18. பெண்ணெ உன் பங்கு பெரிது!.

423031_441831402543770_1633728792_n

பெண்ணெ உன் பங்கு பெரிது!.

 

மாசிலாப் பெண்ணே! உன்னை
மாற்று பண்புடை மனுசியாக
மானுடர் வியக்கவொரு முறையேனும்
மாறு மனிதநேய மனுசியாக!
கண்மணிப் பெண்ணெ! காட்டு
கருணைப் பெண்மை இவள்
கடமைப் பெண் இவளெனக்
கரிசனையா யென்றும்  காட்டு!.

 

சுந்தரப் பெண்ணே! பலவீன

சந்தர்ப்பத்தில் கீழே சாய்வது

நவீனப் பெண்மை அல்ல!

நேர்மை உறுதியுட னடியெடு!

சுதந்திரப் பாதையில் உன்

சுந்தரப் பாதம் நடந்தால்

தளிர்களின் மென் பாதமும்

தளர்வின்றிப் பின் தொடருமே!

 

மலர்ப் பெண்ணெ! மறவாதே!

பசியில் உணவிடுவோன் பெரியோன்

பசி  தீர்ந்திடினும் என்றும்

பகுத்தறிவில் நீ பசியடையாதே!

மரகதப் பெண்ணே! ஊனங்களை

மனதிலிருந்து வேரோடு அகற்று!

மங்கையரினப் பெருமையை நீ

மாநிலதிற்குப் பறைசாற்ற மறக்காதே!

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

7-2-2005.

 

 

floral-divider_9_lg236

 

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  ஆக 11, 2013 @ 08:58:08

  பெண்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் அழகான வரிகளுடன் ஓர் ஆக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  ஆக 11, 2013 @ 09:01:55

  மரகதப் பெண்ணே! ஊனங்களை

  மனதிலிருந்து வேரோடு அகற்று!

  மங்கையரினப் பெருமையை நீ

  மகத்தான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 3. கோமதி அரசு
  ஆக 11, 2013 @ 11:04:21

  மரகதப் பெண்ணே! ஊனங்களை

  மனதிலிருந்து வேரோடு அகற்று!

  மங்கையரினப் பெருமையை நீ

  மாநிலதிற்குப் பறைசாற்ற மறக்காதே!//

  பெண்ணின் பங்கு மிக பெரியது தான்.

  மங்கையருக்கு தன்னம்பிக்கை என்ற ஊட்ட சத்து மிகுந்த கவிதை.
  வாழ்த்துக்கள் வேதா, இலங்காதிலகம்.

  மறுமொழி

 4. ramani
  ஆக 11, 2013 @ 13:05:25

  இளம் வயது மங்கைகள் அனைவரும்
  அவசியம் அறிந்து கொள்ள விஷயங்களை
  அழகாகச் சொல்லிப்போனவிதம் மனம் கவர்ந்தது
  சிலருக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும்
  சிலருக்கு நன்றாக பரிமாறத் தெரியும்
  ஒரு சிலருக்கு மட்டுமே இரண்டும்
  மிகச் சரியாக வரும்
  தங்களிடம் அதைப்போல
  சிந்திக்கும் திறனும் அருமையாகப் படைக்கும் திறனும்
  இருப்பது மகிழ்வூட்டுகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. கோவை கவி
  ஆக 11, 2013 @ 14:41:58

  Sadhu Chandu – Email..

  mika sirappaana aakkam !
  ethenum mangaiyar dhina maa naattil pangettreergalo ?

  then
  saree very nice ….

  endrum neyamudan ,

  sravani.

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஆக 11, 2013 @ 15:38:14

  வணக்கம்
  சகோதரி
  பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய சக்திமிக்க(உணர்வு)வரிகள் வாழ்த்துக்கள் சகாதரி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 7. சீராளன்
  ஆக 11, 2013 @ 20:52:21

  பெண்ணின் பங்கது பெரிதே
  மண்ணின் மறை யதுவாக
  கண்ணின் மணிபோல் காத்திடில்
  விண்ணிடை யோரும் வியர்ப்பர்..!

  உயிரில் உயிரை சுமந்தாலும்
  உள்ளத்து வலியை நுகர்ந்தாலும்
  திரியினில் கருமை சேர்ந்திடில்
  திகழ் ஒளி இல்லை பாரில்..!

  மருவிடும் மாண்பைப் பேண
  மனதினில் கொள்வாய் செழுமை
  திருமகள் உன்னைத் தேடி
  வரும் புகழ் வாழ்வைச்சூடி ..!

  அழகிய அவசியமான கருத்துக்கள் சுமந்த கவிதை வாழ்த்துக்கள்

  மறுமொழி

 8. rajalakshmiparamasivam
  ஆக 12, 2013 @ 18:57:27

  பெண்களின் தன்னம்பிக்கையை உயர்வாய் சொல்லும் கவிதை வரிகள். அருமையாய் இருந்தது. ரசித்தேன்.
  வாழ்த்துக்கள்….தொடருங்கள்……

  மறுமொழி

 9. ranjani135
  ஆக 14, 2013 @ 10:04:48

  பெண் என்பவளின் பெருமையையும், அதை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் அழகான கவிதையில் படைத்துள்ளீர்கள், சகோதரி! வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 10. கீதமஞ்சரி
  ஆக 15, 2013 @ 12:38:54

  பதுமையென வாழ்ந்திடாது புதுமைப்பெண்டிராய் வாழ வழிகோலும் இனிய கருத்துரைகளை அழகிய கவிதையெனப் பகிர்ந்த தங்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள் தோழி.

  மறுமொழி

 11. கோவை கவி
  ஆக 20, 2013 @ 20:06:43

  முத்து பாலகன், Sundaram Krishnaswamy likes this..in FB தமிழ்ச் சங்கம் —-புலமைக்கு மட்டுமே.

  முத்து பாலகன்:- அருமை…

  Vetha ELangathilakam:- Mikka nanry.

  நாயகி கிருஷ்ணா, Ramanujam Ramji and Siva Rama Krishnan likes this in FB – கவிதை தோட்டம்.

  நாயகி கிருஷ்ணா:- arumai amma

  Vetha ELangathilakam:- mikka nanry.

  Jubilee Natarajan:_ ஊரார் நெஞ்சம் நிறைய–பூஞ்சோலையாய் மிளிர-வாழ்தல் நன்று–என்ற பகிர்வில்–காலை வணக்கம் கூறுவது உங்கள் அன்பு “ஜூபிளி ”

  Vetha ELangathilakam:_ kaalai vanakkam! Jubilee Natarajan.

  Luxshy Nageswaran likes this..inFB – கவிதை முகம்

  Vetha ELangathilakam:- Thank you.

  மறுமொழி

 12. தாரை கிட்டு
  ஆக 25, 2013 @ 19:12:33

  அம்மா,பெண்ணின் பெருமையை உயர்த்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 13. பழனிவேல்
  அக் 21, 2013 @ 09:46:50

  ஆழமான கருத்து
  அழகான கவிதை.

  மறுமொழி

 14. கோவை கவி
  ஆக 11, 2017 @ 15:05:37

  Genga Stanley :- nice.
  11 August 2013 at 23:51 ·
  சிறீ சிறீஸ்கந்தராஜா :- அருமையான பதிவு!! வாழ்த்துக்கள் அம்மா!!
  12 August 2013 at 00:41 ·

  Rajaji Rajagopalan :- பெண்களைப் பெண்களே நன்கறிவர். இல்லாமலா சொன்னீர்கள்,———-மங்கையரினப் பெருமையை நீ
  மாநிலதிற்குப் பறைசாற்ற மறக்காதே!
  12 August 2013 at 03:12 ·

  Vathiri C Raveendran :- super
  12 August 2013 at 04:41 ·

  Mageswari Periasamy:- அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது… அதிலும் மங்கையராய் பிறப்பது இன்னும் அரிது என்று சும்மாவா சொன்னார்கள். அதற்கேற்ப அருமையாக பெண்களின் பெருமைதனை விளக்கியுள்ளீர்கள். நன்று தோழி.
  12 August 2013 at 05:48 ·

  Sundrakumar Kanagasundram:- GOOD MORNING.Have a nice day.
  12 August 2013 at 06:12 ·

  Ganesalingam Arumugam :- வாழ்த்துக்களும் இனிய காலை வணக்கமும்.
  12 August 2013 at 06:30 ·

  Sakthi Sakthithasan :- அன்பினிய சகோதரி, பெண்கள் ஒரு சமுதாயத்தின் கண்கள் . இதனை உங்களைப் போன்ற ஒரு உயர்ந்த கவிதாயினி உரக்கச் சொல்லும்போது இதயம் சிலிர்க்கிறது
  12 August 2013 at 07:03 ·

  Verona Sharmila :- அருமை, வாழ்த்துக்கள்
  12 August 2013 at 09:39 ·

  Pushpalatha Gopalapillai:- படித்தேன்.மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டியது இப்போ மனப்பாடம் பாடம் பண்ணுகின்றேன்..மிகவும் அருமையான வரிகள்.. .வாழ்த்துக்கள் மேடம்.
  12 August 2013 at 10:08 ·

  Abira Raj :- மலர்ப் பெண்ணெ! மறவாதே!
  பசியில் உணவிடுவோன் பெரியோன்
  பசி தீர்ந்திடினும் என்றும்
  பகுத்தறிவில் நீ பசியடையாதே!
  மரகதப் பெண்ணே! ஊனங்களை
  மனதிலிருந்து வேரோடு அகற்று!
  மங்கையரினப் பெருமையை நீ
  மாநிலதிற்குப் பறைசாற்ற மறக்காதே!///அருமை
  12 August 2013 at 22:35 ·

  Paval Rajadurai:- அருமையான வரிகள்.. .வாழ்த்துக்கள் …….
  12 August 2013 at 23:24 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: