28. என் கணனி அனுபவம்.

imagesCAOS1GEL

என் கணனி அனுபவம்.

 

ஆரம்பத்தில் கவிதைகளைத் தமிழில் பாமினியில் எழுதி ரி.ஆர்.ரி தமிழ்,  அலை, இலண்டன் தமிழ் வானொலிக்கு மின்னஞ்சலில் அனுப்பியபடி இருந்தேன்.
தமிழ் எழுத்துக்களை (பாமினி வேறும் தமிழ் எழுத்துகளை) எமது நகரத்து நண்பர் ஒருவர் பதிந்து தந்தார். இவருக்கு நன்றி.

கணனியில் இணையத் தளங்கள் பார்ப்பது, கவிதைகள், செய்தி வாசிப்பது என்று காலம் போனது. இதைக் கணவரும் செய்வார். 3 புத்தகங்கள் வெளியிட்டதும் கையெழுத்துப் பிரதிகளை அனுப்பித் தான்.
ஆனால் புத்தகங்களை மக்களிடம் பரப்புவதில் சிரமம் இருந்தது. இணையத்தளம் திறக்கலாம் என்று எண்ணம் உதித்தது. இளம் நண்பர்களிற்கு வந்து உதவி செய்ய நேரமே இல்லை. உதவி கேட்டால் மளமளவென செய்தனர் அதைக் காட்டித் தரும் உதவி மனமில்லை.

நானாகவே வேட்பிரஸ் – புளோக் விவரங்களை வாசித்து அறிந்து  வேட் பிரஸ்ல் புகுந்தேன். எனது மருமகள் முகப்புச் செய்வதில் முதன் முதலில் உதவினாள்.
பின்னர் சகோதரர் எழுத்தாளர், கவிஞர் வித்தியாசாகர் அதைத் தமிழாக்கி        ” வேதாவின் வலை ”..யென்று எழுதுங்கள் என்றேன் – எழுதினார்.
” தமிழ் பேசி தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம் ” என்றது அவரது வசனமே.
இவருக்கு மனமார்ந்த நன்றி.

இன்னும் மேலும் உதவிகள் அவ்வப்போது நண்பர்களிடம் கேட்டு செய்தேன். கணவர் இதில் ஆர்வமில்லை.
டேனிஸ் மொழியில் கணனி அடிப்படைக் கல்வி ஒரு கிழமை எடுத்தேன். மவுஸ் பிடிப்பதே ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது.

தமிழ் எழுத்தை யூனிக்கோட்டிற்கு மாற்றுவதில் சுவிஸ் நண்பர் எழுத்தாளர் செய்தியாளர் கவிஞர் ஏ.ஜே.ஞானேந்திரன் வீட்டிற்கு வந்த போது ” இப்படி இருங்கள்” என்று கணனியில் உட்கார வைத்துக் கேட்டு அறிந்து கொண்டேன். எழுத்துருமாற்றியைப் பாவிக்கிறேன். இது எனக்குச் சுகமாக உள்ளது. ஏஜேஜிக்கும் மிகுந்த நன்றி.

600க்கும் மேற்பட்ட கவிதைகள் வலையில் பல தலைப்புகளில் பாமாலிகை (பாக்களின் மாலை) என்று இட்டுள்ளேன். தமிழ் மணத் தொடர்பு சிறிது காலமாகவே உள்ளது. வேறும் தமிழ்வெளி.  தமிழ் 10, இன்ட்லி, வலைப்பூக்கள் என்றும் இணைக்கிறேன்.
ஆரம்பத்தில் மேசைக் கணனியாக இருந்தது. இப்போது மடிக்கணனியாக உள்ளது. திடீரென செத்துப் போகும் மேசைக் கணனி. காரணம் வைரஸ் மெயில்களைத் திறப்பது. இவைகளைப் பார்த்துத் திறப்பது, தவிர்ப்பது என்பதும் கூடக் காலப் போக்கில்; அனுபவப் படிப்பாகப் தான் படிக்க முடிந்தது.

இவைகளை நிர்த்தாட்சணயமாக அழிக்க இப்போது நன்கு பழகியுள்ளேன்.
வலை திறந்து 3 வருடங்கள் முடிந்து விட்டது. இன்னும் பல எனது பேரனிடம் படிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
எக்சீலில் கணக்கு எழுதுவது, வங்கி அலுவல்கள் போன்றவை எனது கணவர் செய்வார்.
இன்னும் பல படிக்க உள்ளது. பார்ப்போம்.

சகோதரர் தமிழ் இளங்கோ இத் தொடர் பதிவை எழுதக் கேட்டதற்கு மிகுந்த நன்றி. சுவைபட எழுத முடியவில்லை.

இத் தொடர் பதிவை எழுத சகோதரி இளமதியை  http://ilayanila16.blogspot.de/அழைக்கிறேன்.
சகோதரி ஸாதிகாவை http://shadiqah.blogspot.dk/search?updated-min=2013-01-01T00:00:00%2B05:30&updated-max=2014-01-01T00:00:00%2B05:30&max-results=20 அழைக்கிறேன்..

http://hainallama.blogspot.dk/  டாக்டர் முருகானந்தம் அவர்களை அழைக்கிறேன்.

3  பேர் போதுமென்று நினைக்கிறேன்.

 

அன்புடன் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

 

 

Swirl divider v2

42 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வை. கோபாலகிருஷ்ணன்
  ஆக 04, 2013 @ 09:33:13

  சுருக்கமாகச் சுவையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  //600க்கும் மேற்பட்ட கவிதைகள் வலையில் பல தலைப்புகளில் பாமாலிகை (பாக்களின் மாலை) என்று இட்டுள்ளேன். //

  ஹைய்யோ ! ;))))) மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. வே.நடனசபாபதி
  ஆக 04, 2013 @ 10:37:49

  //சுவைபட எழுத முடியவில்லை.//
  தன்னடக்கமாக கூறியுள்ளீர்கள். உண்மையில் சுவாரஸ்யமாக இருந்தது. வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  ஆக 04, 2013 @ 10:43:05

  கணிணி அனுபவதை சிறப்பாகப்
  பகிர்ந்திருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 4. T.N.MURALIDHARAN
  ஆக 04, 2013 @ 11:40:31

  உங்கள் சிறப்பு நீங்கள் பின்பற்றும் நடை.அழகான தமிழில் புதுப் புது வார்த்தைகளை போட்டு எழுதுகிறீர்கள். முதல் கணினி அனுபவத்தையும் நன்றாகவே பகிர்ந்திருக்கிறீர்கள் பாராட்டுகள்

  மறுமொழி

 5. இளமதி
  ஆக 04, 2013 @ 13:40:22

  மிகவே அருமையாக உங்கள் முதற் கணினி அனுபவத்தை பகிர்ந்தீர்கள்!

  இத்தனை பாக்கள் இயற்றி அழகாகப் பெயரிட்டுப் பாதுகாக்கின்றீர்களா? அருமை!

  உங்கள் அனுபவப் பகிர்வு மிகச்சிறப்பாக இருந்தது சகோதரி!

  என்ன… முடிவில் என்னையும் இந்த தொடரில் இணைத்துவிட்டீர்கள்.
  அதுதான் என்று தொடர்வேனோ பார்க்கலாம். முயல்கின்றேன்.

  உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 6. ramani
  ஆக 04, 2013 @ 14:39:41

  சுருக்கமாகவும் அருமையாகவும்
  இருந்தது தங்கள் கணினி அனுபவப்பதிவு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. கோமதி அரசு
  ஆக 04, 2013 @ 18:16:35

  கணினி அனுபவ பகிர்வு வெகு அருமை.

  மறுமொழி

 8. ஸாதிகா
  ஆக 04, 2013 @ 23:21:48

  அழைப்புக்கு மிக்க நன்றி சகோதரி.விரைவில் என் அனுபவத்தைபகிர்கின்றேன்.

  மறுமொழி

 9. Ambaladiyal
  ஆக 05, 2013 @ 02:24:05

  வணக்கம் அம்மா !
  அவசியம் நீங்கள் இன்றைய இந்த ஆக்கத்தினைக் காண விரைந்து
  அழைகின்றேன் .வலைத்தளம் தந்த நட்பின் வலிமையுணர்ந்து மகிழ்வுடனே .
  http://rupika-rupika.blogspot.com/2013/08/blog-post_4.html

  மறுமொழி

 10. தி தமிழ் இளங்கோ
  ஆக 05, 2013 @ 03:18:23

  // டேனிஸ் மொழியில் கணனி அடிப்படைக் கல்வி ஒரு கிழமை எடுத்தேன். //
  தங்களுக்கு டேனிஷ் மொழி தெரியும் என்பதால் மொழிபெயர்ப்பு பணிகளையும் செய்யலாம். டேனிஷ் இலக்கியங்களை தமிழிலும், தமிழ் இலக்கியங்களை டேனிஷ் மொழியியிலும் மொழியாக்கம் செய்தால் நல்லது.

  கணினி பற்றிய தங்கள் அனுபவத் தொடர் சுருக்கமாகவும், பல விவரங்களை உள்ளடக்கியதாகவும் இருந்தது.

  சகோதரி அவர்களுக்கு, நீங்கள் எனது பதவில் எழுதிய கருத்துரை எழுத்துரு (FONT) பிரச்சினை காரணமாக சரியாக புரியவில்லை

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 10, 2013 @ 18:01:59

   unicode ல் தானே எழுதினேன் புரியாமல் உள்ளதற்கு என்ன காரணம்!.
   எனக்குப் புரியவில்லை சகோதரா. பல கருத்திட்டேன் எது எனவும் புரியவில்லை.

   மறுமொழி

 11. கோவை கவி
  ஆக 05, 2013 @ 06:12:02

  from Ambaladiyal.’s request:-

  இனி நான் இந்தத் தொடரினைத் தொடர பணிவன்போடு அழைக்கும் வலைத்தள முகவரிகள் இங்கே .

  http://stethinkural.blogspot.ch
  Dr .முருகானந்தா ஐயா

  http://jaghamani.blogspot.com/
  சகோதரி இராஜராஜேஸ்வரி

  http://tamilvannamthiratti.blogspot.ch/
  வேதா இலங்காதிலகம் அம்மா

  http://tnmurali.blogspot.com/
  சகோதரர் T .N .முரளீதரன்
  http://tamizhmuhil.blogspot.com/
  சகோதரர் தமிழ் முகில் பிரகாசம்
  http://www.tamilaathi.com/
  சகோதரர் மாத்தி யோசி மணி

  இந்தப் பகிர்வில் யாரேனும் ஒருவர் முன்பு இந்தத் தொடரினைத் தொடர்ந்திருந்தால் அறியத் தாருங்கள் உறவுகளே.

  Vetha said:- Thank you Ambaladiyal….

  மறுமொழி

 12. Ambaladiyal
  ஆக 05, 2013 @ 06:28:25

  இங்கே சற்றுக் குழப்பாமாக உள்ளதம்மா .”என் கணணி அனுபவம் ”
  அதைத் தொடர்ந்து “என் முதற் பதிவின் சந்தோசம்” என்று இருவேறு
  தலைப்புக்களில் தொடர் பதிவுகளைத் தந்திருந்தனர் .இங்கே நீங்கள்
  இரண்டும் கலந்து எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கவில்லை .அப்படியாயின்
  நான் தான் வேறு இரண்டு பேரைத் தேர்வு செய்ய வேண்டும் .மிக்க நன்றி
  அம்மா விரைந்து பதிலளித்தமைக்கு .

  மறுமொழி

 13. seeralan
  ஆக 05, 2013 @ 21:29:45

  நல்ல அனுபவம் …மேலும் கணணி அறிவை பெற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்….

  enakkum கணனிக்கும் உறவு வந்து 15 வருடங்கள் ஆனால் ஒரு ரூபாய் பணம் கொடுத்தும் கற்றுக்கொள்ளவில்லை ( கஞ்சத்தனம் இல்லை அது காசு கடவுளான காலம்..) ….இப்போ எனக்கு எது தேவையோ அதை கூகிள் ,யூடியூப் ஊடக விளக்கமான காணொளிகள் மூலம் கண்டு தெரிந்து பயன் பெறுகிறேன்…!

  மறுமொழி

 14. Karanthai Jayakumar
  ஆக 06, 2013 @ 00:22:06

  தங்களின் கணினி அனுபவம் சுவாரசியம். அருமையாக எழுதியுள்ளீர்கள். சுருங்கச் சொன்னாலும் நிறைவு தரும் பதிவு. நன்றி

  மறுமொழி

 15. கோவை கவி
  ஆக 06, 2013 @ 09:08:03

  நாயகி கிருஷ்ணா and Seeralan Vee like this..in கவிதை தோட்டம் FB.
  Vetha ELangathilakam:- Thank you.

  மறுமொழி

 16. தி தமிழ் இளங்கோ
  ஆக 06, 2013 @ 17:26:31

  ஒரு தகவலுக்காக மட்டும் இதனை பதிவு செய்துள்ளேன்.

  அன்புள்ள ப்ளாக்கர் நண்பன் அப்துல்பாசித் அவர்களுக்கு வணக்கம்! எனது ” துள்ளித் துள்ளி ஓடும் வலைத்தளம் (http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_9497.html) என்ற பதிவிற்கு, தாங்களே முன்வந்து ஆலோசனை தந்து இருந்தீர்கள். உண்மையில் பயம் காரணமாக அதன்படி உடனே அதனை பின்பற்றவில்லை. இப்போது நீங்கள் சொன்னபடி எனது வலைப்பதிவில் மாற்றம் செய்து விட்டேன். தங்களுக்கு நன்றி! உங்களுடைய பதிவினை மேற்கோள் சொல்லி எனக்கு வழிகாட்டிய சென்னை பித்தன் அவர்களுக்கும், எனக்கு சொல்லுமாறு சொல்லிய ச்கோதரி அம்பாள் அடியாள் அவர்களுக்கும், மற்றும் இது விஷயமாக சுட்டிக் காட்டிய சகோதரிகள் கவிஞர் வேதா. இலங்காதிலகம் மற்றும் மனோ சாமிநாதன் அவர்களுக்கும் நன்றி!

  அன்புடன் – தி.தமிழ் இளங்கோ
  வலைப் பதிவு: எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL http://tthamizhelango.blogspot.com
  நாள்: 06.08.2013

  மறுமொழி

 17. abdulkadersyedali
  ஆக 07, 2013 @ 06:45:25

  சுவை பாராட்டுக்கள்

  மறுமொழி

 18. பி.தமிழ் முகில்
  ஆக 07, 2013 @ 23:31:13

  சுவையாக தங்களது முதல் கணினி அனுபவத்தைக் கூறியுள்ளீர்கள் கவியே. அருமை !!!

  மறுமொழி

 19. வித்யாசாகர்
  ஆக 08, 2013 @ 09:10:56

  வணக்கமும் நிறைய அன்பும் சகோதரி.. கொடுப்பவன் அவன்; அதை திறமை தொடுத்தது உங்களின் திறன் மற்றும் அறிவு, நீங்கள் கேட்டதற்கு கேட்டதை செய்ததே என் வேலை, அதென் கடமையும் கூட, என் சகோதரி பெருமையோடு வளம் வருவது எனக்குப் பெருமை, மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள், வருங்கலத்திற்குப் பாடமாய் உங்களின் எழுத்துக்களும் நிலைக்கட்டும்..

  நன்றிகளுடன்..

  வித்யாசாகர்

  மறுமொழி

 20. கோவை கவி
  ஆக 10, 2013 @ 18:06:40

  மிகுந்த நன்றி சகோதரா (வித்யாசாகர்)
  மகிழ்ந்தேன்.

  மறுமொழி

 21. maathevi
  ஆக 13, 2013 @ 12:05:05

  உங்கள் கணினி அனுபவங்களை அருமையாக தந்துள்ளீர்கள். மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  மறுமொழி

 22. கவியாழி கண்ணதாசன்
  ஆக 13, 2013 @ 13:43:11

  பழைய நினைவுகளை கோர்வையாக்கி சொல்வதே இதன் நோக்கம்.உங்கள் நோக்கம் நிறைவேறியது.மகிழ்ச்சியே

  மறுமொழி

 23. ranjani135
  ஆக 14, 2013 @ 11:35:47

  இப்படித்தான் நாம் எல்லோருமே கணணி வித்தகர்கள் ஆகியிருக்கிறோம் இப்போது!
  ‘தமிழ் பேசி தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்’ என்ற அழகிய வாசகம் கொடுத்த திரு வித்யாசாகர் அவர்களுக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: