279. கொண்டாட்டம்! கொண்டாட்டம்!…

536178_414904491928653_1727899092_n

கொண்டாட்டம்!  கொண்டாட்டம்!…

பொங்கல், புது வருடம், தீபாவளித் திருநாளில்

பொங்கிய பால் சோறு, பட்சணப் பொதிகளுடன்

எங்கள் புத்தாடையை உறவினரிற்குக் காட்டுமார்வம்

எங்கள் சிறு வயதுக் கொண்டாட்டம்.

முற்றத்து மாமரப் பெருங்கொற்றக் குடை நிழலில்

முற்றிப் புடைத்த வேர் சிம்மாசனத்தில்

சுற்றிச் சொரியும் மாம்பூத் தூறலில்

நெற்றி மயிர் கோதும் தென்றலாற் கொண்டாட்டம்.

எழுத்துருக்கள் நூலுருவின் பரிணாமம் கொண்டாட்டம்.

இழுத்து வரும் பரபரப்பு இதயத்துள் வண்டாட்டம்.

அழுத்தும் நூல்விநியோக நிலைமை திண்டாட்டம்.

கொழுத்திடலாம் வாசிப்புச் சுடர் குன்றாட்டம்.

கானல் நீர் கண்டோடும் கன்றாட்டம்

காணாத உறவுத் தொடர்பு கொண்டாட்டம்

காரியம் நிறைவேறு மங்கீகாரம் கொண்டாட்டம்

நேரிய வாழ்முறையில் நித்தம் பல கொண்டாட்டம்.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

22-10-2005.

(கொற்றம் – அரசியல்)

Ranjany Narayanan’s line:-

உங்கள் கவிதை படித்தால் எங்கள் மனங்களில் கொண்டாட்டம்!

floral-divider_9_lg236

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  ஜூன் 23, 2013 @ 08:02:13

  நேரிய வாழ்முறையில் நித்தம் பல கொண்டாட்டம்.

  கொண்டாட்டமான பதிவு ..!

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 23, 2013 @ 08:10:45

  கொண்டாட்டம்… கொண்டாட்டம்… எங்கள் மனதிலும்…!

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 3. கோமதி அரசு
  ஜூன் 23, 2013 @ 11:40:45

  கானல் நீர் கண்டோடும் கன்றாட்டம்

  காணாத உறவுத் தொடர்பு கொண்டாட்டம்

  காரியம் நிறைவேறு மங்கீகாரம் கொண்டாட்டம்

  நேரிய வாழ்முறையில் நித்தம் பல கொண்டாட்டம்.//

  நேர்மையான வாழ்வில் கொண்டாட்டடத்திற்கு என்ன பஞ்சம்.!
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 4. b.ganesh
  ஜூன் 23, 2013 @ 15:53:21

  வாழ்வை ரசித்தால், மனிதர்களை நேசித்தால் தினம் தினம் கொண்டாட்டம்… நேரிய வாழ் முறையில் நித்தம் பல கொண்டாட்டம் என்ற ஒற்றை வரியே அழுத்தமாய் மனதில் நின்றுவிட்டது வேதா சிஸ்! சூப்பர்!

  மறுமொழி

 5. jayarajanpr
  ஜூன் 23, 2013 @ 17:46:00

  //நேரிய வாழ்முறையில் நித்தம் பல கொண்டாட்டம்.//

  வாழ்வு நேரியதாக இருந்தால் நித்தமும் கொண்டாட்டம்தான்… வாழ்த்துகள்…

  மறுமொழி

 6. விமலன்
  ஜூன் 23, 2013 @ 19:17:15

  கொண்டாடங்கள் என்றுமே சந்தோசம் அளிப்பவையே/

  மறுமொழி

 7. கீதமஞ்சரி
  ஜூன் 24, 2013 @ 02:33:23

  \\முற்றத்து மாமரப் பெருங்கொற்றக் குடை நிழலில்

  முற்றிப் புடைத்த வேர் சிம்மாசனத்தில்

  சுற்றிச் சொரியும் மாம்பூத் தூறலில்

  நெற்றி மயிர் கோதும் தென்றலாற் கொண்டாட்டம்.\\

  பால்யத்தின் வசந்தகாலத்துக்கு இழுத்துச்சென்ற வரிகள்.

  நேரிய வாழ்வில் நித்தமும் கொண்டாட்டம் என்னும் வரிகளில் உண்டு வாழ்க்கையின் இனிமை ரகசியம். ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடி மகிழ்வோம். அற்புதக் கவதைக்குப் பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 8. பி.தமிழ் முகில்
  ஜூன் 24, 2013 @ 16:25:11

  “காரியம் நிறைவேறு மங்கீகாரம் கொண்டாட்டம்

  நேரிய வாழ்முறையில் நித்தம் பல கொண்டாட்டம்.”

  உண்மையான வரிகள் கவியே.மிகவும் இரசித்தேன்.

  மறுமொழி

 9. ranjani135
  ஜூன் 30, 2013 @ 17:15:15

  உங்கள் கவிதை படித்தால் எங்கள் மனங்களில் கொண்டாட்டம்!
  இதையும் கவிதை வரியில் சேர்த்திடுங்கள், சகோதரி!

  மறுமொழி

 10. பழனிவேல்
  ஜூலை 04, 2013 @ 07:31:21

  “காரியம் நிறைவேறு மங்கீகாரம் கொண்டாட்டம்
  நேரிய வாழ்முறையில் நித்தம் பல கொண்டாட்டம்.”

  ஆம். நிதர்சனமான உண்மை.
  அழகு கவியும் கருத்தும்.

  மறுமொழி

 11. கோவை கவி
  ஜூலை 07, 2013 @ 08:20:57

  மிக்க நன்றி சகோதரா பழனிவேல் தங்கள் வருகைக்கும் வாழ்த்து வரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இறை அருள் கிட்டட்டும்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: