281. உறவுகள்.

5903_460026624091585_1240695061_n

உறவுகள்.

 

 

சேயாய் மனிதன் உறவினை

தாயின் மார்புத் தொடர்பினால்

மாய மோகன முறுவலால்

ஓயாத அணைப்பா லடைகிறான்.

தேயாத பெற்றவ ருறவால்

தரமாய்த் தகுதியா யுலவுகிறான்.

 

 

உறவுகளின் இணைப்பு  பெரும்

ஊட்டம் நிறை களிப்பு.

நறவு மிகு நம்பிக்கையாம்

சிறந்த நங்கூரப் பிணைப்பு.

சிறகுகளாக வாழ்க்கை வானில்

பிறக்கின்றவொரு மிதப்பு.

 

 

நன்மை, நேர்மை, நற்பண்புகள்

இன்ப உறவுத் திறவுகோல்கள்.

ஆபத்தில் தள்ளல், அந்தரமாக்கல்,

ஆறுதலளித்து அணைப்பதும் உறவுகள்.

உறவுகளின் முறையான அமைப்பு

வாழ்விற்கு வளமான செழிப்பு.

 

 

தேன் தமிழழோடு தமிழனுறவு

வீணென்று விலக்கல் உமிழ்வு.

உறவுகன் இறைவனோடென்பது

துறவு வாழ்வுப் பிணைப்பு.

துறவென்று உறவுகளை

அறுப்பதொரு வெளி நடப்பு.

 

 

   — (கவிதையில் சேர்க்காது மேலதிகமாக எழுதியது) —-

 

 

(ஊரிற்கு நல் மனிதன், நாரில் இணைக்கும் பூ

ஏருக்கொருவயல்,  தூரிற்குத் தன் மரம்

ஆவிற்குப் பசும் புல்,  பாவிற்குச் சேர் சந்தம்,

நாவிற்குத் தமிழென மேவும் சிரஞ்சீவியாய்க்

காலம்காலமாய்க் கவினுறு சீவிதப் பயன் உறவுகள்.)

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

26-10-2004.

 

 

stock-photo-flower-line-for-border-and-frame-different-version-in-my-portfolio-11545657

 

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 20, 2013 @ 07:51:18

  /// நன்மை, நேர்மை, நற்பண்புகள் – இன்ப உறவுத் திறவுகோல்கள்… /// அருமை…

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 2. தி தமிழ் இளங்கோ
  ஜூலை 20, 2013 @ 08:00:04

  //உறவுகளின் முறையான அமைப்பு
  வாழ்விற்கு வளமான செழிப்பு //

  நல்ல வாழ்க்கை அமைந்திட வழிநெறி சொன்ன வரிகள்..

  மறுமொழி

 3. கீதமஞ்சரி
  ஜூலை 20, 2013 @ 08:56:12

  \\துறவென்று உறவுகளை

  அறுப்பதொரு வெளி நடப்பு.\\

  உறவின் பெருமை பேசும் முத்தாய்ப்பான வரிகள். மேலதிகமாய் எழுதியவை உறவின் பலம் உணர்த்தும் அழகு வரிகள். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 31, 2013 @ 08:14:42

   ஓர நேரச் சிந்னையில் மேலதிக வரிகள் தேவையற்றது போலத் தோன்றினாலும் பதிந்தேன்.
   கருத்திடலிற்கு மிக மிக நன்றி நண்பி கீதமஞ்சரி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  ஜூலை 21, 2013 @ 04:24:25

  தேன் தமிழழோடு தமிழனுறவு

  வீணென்று விலக்கல் உமிழ்வு.

  உறவுகன் இறைவனோடென்பது

  துறவு வாழ்வுப் பிணைப்பு.

  துறவென்று உறவுகளை

  அறுப்பதொரு வெளி நடப்பு.

  உறவாடும் வரிகள் அருமை..! பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 5. sasikala
  ஜூலை 22, 2013 @ 06:42:54

  நன்மை, நேர்மை, நற்பண்புகள்

  இன்ப உறவுத் திறவுகோல்கள்.
  அன்பின் திறவுகோல்களை அழகாக சொன்னீர்கள் மகிழ்ச்சி தோழி.

  மறுமொழி

 6. VAI. GOPALAKRISHNAN
  ஜூலை 22, 2013 @ 15:56:02

  //உறவுகளின் முறையான அமைப்பு
  வாழ்விற்கு வளமான செழிப்பு// ;)))))

  அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்..

  மறுமொழி

 7. வெற்றிவேல்
  ஜூலை 23, 2013 @ 05:29:26

  உறவுகள் எப்போதுமே அழகானது தான்…! உங்கள் கவிதைகளைப் போல…!

  மறுமொழி

 8. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 25, 2013 @ 08:31:36

  வணக்கம்
  சகோதரி
  உறவு பற்றிய கவிதை வரிகள் மிக அருமை வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 9. பழனிவேல்
  ஜூலை 29, 2013 @ 04:44:36

  “நன்மை, நேர்மை, நற்பண்புகள்
  இன்ப உறவுத் திறவுகோல்கள்.”

  மிகவும் சரியே.
  அழகிய வரிகள்…
  அருமையான ஆக்கம்…

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூலை 31, 2013 @ 08:23:16

  கருத்திடலிற்கு மிக மிக நன்றி Sakotharan. பழனிவேல்.
  மகிழ்ந்தேன்.

  மறுமொழி

 11. கோவை கவி
  மார்ச் 25, 2019 @ 18:03:23

  சங்கரன் ஜி:- இனிய வரிகள் இனிய பதிவு
  2014
  Verona Sharmila:- உறவுகளின் இணைப்பு பெரும்
  ஊட்டம் நிறை களிப்பு.
  நறவு மிகு நம்பிக்கையாம்
  சிறந்த நங்கூரப் பிணைப்பு.
  சிறகுகளாக வாழ்க்கை வானில்
  பிறக்கின்றவொரு மிதப்பு….அழகிய அருமையான பதிவு
  2014
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- சிறப்பான படைப்பு. வாழ்த்துக்கள்
  2014
  Loganadan Ps:- மிக அருமையான படைப்பு. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  Vathiri C Raveendran:- வாழ்த்துக்கள்.
  2014
  Mageswari Periasamy :- உறவுகளின் மேன்மை தாய்மையிலிருந்து ஆரம்பிக்கின்றது என்பதை அழகு தமிழில் பதிவிட்ட தோழிக்கு வாழ்த்துகள்….
  2014
  Paval Rajadurai :- அருமையான படைப்பு……வாழ்த்துக்கள்….
  2014
  Vetha Langathilakam:- Ellorukkum anpu nanrykal.

  சரவண பாரதி :- nice

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: