55. கவிதை பாருங்கள்(photo,poem)

2275037-air-bubble-background-ll

மரண பயம்.

 

பாழ் அனுபவ அதிருப்தியில்

பாத்தியதையானது வாழ்வென்று

ஆழ்ந்த உலக ஆசையில்

தாழ்ந்து வெளியேற முடியா

ஆழத்தில் மனித ஆன்மா.

ஊழ்வினையன்றி வேறேது!

 

 

இரணம் தருமுலக வாழ்வில்

பரணம் என்று பலரும்

சரணமடைவது இறைவனாயினும்

மரணம் உறுதி நித்தியம்.

மரணத்தைத் திரணம் என்று

தரணத்தில் வாழப் பழகு.

2-8-2013 —–

 

 

 

black divider

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  ஆக 02, 2013 @ 21:31:44

  கவிதை அருமை/..
  மரண பயம் இல்லாமல் இருக்கும் காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாம்.
  இறைவனை வணங்கி கொண்டு. அவன் அழைக்கும் வரை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 09, 2013 @ 06:48:50

   மிக நன்றி சகோதரி கருத்திடலிற்கு.
   என்ன ஆச்சரியம் சகோதரி! 4 பேரின் கருத்துகளே இதற்கு – இந்த ஆக்கத்திற்கு வந்துள்ளன.
   ஆச்சரியமாக உள்ளது மக்கள் மன நிலைக்கு.
   நிசமாகவே மரண பயம் எல்லோருக்கும் உள்ளது தானா!….

   மறுமொழி

 2. பி.தமிழ் முகில்
  ஆக 02, 2013 @ 22:13:59

  மரண பயம் வந்துவிட்டால், வாழும் வாழ்வதனில் மகிழ்வும் மன அமைதியும் தொலைந்திடும். அழகானதோர் கவிதை.வாழ்த்துகள் கவியே !!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 09, 2013 @ 06:50:07

   மிக நன்றி பி.தமிழ் முகில் கருத்திடலிற்கு.
   என்ன ஆச்சரியம்! 4 பேரின் கருத்துகளே இதற்கு – இந்த ஆக்கத்திற்கு வந்துள்ளன.
   ஆச்சரியமாக உள்ளது மக்கள் மன நிலைக்கு.
   நிசமாகவே மரண பயம் எல்லோருக்கும் உள்ளது தானா!….

   மறுமொழி

 3. DD
  ஆக 03, 2013 @ 02:39:41

  சரியாகச் சொன்னீர்கள்… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  ஆக 03, 2013 @ 03:29:37

  சரணமடைவது இறைவனாயினும்

  மரணம் உறுதி நித்தியம்.

  மரணத்தைத் திரணம் என்று

  தரணத்தில் வாழப் பழகு.

  அழகான வரிகள்..

  மறுமொழி

 5. கோவை கவி
  ஆக 09, 2013 @ 06:54:33

  மிக நன்றி சகோதரி தங்கள் இனிய கருத்திடலிற்கு.
  மிக மகிழ்ந்தேன்.

  மறுமொழி

 6. ranjani135
  ஆக 14, 2013 @ 11:40:52

  மரண பயத்தை திரணம் என்று நினைத்து வாழ மனதில் தைரியம் வேண்டுமே! அதுதான் யாரும் வரவில்லை போலிருக்கு!

  நமக்குப் பிறப்புக் கொடுத்து நமக்கு நல்வாழ்வும் கொடுத்திருக்கும் இறைவனின் சரணார விந்தத்தில் அடைக்கலம் புகுந்து விட்டால் சுலபமாக இந்த பயத்தை வென்று விடலாம்.

  கவிதை வரிகள் அற்புதம்! பாராட்டுக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 22, 2013 @ 17:14:09

   சகோதரி எனக்கும் ஆச்சரியமாக இருந்தது மரணம் என்றதும் கருத்து குறைந்துள்ளதே என்று.
   சரி பரவாயில்லை என நினைத்தேன். லேட்டாக கருத்துகள் வந்துள்ளது. தங்கள் கருத்திற்கும் மிக நன்றி – மகிழ்வும் கூட.

   மறுமொழி

 7. kuttan
  ஆக 14, 2013 @ 13:16:43

  மரணத்தை வெல்ல இயலாது;மரண பயத்தை வெல்லலாமே!அருமை

  மறுமொழி

 8. பழனிவேல்
  அக் 21, 2013 @ 10:04:16

  “இரணம் தருமுலக வாழ்வில்
  பரணம் என்று பலரும்
  சரணமடைவது இறைவனாயினும்
  மரணம் உறுதி நித்தியம்.
  மரணத்தைத் திரணம் என்று
  தரணத்தில் வாழப் பழகு. ”

  அழகு.

  மறுமொழி

 9. தி தமிழ் இளங்கோ
  அக் 21, 2013 @ 12:54:17

  // மரணம் உறுதி நித்தியம்.
  மரணத்தைத் திரணம் என்று
  தரணத்தில் வாழப் பழகு. //

  பிறவிப் பெருங் கடலைப் பற்றிய ஆழமான சிந்தனை வரிகள்!

  மறுமொழி

 10. கோவை கவி
  அக் 22, 2013 @ 17:19:32

  மிக நன்றி சகோதரா (தி தமிழ் இளங்கோ) கருத்திடலிற்கு.
  மிக மகிழ்ந்தேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: