மகிழ்தேன்.
   தங்கள் ஆதரவு நிறைவுடன என்னை மேலும் தூண்டுகிறது.

   மறுமொழி

 2. இளமதி
  ஜூன் 20, 2013 @ 07:40:19

  அழகிய பாமாலை. மிகவே ரசித்தேன்.
  காலத்திற்கும் அழியாத அவரின் கவிவரிகள் .

  வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2013 @ 07:37:52

   மிக மிக நன்றி சகோதரி இளமதி தங்கள் இனிய கருத்திடலிற்கு.
   மனம் மகிழ்தேன்.
   தங்கள் ஆதரவு நிறைவுடன என்னை மேலும் தூண்டுகிறது.

   மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 20, 2013 @ 08:36:56

  சிறப்பு…

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2013 @ 07:39:06

   மிக மிக நன்றி சகோதரா டி.டி தங்கள் இனிய கருத்திடலிற்கு.
   மனம் மகிழ்தேன்.
   தங்கள் ஆதரவு நிறைவுடன என்னை மேலும் தூண்டுகிறது.

   மறுமொழி

 4. கோமதி அரசு
  ஜூன் 20, 2013 @ 12:43:41

  கண்ணதாசன் அவர்களுக்கு பாமாலை மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2013 @ 07:39:59

   மிக மிக நன்றி சகோதரி கோமதி அரசு, தங்கள் இனிய கருத்திடலிற்கு. மனம் மகிழ்தேன்.
   தங்கள் ஆதரவு நிறைவுடன் என்னை மேலும் தூண்டுகிறது.

   மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  ஜூன் 20, 2013 @ 15:17:41

  இந்தியப் புலத்து முன்மாதிரி

  சந்தப் பா வாரிதி.

  அழகான பாக்கள்..பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2013 @ 07:43:01

   மிக மிக நன்றி சகோதரி R.J , தங்கள் இனிய கருத்திடலிற்கு. மனம் மகிழ்தேன்.
   தங்கள் ஆதரவு நிறைவுடன் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது.

   மறுமொழி

 6. sujatha
  ஜூன் 20, 2013 @ 20:43:47

  நீங்காத நினைவுகளை தொட்டு அவர் புகழ் தேடிய கவிநயம் அருமை” கவிதாயினி வேதா” உறங்காதவன் உன்னத வரிகள்

  கிறங்க வைக்கிறது எம்மை.

  நிறங்குணமுடை வரிகளால்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2013 @ 07:48:40

   மிக மிக நன்றி Sujatha , தங்கள் இனிய கருத்திடலிற்கு. மனம் மகிழ்தேன்.
   தங்கள் ஆதரவு நிறைவுடன் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது

   மறுமொழி

 7. தி தமிழ் இளங்கோ
  ஜூன் 21, 2013 @ 01:09:10

  தமிழால் தமிழர்களை மயங்க வைத்த
  கவியரசு கண்ணதாசனுக்கு
  தமிழ் பேசி தமிழை நேசிக்கும் தமிழாள்,
  பா வானதி வேதா. இலங்காதிலகம்.
  அவர்களின் அன்புக் கவிதை!
  சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2013 @ 07:47:31

   மிக மிக நன்றி சகோதரா தி தமிழ் இளங்கோ தங்கள் இனிய கருத்திடலிற்கு. மனம் மகிழ்தேன்.
   தங்கள் ஆதரவு நிறைவுடன என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது.

   மறுமொழி

 8. kovaikkavi
  ஜூன் 21, 2013 @ 20:24:07

  Kavignar Ara likes this…in FB தமிழ்ச் சங்கம் —-புலமைக்கு மட்டுமே..

  Kavignar Ara :-
  வாரி தி இனிமை ஆன சொல்லாட்சி ஈழப் பெருமகள்

  Kavignar Ara:- ஆமாம்

  Vetha ELangathilakam:-
  மிக்க நன்றி.
  இறையாசி நிறையட்டும்.

  கவிதை சங்கமம் likes this…in FB ˙·٠•●¤ۣۜ๘ கவிதைச் சங்கமம் ¤ۣۜ๘●•٠·˙.

  மறுமொழி

 9. T.N.MURALIDHARAN
  ஜூன் 22, 2013 @ 13:58:49

  கவியரசு கண்ணதாசனுக்கு அற்புத பாமாலை
  சிறப்பான கவிதை

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2013 @ 07:50:08

   மிக மிக நன்றி சகோதரா T.N.MURALIDHARAN தங்கள் இனிய கருத்திடலிற்கு. மனம் மகிழ்தேன்.
   தங்கள் ஆதரவு நிறைவுடன என்னை மேலும் தூண்டுகிறது.

   மறுமொழி

 10. தி தமிழ் இளங்கோ
  ஜூன் 22, 2013 @ 16:42:27

  அன்பு சகோதரி அவர்களுக்கு! ” தூயவன் பாதம். “ என்ற உங்களது பாடலை சுப்புதாத்தா அவர்கள் மனம் உருகப் பாடியதோடு தனது வலைப்பதிவிலும் இணைத்துள்ளார். ஒரு தகவலுக்காக மட்டும். அவர் பதிவின் இணைப்பு இதோ:
  http://subbuthatha.blogspot.in/2013/06/arsha-vidhya-meditation-centre-at.html

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2013 @ 07:50:43

   மிக மிக நன்றி சகோதரா தி தமிழ் இளங்கோ தங்கள் இனிய கருத்திடலிற்கு. மனம் மகிழ்தேன்.
   தங்கள் ஆதரவு நிறைவுடன என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது.
   Thank you.
   Thaththa gave the song in fb.

   மறுமொழி

 11. கீதமஞ்சரி
  ஜூன் 24, 2013 @ 02:36:03

  \\ஓவியமானவன் அறிவு மாட்சி

  காவியங்களாக விரியும் நீட்சி.

  சாவிலும் மறையாப் பாவாட்சி

  தூவுகிறது விசுவரூப ஆட்சி.\\

  மனங்கவர்ந்த வரிகள். அமரத்துவம் பெற்றக் கவிஞருக்கு அழகிய பாமாலை. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2013 @ 07:53:27

   மிக மிக நன்றி சகோதரி கீதமஞ்சரி தங்கள் இனிய கருத்திடலிற்கு. மனம் மகிழ்தேன்.
   தங்கள் ஆதரவு நிறைவுடன். என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது.

   மறுமொழி

 12. தாரை கிட்டு
  ஜூன் 24, 2013 @ 07:40:23

  கண்ணதாசனுக்கு தாங்கள் சூட்டிய பாமாலை
  காலத்தால் அழியாத கவிமாலை
  உள்ளத்தில் ஊற்றெடுத்த வார்த்தைகள்
  வெள்ளித் தட்டில் வைக்க வேண்டிய
  தங்கக் கட்டிகள்!வாழ்த்துக்கள் தாயே!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2013 @ 20:21:52

   மிக மிக நன்றி சகோதரா K.Kittu தங்கள் இனிய கருத்திடலிற்கு. மனம் மகிழ்தேன்.
   தங்கள் ஆதரவு நிறைவுடன என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது.

   மறுமொழி

 13. கவிஞர் தாரை கிட்டு
  ஜூன் 28, 2013 @ 03:38:23

  உறங்காதவன் உன்னத வரிகள்
  கிறங்க வைக்கிறது எம்மை,,,,,,,,,,,அற்புதமான வரிகள்
  மறைந்தும் வாழும் கண்ணதாசனுக்கு
  சிறந்த கவிதை எழுதிய சகோதரியே!
  வாழ்க நலமோடு! வளர்க தமிழோடு!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2013 @ 07:21:00

   மிக மிக நன்றி சகோதரா K.Kittu தங்கள் இனிய கருத்திடலிற்கு. மனம் மகிழ்தேன்.
   தங்கள் ஆதரவு நிறைவுடன என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது.

   மறுமொழி

 14. கோவை கவி
  ஜூன் 20, 2015 @ 06:47:15

  You, Verona Sharmila, Sakthi Sakthithasan, Mageswari Periasamy and 28 others like this.

  Ganesalingam Ganes Arumugam :-
  கிண்ணம் நிறை வரிகள்

  எண்ணம் கிளறும் எளிமை

  கண்ணதாசன் கருவிலுதித்த

  வண்ண வரிகளின் திறன்.

  இனிய காலை வணக்கம்.
  June 20, 2013 at 9:54am · Unlike · 2

  Vetha Langathilakam :- இனிய காலை வணக்கம். Nanry.
  June 20, 2013
  Grastley Jeya :-
  கவி வரித் தூறல்
  புவியெங்கும் சாரல் …
  புவியெங்கும் சாரல்
  செவியெங்கும் பாடல்
  குவிவது தமிழ் கதிர்.
  ஓவியமானவன் அறிவு மாட்சி
  காவியங்களாக விரியும் நீட்சி.
  சாவிலும் மறையாப் பாவாட்சி
  தூவுகிறது விசுவரூப ஆட்சி.
  June 20, 2013 at

  Kavignar Ara:- மலர்ந்தும்மலராத காலைத் தென்றல்
  June 21, 2013

  N G V Shankar :- arumai
  June 21, 2013
  Vetha Langathilakam :- mikka nanry to all of you.
  June 21, 2013

  சிறீ சிறீஸ்கந்தராஜா :- கம்பன்… பாரதி… என்ற வரிசையில் அடுத்து வருகிறார் கவியரசர்! இந்த நிலம் உள்ளவரை உன்னை நினைவு கொள்ளும்!! அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் அம்மா!!

  Skthi Sakthithasan:- அன்பினிய சகோதரி கவியரசரின் பிறந்தநாளையொட்டி அருமையான கவிதையீந்துள்ளீர்கள். நன்றிகளுடன் வாழ்த்துக்கள்
  June 25, 2013

  R Thevathi Rajan :- இயற்கையாய் அமைந்த

  வாசனைப் பூவில் முதன்மை பூவிது…

  யோசிக்கவேண்டிய அவசியமில்லை

  நினைத்த மாத்திரத்தில் கவிதைகள் வந்துவிழும்…

  அதை நாம் எடுத்து நேர்த்தியாக கோர்த்துகொண்டால்

  அத்தனையும் பார் போற்றும் அர்த்தமுள்ள பாடல்களாய் எல்லோரும் கேட்க…

  அப்பேற்பட்ட கண்ணதாசனை போற்றிக்கொண்டே இருக்கலாம் அப்படித்தான் தங்களின்

  அற்புத வரிகளும் அளவோடு கூற நினைத்தாலும் அளவில்லா ஒன்றாக முடியும்…

  தங்களின் கவியும் விண்ணைத்தாண்டி செல்ல அன்பான வாழ்த்துக்கள்…
  June 25, 2013

  Verona Sharmila:-கவி வரித் தூறல்
  புவியெங்கும் சாரல்
  செவியெங்கும் பாடல்
  குவிவது தமிழ் கதிர்.அற்புதமான பதிவு
  June 26, 2013

  Vetha Langathilakam:- I am happy !Thank you all of you.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: