தொலைத்தவை எத்தனையோ!…9

untitled!…9

 (நான் வலையில் ” தொலைத்தவை எத்தனையோ ” தலைப்பில்
எழுதிய 8 அங்கத்தையும்  என் பெயருடன்
பண்கொம்.நெற்  (பண்கொம்.net) எனும் இணையம் வரிசையாகப் போட்டுள்ளது.
எம்மவர் ஆக்கங்கள் என்ற தலைப்பில் போட்டுள்ளனர்.
 சமூகம்- 9  தலைப்பிலிருந்து தொடங்குகிறது. 
இவர்களிற்கு மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவிக்கிறேன்.
ஐரோப்பாவில் மரங்கள் பூக்கள் கொட்டைகள் என்ற தலைப்பில்
கூகிளில் தேடிய போது இந்தத் தளமும் வந்தது.
உள்ளே சென்ற போது எனது ஆக்கம் அங்கு இருப்பதைக் கண்டு கொண்டேன்.
2013ல் எடுத்துப் போட்டள்ளனர். எனக்கு ஒரு தகவல் கூடத் தராதது தான் மனவருத்தம்.
அந்த ஆக்கத்தின் பின்னூட்டத்தில் கூட அறிவித்திருக்கலாம்.
THiruddu...
http://www.panncom.net/p/4567/4567
இனி ஆக்கத்திற்கு வாருங்கள்….

பன்னவேலை என்றால்……. …..

பனையின் குருத்தோலையை வெட்டி, விசிறியாக அதை விரித்து, நடுவிலிருந்து இரண்டாகப் பிரித்து வெட்டிய பின்னர் மறுபடி அதை விசிறியாக நிழலில்

3

கட்டித் தொங்கிய படி பல நாட்கள் காய வைத்து சுருக்கிக் கட்டி வைப்பார்.  இதை சார்வோலை என்று கூறுவதுண்டு. இவற்றைத் தேவக்கேற்றபடி மெல்லிது, அகலம் என்று வார்ந்து கொள்வர். அதாவது வார்வது என்பது ஒரு அருமையான  கலை.

இனி இதில் (பனையோலையில்) பெட்டி, தட்டு, கடகம், சுளகு, நீத்துப் பெட்டி என இன்னொரன்ன பல விடயங்கள் முடைய முடியும், பின்ன முடியும். இதையே பன்ன வேலை என்போம்.

இதை ஒரு கைப்பணியாக,  ஒரு பாடமாகக் கோப்பாய் நாவலர் பாடசாலையில் எமது அப்பப்பா தொடக்கி வைத்து, பலர் பயனடைந்தனர்.

பின்னர் கந்தர் மடத்திலும் ஒரு நிலையம் திறந்து பலர் பயனடைந்தனர்.

இவற்றை நான் பழகியது 3 – 4ம் வகுப்புகளிலிருந்து. ஆரம்பத்தில் வெறும் தட்டு பின்னிப் பழகி 

__1_~1  6

பின்னர் நீத்துப் பெட்டி செய்தோம். 

Neethuppetty

இதில் புட்டு அவிக்கலாம் – மா அவிக்கலாம்.

pittu3

பின்னர் சிறு பெட்டி, பனங்கட்டிக் குட்டான் போன்றும் செய்தோம்.

   palm_sugar   __1_~1

சின்னாச்சி வாத்தியார் கைவேலைக்குத் தலைமை வகித்தார். விசாலாட்சி ஆசிரியர், மாணிக்கம் ஆசிரியர் அனைவரும் (பெண்கள்) எமக்கு வகுப்புகளின் பிரகாரம்  பாடங்கள் எடுத்தனர். இவை பாடசாலையில் நடந்தவை.

வீட்டில் பச்சை நிற தென்னை ஓலைகள்,  கன்று மரங்களில் கைக்கெட்டிய உயரத்திலிருக்கும். அதைப் பிடுங்கிக் கண்ணிற்குக் கண்ணாடி

specks 

கை மணிக்கூடு

watch

காற்றாடி –

35987_148321151845363_100000024382553_479145_8125872_n

இதைப் பல அடுக்குகளாகச் செய்தால் கற்பூரக்கட்டிகள்.

பாம்பு’

snake.

என்று தம்பி தங்கைகளுடன், அயல் வீட்டுத் நண்பர்களுடன் செய்து விளையாடியவை பசுமை நினைவுகள்.

இன்றைய பிள்ளைகளிற்கு இந்த அனுபவங்கள் இல்லாதது. பெரும் குறை தான்.

வயதாலும், இட மாற்றத்தாலும் இவைகள் இன்று தொலைத்தவை தானே!

hheee211

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-7-2013

imagesCADKKMCK

29 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 16, 2013 @ 01:32:53

  எவ்வளவு அழகாக செய்துள்ளீர்கள்… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  ஜூலை 16, 2013 @ 01:35:29

  பச்சை ஓலையில் ஊதல் செய்து ஊதிய மலரும் நினைவுகள் வந்தது ..

  பசுமையான மலரும் நினைவுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 22, 2013 @ 17:24:25

   ஆமாம் ஊதலும் செய்தேன் தான்.
   எல்லாப்படங்களும் தேட முடியவில்லை.
   அதை விட படங்களாலேயே ஆக்கத்தையும் நிறைக்க விருப்பமும் இல்லை சகோதரி.
   தங்கள் கருத்தையிட்டு மிக மகிழ்ந்தேன்.
   மிகுந்த நன்றி உரித்தாகுக.

   மறுமொழி

 3. பி.தமிழ் முகில்
  ஜூலை 16, 2013 @ 01:44:23

  பனை ஓலை, தென்னை ஓலையில் அழகான வேலைப்பாடுகள்.வாழ்த்துகள் கவியே.

  மறுமொழி

 4. கோமதி அரசு
  ஜூலை 16, 2013 @ 03:59:37

  பனை ஓலை காத்தாடி , பனங்காய் நடைவண்டி, பச்சை ஓலையில் பாம்பு எல்லாம் நாங்களும் சிறு வயதில் விளையாடி இருக்கிறோம்.
  எங்கள் மலரும் நினைவுகளும் வந்தன.
  நீங்கள் செய்தவை எல்லாம் அழகு.

  மறுமொழி

 5. ranjani135
  ஜூலை 16, 2013 @ 05:24:15

  எத்தனை அழகான் மலரும் நினைவுகள்.
  இந்த மாதிரி கைவேலைகள் செய்வது கைகளுக்கும் பலம் கொடுக்கும். இப்படி செய்யலாம், அப்படி செய்யலாம் என்று யோசிக்கும் திறனும் அதிகரிக்கும். இதைத்தானே இப்போது creativity என்கிறார்கள்.

  இந்த தலைமுறை குழந்தைகள் நிறைய சின்னச்சின்ன விஷயங்களை தொலைத்துத்தான் போகிறார்கள்.

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூலை 16, 2013 @ 08:11:04

  Manimuthu Saga likes this in FB
  ஒன்றே குலம் ஒருவனே தேவன்

  Vetha ELangathilakam wrote:
  mikka nanry.(Manimuthu Saga)

  Amalie Navaneetharajah likes this…in FB Tamilsk velfærds forening, AATO

  Vetha ELangathilakam:-
  Thank youda….

  மறுமொழி

 7. VAI. GOPALAKRISHNAN
  ஜூலை 17, 2013 @ 02:12:11

  அழகான அருமையான பதிவு.

  மலரும் நினைவுகளாக பச்சை ஓலையில் ஊதல் மற்றும் ஏரோப்ளேன் [காற்றாடி] செய்து விளையாடி சிறு வயது நாட்கள் நினைவுக்கு வந்தன.

  பாராட்டுக்கள் +வாழ்த்துகள் + நன்றிகள்.

  மறுமொழி

 8. VAI. GOPALAKRISHNAN
  ஜூலை 17, 2013 @ 02:15:54

  சிறு பெட்டிகள், குட்டான், ஓலைக்கூடைகள், ஓலைப்பாய்கள், பனையோலை விசிறிகள் என பலவும் பயன்படுத்தியுள்ளோம்.

  எல்லாமே மிகச்சிறந்த கைவேலைகள். பாராட்டுக்கள்.

  மறுமொழி

 9. maathevi
  ஜூலை 17, 2013 @ 06:06:15

  பச்சை ஓலை கை மணிக்கூடு, காத்தாடி, கிளி என விளையாடிய பழையன எல்லாம் நினைவுக்கு வருகின்றது.

  மறுமொழி

 10. பழனிவேல்
  ஜூலை 18, 2013 @ 11:18:24

  கருத்து சொல்ல தேவையில்லை….
  தலைப்பே போதும்
  “தொலைத்தவை எத்தனையோ?”

  மறுமொழி

 11. வெற்றிவேல்
  ஜூலை 18, 2013 @ 17:05:52

  என் சிறு வயதுக் காலத்தை நினைவு படுத்துகிறது… நல்ல பதிவு… அழகு…

  மறுமொழி

 12. தி தமிழ் இளங்கோ
  ஜூலை 20, 2013 @ 08:07:29

  //என்று தம்பி தங்கைகளுடன், அயல் வீட்டுத் நண்பர்களுடன் செய்து விளையாடியவை பசுமை நினைவுகள். இன்றைய பிள்ளைகளிற்கு இந்த அனுபவங்கள் இல்லாதது. பெரும் குறை தான். வயதாலும், இட மாற்றத்தாலும் இவைகள் இன்று தொலைத்தவை தானே! //
  நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ? நானும் இந்த ஓலைப் பின்னல் விளையாட்டுப் பொருட்கள் சிலவற்றை செய்து இருக்கிறேன். ஆனால் எங்கள் பக்கம் பெரும்பாலும் தென்னை ஓலைகள்தான். நினைவலைகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

  மறுமொழி

 13. கீதமஞ்சரி
  ஜூலை 20, 2013 @ 09:02:16

  பனையோலையில் முடையப்பட்ட பெட்டிகள் தடுக்குகள் அழகு. நாங்கள் சிறுவயதில் கண்ணாடி, கைக்கடிகாரம், பாம்பு இவற்றை தென்னை ஓலைகளில் செய்து விளையாடியிருக்கிறோம். பனையோலையில் காற்றாடி செய்து மகிழ்ந்திருக்கிறோம். பூவரச இலை பீப்பீயும் நினைவுக்கு வந்துபோகிறது. இந்நாளைய குழந்தைகள் இழந்தவை அதிகம்தான். மனதில் பதிந்த நினைவுகளை இங்கே பதிவாக்கியமைக்கு நன்றி தோழி.

  மறுமொழி

 14. கோவை கவி
  ஜூலை 21, 2013 @ 08:08:54

  Umah Thevi likes this. in FB வித்யாசாகர் wall (Group)
  வித்யாசாகர்.
  Vetha:- Thak you sis…and Mohammed Mushi….

  Karthik Kumar likes this..in FB – கவிதை குழுமம் – Kavithai Kulumam.

  Vetha ELangathilakam Thank you Karthik Kumar.

  மறுமொழி

 15. sujatha anton
  ஜூலை 24, 2013 @ 19:58:04

  அருமை…அருமை…. புகைப்படங்களுடன் எடுத்துக்காட்டியமை
  பழமையை மறக்காத நாட்கள். நெஞ்சில் நிறைகின்றது தங்களது
  ஆக்கம்.” கவிதாயினி வேதா”

  மறுமொழி

 16. கோவை கவி
  ஜூலை 27, 2013 @ 18:22:06

  Aam Sujatha.கருத்து முழுவதும் சரி
  கருத்தையிட்டு மிக மகிழ்ந்தேன்.
  மிகுந்த நன்றி உரித்தாகுக

  மறுமொழி

 17. கோவை கவி
  மார்ச் 25, 2019 @ 17:38:42

  R Thevathi Rajan :- உண்மைதான் தாங்கள் சொல்வது. எத்தனையோ விஷயங்கள் இதுபோன்று நாம் தொலைத்து இருக்கிறோம்… அவைகள் காணாமல் போகவில்லை. மாறாக நம்முடைய அஜாக்கிரதையினால் நம்மால் தொலைக்கப்பட்டவைகள்….
  அருமையான பதிவு…
  2014
  சுந்தரகுமார் கனகசுந்தரம் :- GOOD MORNING.
  2014
  Vetha Langathilakam:- There are more Pictures in my web site…
  2015
  சுந்தரகுமார் கனகசுந்தரம்:- OK,thank you.
  2014
  Loganadan Ps :- அருமை. மலரும் நினைவுகளான, இள வயதின் தொலைந்த கனவுகள். மீட்டலுக்கு நன்றி
  2014
  சுந்தரகுமார் கனகசுந்தரம் :- hahahahahahahaha.
  2014

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- அருமையான தகவல்கள்

  பிரியசினேகன் தமிழன்:- அருமை அருமை.

  சுந்தரகுமார் கனகசுந்தரம் :- எத்தனையோ மனிதர் தமது உறவுகளையும்,நண்பர்களையும் தொலைத்துவிட்டார்கள்? இந்த அற்ப காற்றாடி ஒரு கேடா?

  Vetha Langathilakam:- மொத்தம் லைக் போட்டுள்ளனர். 20 பேர் இனி நானும் கருத்தெழுதும் வேலையின்றி லைக் போடலாம் கருத்து லைக் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றி.

  Sakthi Sakthithasan :- அன்பினிய ச்கோதரி இனிமையான , பசுமையான நினைவுகளோடு நாம் புலம்பெயர்ந்ததால் எத்தனையோ அருமையான கைவந்த கலைகள் தொலைந்து போய்விட்ட ஒரு முக்கியமான கருத்தை ழகுறப் பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

  Verona Sharmila :- மலரும் இனிமையான , பசுமையான..நினைவுஅருமை.

  Seeralan Vee :- தொலைந்தவைகள் ஏராளம் ஏராளம்…தொலையாத நினைவுகள் மட்டும் இன்னும் தொலையாமல் ,,அருமையான பகிர்வு

  Abira Raj :- அருமை

  Mani Vkp.- It is not actually true. When I read those above lines, wherein, it was mentioned how to make articles worth of playing at that age, have brought me back to that age. While reading, my mind has gone to my childhood days. Wherein, that “puttuma – Panai Olai Puttu”, so famous and tasty. After playing whirlround, we used to take from others and then to share with those present and chat for nothing, is really “GOLDEN DAYS”. Today these types of practice does not exist in South India. Now, South Indian culture has totally changed to Western Evil Culture. Present guys who are at the age of 19 – 25 on reading this, may come forward to change the world back. Thanks sister. You have made me to traverse to those days. Hope for this entire day that “ENTHU” shall remain with me. Thanks a lot.; Mani Vkp

  Muthulingam Kandiah:- mika arumaiyaana pathivu .anaivarukkum katpatharuvin payanum perumaiyum ariya seithamaikku mikavum nantri sakothari.engal kaalathil kaipani(handi craft)mika mukkiya paadam pengal thaiyal velai ariya vendum enpathu kaddayamaaka irunthathu

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: