50. சிந்தும் முத்தம்…

550081_341251529323979_775776062_n

சிந்தும் முத்தம்…

இந்திர நீல முழுமை இரவில்

சந்திர முத்தம் ஆகாய நுதலில்.

சுந்தரக் கதிரவன் பகல் முழுவதில்

அந்தர முத்தம் ஆகாயம் பூமியில்.

அந்தி பகலில் தாரகைத் தேவதைகள்

தந்த முத்தம் எந்தச் சந்தில்!

காந்தப் பூமி உருண்டு சுழன்று

பாந்தமாய் முத்தம் வாங்கிச் செல்லுதோ!

இயந்திர சரசம் மாநிலம் முழுதும்

தந்திர சரசம் மானுடம் முழுதும்

உந்திக் குதித்து இதயக் கேந்திரத்தில்

குந்துதே இந்த மனச் (உணர்வுச்) சிந்து.

விந்தையெனக் கெந்து மிந்த உந்தல்

சந்தமோ வெறும் மந்தமோ அறியேன்.

விந்தைச் சிந்தையில் சிந்திய பந்தல்

பிந்தாது குந்தட்டும் மனப் பொந்திலே.

பா ஆக்கம் பா வானதி. வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

14-8-2013.

12720-22coloured

 

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  ஆக 14, 2013 @ 21:20:10

  அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

  நேரமிருந்தால் கீழ்க்கண்ட சிறப்புப்பதிவுக்கு வருகை தாருங்களேன்.

  http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 21, 2013 @ 20:30:09

   வந்தேன் இரு இடங்களிற்கும் சென்று கருத்திட்டேன் மிக்க நன்றி. ஐயா. இங்கும் வரவு தந்து கருத்திட்டமைக்கும் மிக்க மகிழ்வும். நன்றியும்.

   மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  ஆக 15, 2013 @ 02:17:23

  விந்தைச் சிந்தையில் சிந்திய பந்தல்

  பிந்தாது குந்தட்டும் மனப் பொந்திலே.

  விந்தை செய்யும் வரிகளுக்கு வாழ்த்துகள்..!

  மறுமொழி

 3. கீதமஞ்சரி
  ஆக 15, 2013 @ 12:35:40

  மனப்பொந்தில் குந்திக்கொண்டது கவிதைச்சிந்து. வரிக்கு வரி ரசனைமிகு கவிநயம். தாரகைத்தேவதைகளின் முத்தங்களை காந்தப்பூமி பாந்தமாய்ச் சுழன்று பெற்றுக்கொள்ளும் அதிசயத்தை நினைத்து நினைத்து வியக்கிறேன். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 4. mahalakshmivijayan
  ஆக 16, 2013 @ 03:39:02

  அழகான, அற்புதமான, மனதை வியக்க வைத்து கொள்ளை கொள்ளும் ஒரு கவிதை! வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

 5. ramani
  ஆக 17, 2013 @ 20:57:04

  சந்த அழகு குந்தியது
  எம்மனப் பொந்திலும்
  மனத்தைக் கிறங்க அடித்த கவிதை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. மகேந்திரன்
  ஆக 19, 2013 @ 03:24:02

  இனிய வணக்கம் வேதாம்மா…
  சொற்கள் எல்லாம்
  சந்தங்கள் படுகின்றன அம்மா…
  அழகிய .கவிதை..

  மறுமொழி

 7. sujatha
  ஆக 20, 2013 @ 06:05:27

  அந்தி பகலில் தாரகைத் தேவதைகள்

  தந்த முத்தம் எந்தச் சந்தில்!

  காந்தப் பூமி உருண்டு சுழன்று

  பாந்தமாய் முத்தம் வாங்கிச் செல்லுதோ!
  தேன் தமிழாய் இனிக்கின்றது கவிநயம்……. அருமை வாழ்த்துக்கள்
  “கவிதாயினி வேதா“.

  மறுமொழி

 8. sasikala
  ஆக 20, 2013 @ 06:13:01

  அந்தி பகலில் தாரகைத் தேவதைகள்

  தந்த முத்தம் எந்தச் சந்தில்!

  காந்தப் பூமி உருண்டு சுழன்று

  பாந்தமாய் முத்தம் வாங்கிச் செல்லுதோ!..
  அற்புதம் அற்புதம் வியந்து நின்றேன்.

  மறுமொழி

 9. பழனிவேல்
  அக் 21, 2013 @ 09:50:31

  எச்சத்தை
  அமிர்தமாக்கும்
  முத்தம்.

  அழகு.
  ரசித்து ருசித்தேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: