49. மலைக்குழந்தை.

tibet

மலைக்குழந்தை.

 

 

நதி தானே தனக்கும்

குதித்து வழி சமைக்கும்.

சுதியுடன் கரை சமைக்கும்.

குதித்தோடும் நீர்ப் பாலம்.

நதி மலையின் தூதாம்.

 

வித்தையாடும் நீரின்  சலசலப்பு

தத்தோமென ஓடும் வியப்பு.

பொத்தெனப் பாய்தலும் மலைப்பு.

பொத்தவியலா அழகுச் சிரிப்பு.

தித்திக்கும் காட்சி வனப்பு.

 

ஆவினப் பால் நுரையாடை

மீனினம் நிறையோடை.

மானினம் நீரருந்து மோடை.

மானிட நாகரீக வாடை

மேனிலைக்கு வளர்த்த ஓடை.

 

மலையரசன் பட்டுச் சால்வையாம்

வனப்பெண் காற்சலங்கையாம்.

அலைச்சடுகுடு ஆடும் தெய்வீகம்.

விலையிலாக் கலைநிகர் கங்கை.

பூமிமார்பினற்புதப் புத்தோவியம்.

 

எத்தனை ஆச்சரிய முலகின்

அத்தனை உயிர்களிற்கும் வாழ்வீயும்

தத்துவப் பிறப்பு நதி

சத்துடை பன்முகப் பரிணாம

வித்துடை மலைக் குழந்தையே!

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

4-7-2013.

(சுதி – இசைச் சுருதி)

(இக் கவிதை 9-7-2013 செவ்வாய்க் கிழமை மாலை (19.00-20.00) ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலியில்

கவிதை பாடும் நேரத்தில் என்னால் வாசிக்கப் பட்டது.)

 

bar6_anm

Advertisements

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 05, 2013 @ 00:45:02

  அழகான கவி வரிகள் மனதை கவர்ந்தன… படமும் அருமை… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 2. ramani
  ஜூலை 05, 2013 @ 02:07:29

  குதித்தோடும் நதியுடன் இணைந்து நீந்தி
  களித்த சுகம்தன்னை தங்கள்
  கவிவரிகளோடு தொடர்ந்து அனுபவித்தோம்
  இயலபாக அமைந்து கவிதைக்கு
  சுவை கூட்டிய இயைபுத் தொடை
  தங்கத்தில் பதித்த வரம்
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  ஜூலை 05, 2013 @ 02:18:25

  மலைக்குழந்தை மனம் கவருகிறது ..!

  மறுமொழி

 4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 05, 2013 @ 05:37:20

  வணக்கம்
  சகோதரி
  அருமையான கவிதை ஒவ்வொரு வரிகளும் கருத்தாளம் மிக்கதாக உள்ளது படமும் அழகு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 5. sujatha anton
  ஜூலை 05, 2013 @ 12:31:51

  இயற்கை வனப்பை கவித்துவத்தால் அள்ளி வழங்கிய கவித்துவம்
  அருமை….இதில் எதை எடுத்து உங்களை வாழ்த்துவது என்று எனக்கு தெரியவில்லை. ”கவிதாயினி வேதா” உங்கள் படைப்புக்கள் அடுத்த சந்ததிய எட்டிட வேண்டும். அற்புதம்..அற்புதம்….
  ஆவினப் பால் நுரையாடை

  மீனினம் நிறையோடை.

  மானினம் நீரருந்து மோடை.

  மானிட நாகரீக வாடை

  மேனிலைக்கு வளர்த்த ஓடை.

  மறுமொழி

 6. ஸாதிகா
  ஜூலை 05, 2013 @ 13:24:13

  அழகிய படத்துடன் அற்புதமான கவிதை

  மறுமொழி

 7. வெற்றிவேல்
  ஜூலை 05, 2013 @ 17:18:07

  அழகுப் படத்துடன் அற்புதமான கவிதை இது… வாழ்த்துகள்.

  மறுமொழி

 8. seeralan
  ஜூலை 06, 2013 @ 08:12:57

  எத்தனை ஆச்சரிய முலகின்
  அத்தனை உயிர்களிற்கும் வாழ்வீயும்
  தத்துவப் பிறப்பு நதி
  சத்துடை பன்முகப் பரிணாம
  வித்துடை மலைக் குழந்தையே……………………………………….அழகிய கவிதை காட்சிகள் கண்முன்னே வந்து செல்கிறது வாழ்த்துக்கள்

  மறுமொழி

 9. பி.தமிழ் முகில்
  ஜூலை 06, 2013 @ 13:23:59

  மலையின் அழகையும், அருவியின் பொலிவையும் அழகாய் சொல்லிச் செல்கிறது தங்கள் பாடல். வாழ்த்துகள் கவியே !!!

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூலை 06, 2013 @ 18:25:58

  kavithai sankamam- yogi yogi – sam masud likes in ˙·٠•●¤ۣۜ๘ கவிதைச் சங்கமம் ¤ۣۜ๘●•٠·˙( – FB.)

  Seeralan Vee, நாயகி கிருஷ்ணா and 2 others like this.in கவிதை தோட்டம்- ( FB)

  Elagnairu Malarkal likes this. in கவிதை முகம் -FB.

  JeyaMadhavan RaveendranathTagore likes this.in Kavithai sangamam என்கிற kavithai Club -FB

  மறுமொழி

 11. mahalakshmivijayan
  ஜூலை 10, 2013 @ 04:18:40

  அழகான கவிதை, அற்புதமான வார்த்தைகளின் கோர்வை! இது கோவைக்கவியின் முத்தான முத்துகளில் இன்னொன்று 🙂

  மறுமொழி

 12. maathevi
  ஜூலை 17, 2013 @ 06:11:30

  மலைக்குழந்தையவள் மயக்கி நிற்கின்றாள்.

  மறுமொழி

 13. பழனிவேல்
  ஜூலை 18, 2013 @ 10:51:25

  “மலையரசன் பட்டுச் சால்வையாம்
  வனப்பெண் காற்சலங்கையாம்.”

  கற்பனையும் கவிதை வரிகளும் மிக மிக அழகு.
  ரசித்தேன்…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: