282.பாவலன் – பாவிதை.

vetha_poems

பாவலன் – பாவிதை.

 

கவிஞனை அழிக்க முடியாது –கவின்

கனவுகள் கலைக்க முடியாது – அவன்

பூமி வெடித்து முளைத்தது போல

பூக்கும் எழுதுகோற் போராளி.

 

மேலாடை களற்ற நிர்வாணமாகும்

காலாடக் கசியும் கருநாளம்.

நூலாடும் கருத்து சொல்லோவியம்

மேலாடி மனிதருள் தூவிடும்.

 

தஞ்சமென இதயத்துள் அடங்கா விதை

நெஞ்சத்து உணர்வின்  பா விதை.

அஞ்சித் தொழக் கை கூப்பாது

அஞ்சாது உலகிற்காய்ப் பூப்பது கவிதை.

 

உழுத நீலக் குருதியின் இழப்புத் தான்

எழுதும் இதயத்து கவிதை வண்ணம்.

பழுது பட்டதைத் திருத்தக் கூறியே

எழுது கோலினை எடுக்கிறான் கவிஞன்.

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

13-2-2005.

 

imagesCADKKMCK

 

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தி தமிழ் இளங்கோ
  ஜூலை 28, 2013 @ 00:39:43

  // உழுத நீலக் குருதியின் இழப்புத் தான்
  எழுதும் இதயத்து கவிதை வண்ணம். //

  ” நீலக் குருதி ” – புதுமையான சொல்லாடல். தாங்கள் ” நான் நிரந்தரமானவன் “ என்ற கவிஞர் கண்ணதாசனின் தீவிர ரசிகை என்று தெரிகிறது.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 03, 2013 @ 21:03:54

   கண்ணதாசனைப் பிடிக்காதவர் யாருளர்.!
   அவர் வரிகள் – பட்டுக்கொட்டையார் வரிகள் யார் மனதில் தீ மூட்டவில்லை!.
   இரவும் பகலும் இலங்கை வானொலியில் கேட்ட வரிகள் தானே!.
   மிக்க நன்றி தங்கள் மனம் நிறைந்த கருத்திற்கு.

   மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  ஜூலை 28, 2013 @ 01:36:08

  தஞ்சமென இதயத்துள் அடங்கா விதை

  நெஞ்சத்து உணர்வின் பா விதை.

  அஞ்சித் தொழக் கை கூப்பாது

  அஞ்சாது உலகிற்காய்ப் பூப்பது கவிதை.

  பூவாய் மலர்ந்த கவிதை..! பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 28, 2013 @ 02:21:03

  வரிகள் சிறப்பு… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 28, 2013 @ 02:45:49

  http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_9497.html – தளத்தில் இட்ட கருத்துரை :

  http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html

  மேற்கூறிய சகோதரி பொன்மலர் தளத்தில் போல் செய்தால் எவ்வித பிரச்சனையும் இருக்காது…

  அந்தப் பகிர்வில் உள்ள முக்கியமான வரிகள் கீழே :

  // வந்தே மாதரம் தளத்தில் இதற்கான நிரல்வரிகளை நண்பர் குறிப்பிட்டிருந்தார். இதில் நான் ஒன்றைக் கவனித்தேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் முகவரிக்கு Redirect ஆகும் போது மட்டுமே .com க்கு மறுபடியும் மாற்றும் படி அந்த நிரல் இருக்கிறது. கூகிள் இந்த முறையை மேலும் சில நாடுகளுக்கு அப்டேட் செய்யும் போது, அதாவது .uk, .us போன்ற மற்ற நாடுகளிலும் இந்த முறையைக் கொண்டு வரும் போது அந்த நிரல் வேலை செய்யாது. //

  இதைப்பற்றி விரைவில் ஒரு பதிவு வே.வி. தொடரில் வரும்… முதலில் “கணினி முதல் அனுபவத்தை” முடித்து விட்டு பகிர வேண்டும்…

  மேலும் பல தளங்கள் (.in என்று முடியும் தளங்கள்) தமிழ்மணம் இணைக்காமல் உள்ளன… இணைக்க முடியாதவர்கள் தொடர்பு கொள்ளலாம்…

  dindiguldhanabalan@yahoo.com

  நன்றி…

  மறுமொழி

 5. sasikala
  ஜூலை 28, 2013 @ 06:27:14

  பூமி வெடித்து முளைத்தவன் கவிஞன் அழகா சொன்னீங்க.

  மறுமொழி

 6. ramani
  ஜூலை 28, 2013 @ 07:28:12

  பாவலனையும் பாவிதையையும்
  விளக்கியவிதம் இணைத்தவிதம்
  எம்முள் விதைத்தவிதம்
  மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. maathevi
  ஜூலை 28, 2013 @ 09:01:35

  “கவின் கனவுகள் கலைக்க முடியாது ” நிச்சயமாக. அழகிய கவி.

  மறுமொழி

 8. கோமதி அரசு
  ஜூலை 28, 2013 @ 10:45:56

  தஞ்சமென இதயத்துள் அடங்கா விதை

  நெஞ்சத்து உணர்வின் பா விதை.

  அஞ்சித் தொழக் கை கூப்பாது

  அஞ்சாது உலகிற்காய்ப் பூப்பது கவிதை.
  கவிஞர் மனநிலையை அழகாய் கூறும் கவிதை .

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூலை 28, 2013 @ 14:15:01

  Siva Rama Krishnan likes this..in FB கவிதை தோட்டம்.

  Siva Rama Krishnan- அருமை…

  Vetha ELangathilakam :- mikka nanry urave….

  மறுமொழி

 10. ranjani135
  ஜூலை 29, 2013 @ 03:38:43

  //பழுது பட்டதைத் திருத்தக் கூறியே
  எழுது கோலினை எடுக்கும் கவிஞன்//
  நீங்கள் கூறியது போல பூமி வெடித்து பூக்கும் எழுதுகோற் போராளி.தான்!

  பாவலனையும் பாவிதையையும் வெகு சுவாரஸ்யமாகச் சித்தரித்து இருக்கிறீர்கள்.
  பாராட்டுக்கள்!

  மறுமொழி

 11. பழனிவேல்
  ஜூலை 29, 2013 @ 04:53:48

  ஆம் உண்மைதான்.

  மரணத்தில் எல்லோரும் மரணிப்பதில்லை.
  மரணங்களை கடந்து மண்ணில்,
  புகழோங்கி மனங்களில் நிறைந்திருக்கும்
  வல்லமை கொண்டோரும்
  இம் மண்ணுலகில் நித்தியமாய் வாழ்வதுண்டு.
  அத்தகைய நித்தியக் கலைஞன்,கவிஞன் “வாலி”.

  மறுமொழி

 12. கோவை கவி
  மார்ச் 25, 2019 @ 18:14:13

  Rajaji Rajagopalan:- பூமி வெடித்து முளைத்தது போல
  பூக்கும் எழுதுகோற் போராளி…// அற்புதமான புதிய கண்ணோட்டம். உங்கள் கவிதைகளுக்கு நீங்கள் இடும் திலகம் நாளுக்கு நாள் மேலும் மேலும் இலங்குகிறது.
  2014
  N.Rathna Vel:- அருமை. நன்றி.
  2014
  சிறீ சிறீஸ்கந்தராசா :- அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!!
  2014
  Krishnan Balaa :- பா விதை= புதிய சொல்;பாராட்டுக்கள்.
  2014
  Pram Raj:- Arumai.
  2o14
  Vetha Langathilakam:- இக் கவிதை 2005ல் ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது. பின்னர் நோர்வே வ.ஐ.ச யெயபாலன் கவிதை கேட்டார். இதை அனுப்பிருந்தேன். (என்ன நடந்துதோ தெரியாது.)
  உங்கள் அனைவரின் கருத்துகளிற்கும் மனமகிழ்ந்தேன் இனிய நன்றி உரித்தாகட்டும்.
  2014
  Loganadan Ps அருமையான புகழாரம். மகிழ்ச்சி
  2014
  Vathiri C Raveendran:- தஞ்சமென இதயத்துள் அடங்கா விதை
  நெஞ்சத்து உணர்வின் பா விதை.
  2014
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan “..பழுது பட்டதைத் திருத்தக் கூறியே
  எழுது கோலினை எடுக்கிறான் ..” அருமையான வரிகள்
  2014
  Abira Raj:- அருமை
  2014
  சரவண பாரதி:- மனதிற்கு இன்பமளிக்கும் அழகிய வரிகள் !
  2014
  Sakthi Sakthithasan :- அன்பினிய சகோதரி, மற்றுமோர் அற்புதமான கவிதை வாழ்த்துக்கள்
  2014
  Vetha Langathilakam Karuththu :- . Ellorukkum mikka nanry..
  2014
  Mageswari Periasamy :- தோழியின் கவிதைக்கு என்றும் தீர்க்காயுசுதான். மேலும் தொடருங்கள். (y)
  2014
  Tharsini Kanagasabai உழுத நீலக் குருதியின் இழப்புத் தான்
  எழுதும் இதயத்து கவிதை வண்ணம்.
  பழுது பட்டதைத் திருத்தக் கூறியே
  எழுது கோலினை எடுக்கிறான் கவிஞன்.அழகிய கவிதை..வாழ்த்துக்கள்
  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: