21. வேதாவின் மொழிகள். 21.

akam

வேதாவின் மொழிகள். 21.

வாழ்க்கை என்பது பயிற்சி. தாழ்ந்திடா உடன்பாட்டுயர்ச்சி

வெற்றிப் படியின் முயற்சி.

வாழ்க்கை சிறந்த நூலகம். வாழ்க்கையொரு போராட்ட மைதானம்.

(வாழ்க்கையொரு சவால் மைதானம்.)

வாழ்க்கை:- முயற்சியின் தொகுப்பு. உறவுகளின் இணைப்பு. அனுபவ அணிவகுப்பு. நவரசக் கலகலப்பு.

வரிகள் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ, டென்மார்க்.

2-7-2013

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஜூலை 02, 2013 @ 07:50:49

  வேத மொழிகளை நினைவுறுத்தும்
  எங்கள் வேதாவின் மொழிகள்
  ஆழமான கருத்துடன் கூடிய பகிர்வுக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. Dr.M.K.Muruganandan
  ஜூலை 02, 2013 @ 10:01:06

  சுருக்கமான செறிவான கவிதை வரிகள்
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 02, 2013 @ 13:37:48

  சகோதரியின் மொழிகள் என்றும் அருமை…

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 4. இளமதி
  ஜூலை 02, 2013 @ 16:32:04

  மிக மிக அருமை ஒவ்வொன்றும்.
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  ஜூலை 02, 2013 @ 16:42:52

  வாழ்க்கையொரு சவால் மைதானம்
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 6. Mrs.Mano Saminathan
  ஜூலை 02, 2013 @ 18:45:01

  வலைத்தளம் மூன்று ஆண்டுகள் நிறைவானதற்கும் நான்காவது ஆண்டின் தொடக்கம் சிறப்பானதாக அமைந்து வழி நெடுக இனிமையாக செல்வதற்கும் மனம் நிறைந்த இனிய நல் வாழ்த்துக்கள் வேதா!

  அகம் அழகாக இருப்பதற்கு நல் அன்பு என்றும் அனைவருக்கும் துணையாகட்டும் உங்கள் கவிதை மொழிகள் போல!

  மறுமொழி

 7. கீதமஞ்சரி
  ஜூலை 03, 2013 @ 01:42:03

  அகம் அழகாக்கும் அழகிய வரிகளின் பகிர்வுக்கும் வாழ்க்கை நலம் சிறப்பிக்கும் வரிகளின் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தோழி.

  மறுமொழி

 8. கோமதி அரசு
  ஜூலை 03, 2013 @ 05:52:49

  வாழ்க்கை:- முயற்சியின் தொகுப்பு. உறவுகளின் இணைப்பு. அனுபவ அணிவகுப்பு. நவரசக் கலகலப்பு.//

  உண்மை, உண்மை.
  கவிதை அருமை.

  மறுமொழி

 9. ranjani135
  ஜூலை 03, 2013 @ 12:06:52

  குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று ஒரு சொலவடை இருக்கிறது, இல்லையா?
  மிக அருமையாக அகத்தை அழகாக்க வழி சொல்லியிருக்கிறீர்கள்.

  மறுமொழி

 10. கவியாழி கண்ணதாசன்
  ஜூலை 03, 2013 @ 15:24:04

  வேதாவின் கட்டளைகள் என்றாலும் சரியாத்தான் இருக்கும்

  மறுமொழி

 11. பழனிவேல்
  ஜூலை 04, 2013 @ 07:19:16

  “வாழ்க்கை என்பது பயிற்சி.
  தாழ்ந்திடா உடன்பாட்டுயர்ச்சி
  வெற்றிப் படியின் முயற்சி.”

  வேத மொழிகள் அருமை.
  பணி தொடரட்டும்.

  மறுமொழி

 12. கோவை கவி
  ஜூலை 07, 2013 @ 08:06:41

  அன்பான பழனிவேல்! இதயம் அள்ளும் தங்கள் கருத்தால் மிக மிக மகிழ்ந்தேன்.
  இனிய நன்றி…நன்றி…
  இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 13. கோவை கவி
  மார்ச் 25, 2019 @ 16:39:59

  செ. இரா. செல்வக்குமார் :- அருமையாக இருக்கின்றது! “தாழ்ந்திடா உடன்பாட்டுயற்சி.” என்பது உயர்ச்சி என்று இருக்கவேண்டும். சிறு தட்டச்சுப் பிழை. உயர்தல் உயர்ச்சி.
  2014
  செ. இரா. செல்வக்குமார் :- தவறாக நினைக்காதீர்கள், ஓகுச என்பதும் ஓகுஸ என்பது அத்தனை வேறுபாடு உடையதா? கொசு, பசி, வாசி, தேசியம், பாசி, கூசு என்று எத்தனையோ காற்றொலி சகர ஒலிப்புகள் தமிழில் உண்டே. ச்ச என்று வந்தால் சகரம் வலித்து ஒலிக்கும் (பச்சை, கொச்சை, மொச்சை, காய்ச்சல், மேய்ச்சல்).… ஞ்ச என்று வந்தால் மூக்கொலியோடு சகர ஒலிப்பு கிட்டும் (பஞ்சு, கொஞ்சு, தஞ்சம், கஞ்சன்). ஆனால் முன்னே சகர ஒற்றோ, ஞகர ஒற்றோ வராமல் முதல் எழுத்தாகவும் வராமல் இருந்தால் காற்றொலி சகர ஒலிப்பே. எனவே ஒகுச என்று எழுதினால் பிழை அன்று. இதே போல முனைவர் பரமசிவம் போன்ற இலக்கண ஆசிரியர்கள் “Denmark” என்பதைத் “தென்மார்க்கு” என்றே தெளிவாகக் குறித்துள்ளார்கள். தென்மார்க்கு என்றே எழுதலாம். கேக் என்று எழுதினால் க் என்பதன் ஒலி வெளியே வரவே வராது. ஒரு குற்றியலுகரம் அல்லது குற்றியல் உயிரொலி இட்டால்தால் க் என்பதன் ஒலி கிட்டும். தமிழ் ஒலிப்பொழுக்கம் உள்ள மொழி. எனவே கேக்கு என்று எழுதுவதே சரி (கடைசியில் வரும் கு முழு உகரம் அன்று. ககர மெய்ய்யெழுத்தை ஒலிக்கும் அளவான சிறிய உயிரொலி). தமிழில் வல்லின மெய்யெழுத்துகள் கடைசி எழுத்தாக வருதல் கூடவே கூடாது. அறிவியலின் படியும் அதனை ஒலிக்கவே முடியாது (துணையாக சிறிய கடைசி குற்றியல் உயிரொலி இல்லாமல்). எனவே -க்கு, -ச்சு, -ட்டு, -த்து, -ப்பு -ற்று என்றுதான் எழுதுதல் வேண்டும். டாப் என்றால் மூடிய இதழ்களால் ப் ஒலி வெளிவராது. டாப்பு என்றால் டாப்பூஊ ஊ என்று நீட்டுதலும் கூடாது 🙂 நுணுக்கமாக குற்றியல் உயிரொலியுடன் முடிக்க வேண்டும். இவை கருத்துப்பகிர்வுக்காக. நாமே நம் அறிவார்ந்த மொழி நுணுக்கங்களைப் பேணவில்லை எனில் பின் யார் பின் பற்றுவார்கள்? அருள்கூர்ந்து இக்கருத்துகளை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். தங்கள் எழுத்து சிறப்பாக இருக்க வேண்டும், என்பதற்காக நட்புணர்வுடனும் அன்புடனும் பகிர்கின்றேன்.
  2014
  Vetha Langathilakam :- மிக்க நன்றி சகோதரா. அத்தனை உரிமையும் உள்ளது. திருத்த.
  உயர்ச்சி. – நன்றாகத் தெரியும் அப்படியே படித்தேன் 26 வருட டெனிசு மொழியால் இப்படித் தடுமாற வந்தது.
  திருத்த முயற்கிக்கிறேன் ( படத்தில் எழுதியது.)
  மிக்க நன்றி சகோதரா. அத்தனை உரிமையும் உள்ளது. திருத்த.
  உயர்ச்சி. – நன்றாகத் தெரியும் அப்படியே படித்தேன் 26 வருட டெனிசு மொழியால் இப்படித் தடுமாற வந்தது.
  திருத்த முயற்கிக்கிறேன் ( படத்தில் எழுதியது.)Edit or delete this
  மிக்க மகிழ்வும் பெருமையுமடைந்தேன் தாங்கள் கவனித்துத் திருத்தியதற்கு. இன்னும் எதிர்பார்ப்பேன் நன்றி.. நன்றி சகோதரா..(செ. இரா. செல்வக்குமார்)
  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: