23. அங்கிங்கெனாதபடி…..

023

அங்கிங்கெனாதபடி…..

(ஒரு தடவை யெர்மன் ” பூவரசு”..இதழ் தந்த தலைப்பிற்கு எழுதிய கவிதை – 2004ல்)

 

அங்கிங்கெனாதபடி அண்ட சராசரமும்

தங்கித் துலங்கிடும் தங்க மயிலோனே முருகா!

 

பொங்கி விரவும் துணிவும்

மங்காது விரியும் புகழும்

தங்கிடும் பொருளும் உயர்வும்

கங்கையாய் என்னொடு கலக்க

மங்களமாய் அருள்வாய் இறைவா!

எங்கள் பரம்பொருளே முருகா!         (அங்கிங்கெனாதபடி)

 

பயமும் கவலையும் என்னுள்

சுயம்பு ஆகாது விலகிட

வியனுறு நம்பிக்கை உயர்ந்திட

பயனுறு நலம் பெருகிட

நயமுறு அறிவு வளர்ந்திட

நயம் தருவாய் முருகா!                   (அங்கிங்கெனாதபடி)

 

அன்பு, பண்பு உயர்ந்திட

இன்பம், திண்மை வளர்ந்திட

வன்மை வறுமை ஒழிந்திட

திருமிகு தாய்மண் இணைந்திட

திருப்தியாய் தமிழோடு வாழ்ந்திட

திருவருள் தருவாய் முருகா!.            (அங்கிங்கெனாதபடி)

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

12-12-2004

(விரவும்- கல, பொருந்து. சுயம்பு – தானாக உண்டானது.

வியனுறு-சிறப்பு, வியப்புடை. திண்மை- வலிமை, உறுதி.)

 

 

 

peacock-feather-line[2]b

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 28, 2013 @ 01:40:58

  திருப்தியாய் தமிழோடு வந்த வரிகள் அனைத்தும் அருமை…

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 2. T.N.MURALIDHARAN
  ஜூன் 28, 2013 @ 02:26:26

  முருகன் அழகு. அவனைப் புகழும் பாடலும் அழகு

  மறுமொழி

 3. கோமதி அரசு
  ஜூன் 28, 2013 @ 02:37:38

  இன்று நாங்கள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கிறோம்.உங்க/ளின் தளத்தில் முருகனிம் புகழ் பாமாலை மகிழ்ச்சியை அளித்தது.
  நன்றி சகோதரி.,

  மறுமொழி

 4. பி.தமிழ் முகில்
  ஜூன் 29, 2013 @ 00:04:26

  அழகன் முருகன் மீதான பாமாலை அருமை கவியே !!! இறைவனது அருள் என்றும் தங்களுக்கு கிடைக்கட்டும் !!!

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூன் 30, 2013 @ 06:15:59

  நாயகி கிருஷ்ணா and Sathish Sämúråi like this….in FB – கவிதை தோட்டம்.

  Vetha saying:- mikka nanry. both of you.

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  ஜூன் 30, 2013 @ 06:31:06

  பயனுறு நலம் பெருகிட

  நயமுறு அறிவு வளர்ந்திட

  நயம் தருவாய் முருகா!

  நயமான கவிதை.. பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 7. ranjani135
  ஜூன் 30, 2013 @ 17:17:01

  முருகனிடம் என்ன ஒரு அழகான பிரார்த்தனை!
  ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்தேன்!

  மறுமொழி

 8. கீதமஞ்சரி
  ஜூலை 03, 2013 @ 01:39:14

  \\திருமிகு தாய்மண் இணைந்திட

  திருப்தியாய் தமிழோடு வாழ்ந்திட

  திருவருள் தருவாய் முருகா!. \\

  சட்டென்று நெஞ்சம் உருக்கிய வரிகள். அந்தக் கந்தவேளின் கருணையால் வேண்டியவை யாவும் ஈடேறட்டும் விரைவில். அன்பு வாழ்த்துக்கள் தோழி.

  மறுமொழி

 9. பழனிவேல்
  ஜூலை 04, 2013 @ 07:24:25

  “அன்பு, பண்பு உயர்ந்திட
  இன்பம், திண்மை வளர்ந்திட
  வன்மை வறுமை ஒழிந்திட
  திருமிகு தாய்மண் இணைந்திட
  திருப்தியாய் தமிழோடு வாழ்ந்திட”

  தமிழ்,தாய்மண்,தமிழ்கடவுள்.
  நல்ல சிந்தனை.
  நேசித்து வாசித்தேன்.

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூலை 07, 2013 @ 08:24:13

  திருப்தியாய் தமிழோடு வந்த வரிகள்
  மனம் நிறைந்த நன்றியும், மகிழ்வும். சகோதரா பழனிவேல்

  மறுமொழி

 11. கோவை கவி
  மார்ச் 25, 2019 @ 16:14:19

  2014 year comments:-

  கவிஞர் தாரை கிட்டு :- பழனியாண்டவா உனக்கு பஞ்சாமிர்த சுவைக் கவிதை!

  Abira Raj :- அருமை வாழ்த்துக்கள்

  Dhavappudhalvan Badrinarayanan A M:- “பயமும் கவலையும் என்னுள்
  சுயம்பு ஆகாது விலகிட ” அருமை. வாழ்த்துக்களும் இனிய காலை வணக்கமும் Sago.

  Vetha Langathilakam Nanry – இனிய காலை வணக்கம்!

  சிறீ சிறீஸ்கந்தராசா :- அருமையான பாடல்… இசைகூட்டி… மெட்டமைத்து வெளியீடு செய்தால் நல்லது.. வாழ்த்துக்கள் அம்மா!!

  N.Rathna Vel :- அருமை. நன்றி.

  சங்கரன் ஜி :- அறுமையான பதிவு

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: