44. மையல் மார்பு.

945855_504314762973090_173215489_n

மையல் மார்பு.

 

 

வஞ்சம் அற்று அள்ளியீவது.

கஞ்சமற்றுத் திரும்பப் பெறுவது.

தஞ்சமெனும் சிந்தனைச் சரணமது

நஞ்சற்று விரியும் காதலமுது.

 

மஞ்சுக்குள் ளேகும் மார்பி னுணர்கை

பிஞ்சு இளமைப் பஞ்சணை மென்மை.

அஞ்சு முணர்வுக் கைபிடியில் மார்பை

விஞ்சும் நிழற் குடைச் சிறகெனலாம்.

 

காதற் தேரோட்ட மைதானம், பொது

கூதலுணர்வுக் கிதமான இட மிது.

ஆதரவுக் கனவுச் சாய்விட மென்பது

ஆழ்ந்த பெருமூச்சு வாரியிறக்கும்  மார்பது.

 

படம் வரையு மாசைப் பலகையிது.

மடம், மலர் பஞ்சணைக்கு நிகரிது.

உடலுமுயிரு மிணைந்து  படரு மரங்கிது.

திடமான காதலிதயத் தடுப்புச் சுவரிது.

 

இடந்தரத் தழுவு மின்ப அணுக்கமது

படர்த்தும் நேச மேடை யிது

மையல் மார்பின் ஆழ மென்பது

மைத்தடங் கண்ணாளும் அறியாதது.

 

 

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

25-6-2013

 

(அணுக்கம் – நெருக்கம்)

 

lord_krishna

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 25, 2013 @ 08:17:43

  ஆகா… எத்தனை சிறப்பு… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூன் 25, 2013 @ 11:02:19

  வணக்கம்
  சகோதரி

  அருமையான கவிதை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 3. கவியாழி கண்ணதாசன்
  ஜூன் 25, 2013 @ 13:25:18

  இளைமை ! இனிமை! தனிமை.உண்மைதான்

  மறுமொழி

 4. இளமதி
  ஜூன் 25, 2013 @ 14:03:09

  அழகிய கவிதை சகோதரி!
  காதல் ரசம் ததும்பிநிற்கின்றது.
  உணர்வோட்டமான வரிகள்!
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 5. கோமதி அரசு
  ஜூன் 26, 2013 @ 01:27:01

  கவிதை அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 30, 2013 @ 18:21:57

   தங்கள் கருத்திடலிற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.
   தங்கள் பக்கம் வந்தேன் நீண்ட காலமாக ஆக்கங்கள் போடலில்லைப் போலும்.

   மறுமொழி

 6. கோவை கவி
  ஜூன் 26, 2013 @ 06:05:59

  IN FB – தமிழ்ச் சங்கம் —-புலமைக்கு மட்டுமே

  Kavignar Ara:- arumai arumai arumai

  25 ஜூன், 2013 11:55 PM அன்று, Vetha ELangathilakam <

  முத்து பாலகன்:- அருமை…

  Kavignar Ara:- mikka arumai aa irukku thilagam

  Elagnairu Malarkal likes this…in கவிதை முகம் – FB

  நாயகி கிருஷ்ணா and Sathish Sämúråi like this….in FB கவிதை தோட்டம்.

  மறுமொழி

 7. Mrs.Mano Saminathan
  ஜூன் 26, 2013 @ 17:23:07

  கவிதை மிக அருமை! அதற்கான ஓவியம் மிகவும் அழகு!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 30, 2013 @ 21:53:47

   தங்கள் ஓவியக் கருத்து அருமை.
   நன்றி.
   தங்களது ஓரு பெண்ணின் ஓவியம் பார்த்தேன் என்ன அருமையாக சித்தரித்து உள்ளீர்கள்.
   இனிய வாழ்த்து.

   மறுமொழி

 8. கீதமஞ்சரி
  ஜூன் 27, 2013 @ 06:14:29

  மையலோடு மார்புசாயும் இதம் தந்தது இன்தமிழோடு கவிவாசிக்கும் கணம். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 9. கவிஞர் தாரை கிட்டு
  ஜூன் 29, 2013 @ 07:18:34

  ”மையல் மார்பின் ஆழமென்பது
  மைத்தடங் கண்ணாளும் அறியாதது”

  கடலாழத்தையும் கன்னியரின்
  மன ஆழத்தையும் காணமுடியாத
  கவிஞர்களும் கூட இந்த
  “ மையல் மார்பாழம்” படித்து
  உங்கள் கவியாழமறிவர்.

  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 10. பழனிவேல்
  ஜூலை 04, 2013 @ 07:29:41

  இன்தமிழும்
  இளங்கவியும்
  இதம்தந்தது.

  மறுமொழி

 11. கோவை கவி
  ஜூன் 25, 2017 @ 07:48:18

  கவிஞர் தாரை கிட்டு:- மனசின் பாரம் குறைக்கும் மார்பில் சோகம் மறையும்!
  25 June 2013 at 10:47 ·

  Nadaa Sivarajah:- மார்பின் மடி மகிழ்வின் குடி !
  25 June 2013 at 10:50 ·

  Shankar Ngv:- மார்பில் சாய்வதால் மனமும் மகிழும், நெருக்கமும் கூடும்
  25 June 2013 at 11:07 ·

  Grastley Jeya :- படம் வரையு மாசைப் பலகையிது.
  மடம், மலர் பஞ்சணைக்கு நிகரிது.
  உடலுமுயிரு மிணைந்து படரு மரங்கிது.
  திடமான காதலிதயத் தடுப்புச் சுவரிது.
  25 June 2013 at 11:38 ·

  Loganadan Ps :- காதல் என்றாலே கவிதைகள் தானாக வருமே. தெரியாமலா சொன்னார்கள் – “காதற் பெண்டிர் கடைக்கண் வீச்சில் காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்” என்று. அருமை. வாழ்த்துக்கள்
  25 June 2013 at 11:49 ·

  மறுமொழி

 12. கோவை கவி
  ஜூன் 25, 2017 @ 07:56:16

  Pushpalatha Gopalapillai :- மிகவும் அருமையான வரிகள் வாழ்த்துக்கள்…
  25 June 2013 at 12:03 ·
  Ganesalingam Arumugam :- படம் வரையு மாசைப் பலகையிது.

  மடம், மலர் பஞ்சணைக்கு நிகரிது.

  உடலுமுயிரு மிணைந்து படரு மரங்கிது.

  திடமான காதலிதயத் தடுப்புச் சுவரிது……………………….

  இனிய மதிய வணக்கம்…..
  25 June 2013 at 12:20 ·
  Rishaban Srinivasan:- காதற் தேரோட்ட மைதானம், பொது
  கூதலுணர்வுக் கிதமான இட மிது.
  ஆதரவுக் கனவுச் சாய்விட மென்பது
  ஆழ்ந்த பெருமூச்சு வாரியிறக்கும் மார்பது.
  🙂 அழகு.
  25 June 2013 at 14:11 ·

  Mageswari Periasamy :- அழுத்தமான தமிழில் அருமையான வரிகள். ஆனாலும் இரு தடவைக்கு மேல் படித்தபிறகுதான் என் சிற்றறிவுக்கு எட்டியது. நானும் இப்படி எழுதப் பழ்குகிறேன். நன்றி சகோதரி.
  25 June 2013 at 15:53 ·

  சிறீ சிறீஸ்கந்தராஜா :- அருமையான சொல்லாட்சி!! வாழ்த்துக்கள் அம்மா!!
  25 June 2013 at 17:21 ·

  Natarajan Mariappan :- மையல் மார்பின் ஆழமென்பது
  மைத்தடங் கண்ணாலும் அறியாதது .
  Vov..
  அழகோ அழகு!. தொடரட்டும் உங்கள் சொற்காலம்
  26 June 2013 at 03:38 ·

  மறுமொழி

 13. கோவை கவி
  ஜூன் 25, 2017 @ 08:00:35

  Vetha Langathilakam :- தங்கள் கருத்துகளால் (அனைவரது) மனம் மகிழ்ந்தேன்.
  மிக்க நன்றி. மற்றையவர்களின் கருத்துகளையும் எதிர்பார்த்த படி….
  26 June 2013 at 08:42

  Verona Sharmila :- காதற் தேரோட்ட மைதானம், பொது
  கூதலுணர்வுக் கிதமான இட மிது.
  ஆதரவுக் கனவுச் சாய்விட மென்பது
  ஆழ்ந்த பெருமூச்சு வாரியிறக்கும் மார்பது.அருமை,அழகு..
  26 June 2013 at 12:11

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- அருமையான படைப்பு
  26 June 2013 at 17:41

  Abira Raj :- இடந்தரத் தழுவு மின்ப அணுக்கமது
  படர்த்தும் நேச மேடை யிது
  மையல் மார்பின் ஆழ மென்பது
  மைத்தடங் கண்ணாளும் அறியாதது./// அருமை
  26 June 2013 at 22:05 ·

  Gowry Nesan :- மிக அருமை!
  28 June 2013 at 23:34 ·

  Sivasuthan Sivagnanam:- // காதற் தேரோட்ட மைதானம், பொது

  கூதலுணர்வுக் கிதமான இட மிது.

  ஆதரவுக் கனவுச் சாய்விட மென்பது

  ஆழ்ந்த பெருமூச்சு வாரியிறக்கும் மார்பது. // நேசத்தின் அழகு நெஞ்சை கொள்ளை கொள்கிறது …..
  30 June 2013 at 14:13 ·

  Sivasuthan Sivagnanam :- மார்பு – மனப் பாரங்களை ஒத்திப்போடும் தற்காலிக தலையணை ……
  30 June 2013 at 14:13

  கோபால் கண்ணன் :- அழகோ அழகு.
  30 June 2013 at 17:16

  Abdulla Deen :- nalll kavithai
  1 July 2013 at 10:08 ·

  Sakthi Sakthithasan :- அன்பின் சகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள்
  2 July 2013 at 17:43 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: