280. புனர்வாழ்வு.

8262387_orig

புனர்வாழ்வு.

புனர் வாழ்வொரு புனர் நிர்மாணம்

புது சென்மமோர் உதயவானம்

இருண்டவானிலோர் ஒளிச் சுடர்

வரண்ட மிடறு நனைக்கும் நீர்.

திரண்டு மண்ணில் வீழருவி நீர்.

திரண்டு பசுமையயைச் செழிப்பிக்கும் கார்

சிதைந்த ஓவியம் திருத்தும் சிற்பிகளாய்

அதைரிய மனதினூன்று கோல்களாய்

உதைபட்ட நெஞ்சிற்குதவும் கரங்களாய்

கதை கேட்டுக் கவலை தீர்க்கப்

புகைந்திடும் துன்பம் துடைப்போர்

புனர் வாழ்விற்காய்  பாடுபடுவோர்

.

வானத்துத் தேவதைகள் யாரை இரட்சிக்கும்!

வாழ்வைப் புனர்வாழ்வுக் குழு இரட்சிக்கும்.

வீழ்ந்தவர் நோயில் மருத்துவம் பெறவும்

சூழ்ந்திட்ட ஆபத்தில் கரம் கொடுக்கவும்

வாழ்ந்திட அடிப்படைத் தேவை அமைக்கவும்

வாழ்ந்திடக் குடிமனை அமைக்கவுமுதவும்.

குறைகேட்கும் போலியற்ற மனதோடு

கறையில்லாத் துறைமுக மனதோடு

நறையான புரிந்துணர்வுக் குணத்தோடு

நிறைந்தது மனிதநேய மக்கள் மனம்.

ஆலம் வீழுது போலது மண் தொடும்.

ஆதரவுக் கரமுயிர்களை வாழவைக்கும்.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

11-7-2013

23-7-2013 செவ்வாய்க் கிழமை ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி (மலை 19.00 – 20.00) கவிதை நேரத்தில் இக் கவிதை என்னால் வாசிக்கப் பட்டது.

stock-photo-flower-line-for-border-and-frame-different-version-in-my-portfolio-11545657

 

Advertisements

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஜூலை 11, 2013 @ 06:26:10

  தற்கொலை ஒழிப்பு சிறப்பு தின
  சிறப்புக் கவிதை வெகு வெகு சிறப்பு
  நைந்த உள்ளங்கள் யாவும் இந்த நாளில்
  நலம் பெறட்டும்
  மனம் கவர்ந்த அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 11, 2013 @ 09:10:59

  வணக்கம்
  சகோதரி

  புனர்வாழ்வு பற்றிய கவி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 3. பி.தமிழ் முகில்
  ஜூலை 11, 2013 @ 11:23:29

  போலியற்ற உண்மையான அன்பே, துயரப்படுவோருக்கும், தோல்வியால் துவண்டு போவோருக்கும் அருமருந்தாய் அமைகிறது.

  அழகான வரிகள் கவியே !!!

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 11, 2013 @ 11:52:56

  கருத்துள்ள கவி வரிகள்… வாழ்த்துக்கள் சகோதரி….

  மறுமொழி

 5. sujatha anton
  ஜூலை 11, 2013 @ 20:41:22

  குறைகேட்கும் போலியற்ற மனதோடு

  கறையில்லாத் துறைமுக மனதோடு

  நறையான புரிந்துணர்வுக் குணத்தோடு

  நிறைந்தது மனிதநேய மக்கள் மனம்.

  ஆலம் வீழுது போலது மண் தொடும்.

  ஆதரவுக் கரமுயிர்களை வாழவைக்கும்.

  அருமை…அருமை…வாழ்த்துக்கள்!!! ”கவிதாயினி வேதா”

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  ஜூலை 12, 2013 @ 03:27:25

  .

  புனர் வாழ்வொரு புனர் நிர்மாணம்

  வானத்துத் தேவதைகள் யாரை இரட்சிக்கும்!

  வாழ்வைப் புனர்வாழ்வுக் குழு இரட்சிக்கும்.

  சிறப்பான வரிகள்..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 7. seeralan
  ஜூலை 12, 2013 @ 19:24:18

  /// ஆலம் வீழுது போலது மண் தொடும்.
  ஆதரவுக் கரமுயிர்களை வாழவைக்கும்.//// …….புனர்வாழ்வு …..அழகிய கவிதை ஆழமான கருத்துக்கள்

  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 8. பழனிவேல்
  ஜூலை 18, 2013 @ 10:59:27

  “சிதைந்த ஓவியம் திருத்தும் சிற்பிகளாய்
  அதைரிய மனதினூன்று கோல்களாய்
  உதைபட்ட நெஞ்சிற்குதவும் கரங்களாய்
  கதை கேட்டுக் கவலை தீர்க்கப்
  புகைந்திடும் துன்பம் துடைப்போர்
  புனர் வாழ்விற்காய் பாடுபடுவோர்”

  ஆழமான கருத்துக்கள்,
  அழகான வரிகளுடன்….

  “புனர்வாழ்வு”

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: