9. குதிரை ஆட்டம்.

இந்த முறை வெற்றி பற்றிய ஆக்கம் தான்.

இப்போதெல்லாம் எமது மகன் வீட்டுள்ளே போனதும் பேரன் வந்து எமது கையைப் பிடித்து வெளியே போக வரும்படி இழுப்பார். வெளியே உலாத்த மிக விருப்பம். நான் அவரோடு தனியே போனால் ஏதாவது ஓரு ராகத்தை ம்..ம் என்றோ. லாலலா என்றோ இழுத்தபடி செல்வென்  இது வழமை.

இவர் வீட்டில்  தானே விளையாடும் போது என்னைப்  போல இராகம் இழுப்பார்.  பெரிய அனுபவஸ்தர் போல  செய்வார்.

பாடல் கேட்டால் போதும் சுற்றிச் சுற்றி ஆடுவார். தலை சுற்றி விழுவார் உடனே எழுந்து மறுபடி தொடருவார். பாடலுக்குக் கை தட்டுவார்.

என்னிடம்  ”..சீச்சோ  சீச்சோ..”  என்பார் அதன் கருத்து சோபாவிலிருந்து அவரைக் காலில் வைத்து ஆட்டுவது.

Sea shore

up and Down

vethri going to the London town  (இதை மாற்றி மாற்றி வேறு இடங்கள் கூறிப் பாடுவதுண்டு.)

summer13 013P1050158

மரக் குதிரை ஆடுவார் அதற்கு ஓரு பாட்டு.

 

குதிரை ஆட்டம்.

 

ஆடுங்கோ ஆடுங்கோ

குதிரை ஆடுங்கோ

வெற்றி ஆடுங்கோ!

சிரித்து ஆடுங்கோ

சிவப்புக் குதிரை

மரக் குதிரை  (சிரித்து ஆடுங்கோ)ஆடுங்கோ

 

முன்னும் சாய்ந்து

பின்னும் சாய்ந்து

இன்னும் வேகமாய்

உன்னி உன்னி ஆடுங்கோ

வெற்றி ஆடுங்கோ

குதிரை ஆடுங்கோ. (ஆடுங்கோ)

summer13 082

வெற்றிக்குட்டிக்கு நான் பாடும் பாட்டு. உடனே சிரித்து (here she goes Again)

எந்த நிலையிலிருந்தாலும் அதற்கேற்றமாதிரி ஆடுவார்.

”….வண்ணத்திப் பூச்சி வண்ணத்திப் பூச்சி
      எண்ணிப் பார்! எண்ணிப் பார்!
      வண்ணம் பலவே வண்ணம் பலவே
      எண்ணம் கிளறுது!  எண்ணம் கிளறுது!…”’  

(ஆங்கில வரிகள் நாம் முன்பு சிறு வயதில் பாடியது. தமிழ் எனது வரிகள் தான்.)

இப்பொது பேரனுடன் இருக்கும் போது ஏதும் வாசித்தால் அவரும் வந்து வாசிப்பார். புத்தகம் கிழிப்பார்.

நான் பென்சிலும் பேப்பரும் கொடுத்து விட்டால் கீறுவார்.

P1050004

மிகவும் ஆனந்தப் படுவார். கை தட்டி உற்சாகப் படுத்துவேன்.

விரல்கள் கட்டுப் பாட்டிற்குள் இல்லாததால் நேர் கோடான கீறல்கள் தானே ஆரம்பம்.

vethriart

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
31-7-2013

 

baby-items

 

 

 

 

 

 

 

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  ஜூலை 30, 2013 @ 22:37:46

  மிகவும் அழகான அற்புதமான பதிவு. பேரனுடன் இதுபோல சேர்ந்து விளையாடி, ஆடிப்பாடி மகிழ நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  படங்கள் எல்லாமே அழகோ அழகு. பேரனுக்கு என் அன்பான நல்வாழ்த்துகள் + ஆசிகள்.

  அவர் கிறுக்கல்களை மிகவும் பத்திரமாக தேதியுடன் சேகரித்து வையுங்கள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  மறுமொழி

 2. T.N.MURALIDHARAN
  ஜூலை 31, 2013 @ 00:32:14

  குழந்தையின்கிறுக்கலும் ஒரு அழகான கவிதை..குதிரை ஆட்டப் பாடல் அருமை.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 31, 2013 @ 03:08:12

  பாடலும் செல்லத்தின் கிறுக்கலும் ரசனை… ரசித்து மகிழ கொடுத்து வைக்க வேண்டும்… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  ஜூலை 31, 2013 @ 05:44:43

  வெற்றி பற்றிய
  வெற்றிகரமான ஆக்கம் அருமை..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 5. tbr.joseph
  ஜூலை 31, 2013 @ 07:15:32

  பேரக்குழந்தைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியவில்லை. அப்படித்தானே? அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 09, 2013 @ 06:32:34

   மிக நன்றி சகோதரா. மகிழ்ந்தேன் கருத்திடலிற்கு.
   இதோ இப்போதும் தங்கள் வலைக்கு வந்தேன் (9-8-2013. – 8.29 காலை.)
   கருத்திடமுடியவில்லை . ஆடுகிறது. தகவலறிய எழுதுகிறேன்.

   மறுமொழி

 6. கோவை கவி
  ஜூலை 31, 2013 @ 08:07:06

  Chembiyan Valavan and Siva Rama Krishnan like this…..in FB கவிதை தோட்டம்.
  Siva Rama Krishnan:- கேட்பதற்கு மிகவும் அழகாக உள்ளது…அவருக்கு சிறந்த எதிர்காலம் அமைய எனது வாழ்த்துக்கள்…
  Vetha ELangathilakam:_ Mikka nanry S.R.K and chembian Valavan.

  மறுமொழி

 7. கோமதி அரசு
  ஜூலை 31, 2013 @ 11:38:46

  வெற்றியின் மழலை விளையாட்டுக்கள் ரசிக்க வைக்கிறது.பாட்டியின் பாடல்கள், பேரனின் பாடல், குதிரை ஆட்டம், கால்களில் ஊஞ்சல் ஆட்டம் எல்லாம் அருமை. நானும் இப்போது நியூஜெர்சியில் பேரனின் அன்புபிடியில் இருக்கிறேன்.
  பேரனுக்கு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 09, 2013 @ 06:34:52

   ”..நானும் இப்போது நியூஜெர்சியில் பேரனின் அன்புபிடியில் இருக்கிறேன்…”
   மகிழ்வு தொடரட்டும்.
   கருத்திடலிற்கு இனிய நன்றி. இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. Dr.M.K.Muruganandan
  ஆக 01, 2013 @ 01:40:14

  நாளாந்தம் குழந்தையுடன் நடப்பதை மிக அழகான பதிவாக செய்திருக்கிறீர்கள்.
  சுவைக்கும்படி இருந்தது.எனது ஹாய நலமா புளக்கில் நீங்கள் கேட்ட கேள்விக்கு இன்றுதான் விடை கொடுக்க முடிந்தது. வசதிபோல் பாருங்கள்
  http://hainallama.blogspot.com/2013/07/blog-post_6740.html

  மறுமொழி

 9. கீதமஞ்சரி
  ஆக 01, 2013 @ 10:38:05

  அழகானத் தமிழ்ப்பாடல்களை குழந்தையின் காது குளிரப் பாடிப்பாடி இனிய மொழியை இலகுவாய்க் கற்பிக்கும் தங்களைப் பாராட்டுகிறேன். வெற்றியின் வாழ்க்கையில் எந்நாளும் வெற்றியே துலங்க வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 10. கோவை கவி
  ஆக 03, 2013 @ 06:40:00

  IN FB:-
  Sharmila Dharmaseelan கொடுத்து வைத்த பேரனும் அன்பான பாட்டியும் அருமை..அருமை
  Vetha ELangathilakam:- YES!…Thanks GOD!….

  மறுமொழி

 11. கோவை கவி
  ஆக 08, 2013 @ 07:21:12

  முத்து பாலகன் likes this….in fb தமிழ்ச் சங்கம் —-புலமைக்கு மட்டுமே.

  முத்து பாலகன்:-
  உன் நாட்ட மெழுந்து உலவும் போது
  என் வாட்டம் பறந்து போகுதடா
  உன் ஆட்டம் கண்டே மெய்மறந்து
  உன் பாட்டில் மயங்கும் பாட்டியடா

  வாழ்க வளமுடன் பாட்டியும் பேரனும்

  Vetha ELangathilakam:- Mikka nanry .

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: