51. அதிகம் சிரிக்கிறான் ஆதவன்.

vector drawing

அதிகம் சிரிக்கிறான் ஆதவன்.

 

 

கதிரவன் கதிர் விரித்து

அதிகம் சிரிக்கிறா னருமையிது.

எதிர் கொள்வோ ரனைவரும்

அதிரசமுண்பதாயப்; பெரும்

குதிகொள்கிறார் குதிரை நடையில்.

 

பனியில் நனைந்து உணர்வுகள்

பனிக்கட்டியாகு மனுபவம் தினமும்

டெனிஸ் வாழ்வில் காண்பதால்

முனிவு தவிர்க்கிறது மனதில்

இனிக்கும் காதிரவன் கதிர்.

 

நல்ல கோடை வந்ததாம்

பொல்லாப் பனிக்காலம்

நில்லாது வருவ துறுதியாம்!

சொல்லாமற் சொல்கிறார் சோதிடம்

எல்லவன் கதிர் விரிக்கட்டும்!

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

23-8-2013.

 

(குதிரைநடை – கம்பீர நடை, பெருமிதநடை. எல்லவன் – சூரியன்.   முனிவு – சினம்)

 

 

 

 

0032

 

 

29 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  ஆக 23, 2013 @ 21:43:27

  கதிரவன் வரவில் இப்போது மகிழ்ந்து இருங்கள்.
  பனிக்காலம் வரும் வரை கதிரவன் அழகை ரசித்து வாருங்கள்.
  சிரிக்கும் ஆதவன் கவிதை அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 31, 2013 @ 05:57:19

   இந்தக் கிழமை இலேசாக மழை ஆரம்பிக்கிறது. இனி கதிரவன் சிரிக்கவில்லை.
   கருத்திற்கு மிகுந்த நன்றி…சகோதரி.(கோமதி அரசு)

   மறுமொழி

 2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஆக 24, 2013 @ 00:00:15

  வணக்கம்
  சகோதரி
  பனியில் நனைந்து உணர்வுகள்
  பனிக்கட்டியாகு மனுபவம் தினமும்

  என்னவரிகள் அருமை கவிதை மிகமிக நன்று வாழ்த்துக்கள் சகோதரி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 24, 2013 @ 02:19:44

  அழகு.. அருமை.. பாராட்டுக்கள் சகோதரி…

  இது போல் தொடர வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 4. ramani
  ஆக 24, 2013 @ 03:19:30

  கிராமங்களில் நல்லா
  காய்றது காய்ந்தால் தான்
  பெய்வதும் நல்லா பெய்யும் எனச் சொல்வார்கள்
  அதனைத் தாங்கள் அழகு தமிழில் சொன்னதைப்
  படித்து சொக்கிப்போனேன்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  ஆக 24, 2013 @ 03:21:14

  இனிக்கும் கதிரவன் கதிர்.
  இனிமை சேர்க்கட்டும் ..!

  மறுமொழி

 6. கோவை கவி
  ஆக 24, 2013 @ 05:50:36

  Sravani’s email…….
  Sadhu Chandu
  til mig (to me)
  HI ,
  aathavan padal azhagu , arumai !

  B/B what is munivu ?

  kulir ?……

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 31, 2013 @ 06:08:31

   முனிவு – கருத்து உடனே பதிவிலேயே போட்டு விட்டேன். முதலிலேயே அதையும் சேர்க்க இருந்தேன் , மறந்திட்டேன். கருத்திடலிற்கு மிகுந்த நன்றி ஸ்ரவாணி.
   மிக மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 7. கீதமஞ்சரி
  ஆக 24, 2013 @ 06:14:55

  நடுங்கவைக்கும் குளிர்காலம் முடியவிருக்கும் எங்களுக்கும் வரவிருக்கும் வசந்தகாலமும் தொடரும் கோடைக்காலமும் வரப்பிரசாதம். கதிரவனின் வருகையை எண்ணி குதூகலிக்கச் செய்யும் கவி வரிகளுக்குப் பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 31, 2013 @ 06:12:01

   கதிரவன் வருகை வெளிநாட்டில் எவ்வளவு கொண்டாடப் படுகிறது!
   அதன் வெளிப்பாடு தான் என் கவிதை.
   இரசனை மிகு கருத்திடலிற்கு மிகுந்த நன்றி சகோதரி கீதமஞ்சரி.

   மறுமொழி

 8. ranjani135
  ஆக 24, 2013 @ 13:15:09

  கோடையும், குளிரும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. அதில் கதிரவன் கொண்டு வரும் கோடையை எல்லோருமே விரும்புவார்கள்.
  கவிதை வரிகள் அருமை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 31, 2013 @ 06:13:14

   கதிரவன் வருகை வெளிநாட்டில் எவ்வளவு கொண்டாடப் படுகிறது!

   இரசனை மிகு கருத்திடலிற்கு மிகுந்த நன்றி சகோதரி Ranjani.

   மறுமொழி

 9. bagawanjee
  ஆக 24, 2013 @ 14:20:20

  கோடையையும்.மழையையும் ரசிப்பதே வாழ்க்கையில் இன்பம் !

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 31, 2013 @ 06:19:27

   முதல் வருகை! மிக நன்றி.
   கருத்திடலிற்கு மிகுந்த நன்றி.
   ஏன் இந்தப் பெயர்!!!!???
   சிலர் மதம் என்று தூர நிற்கலாமல்லவா!
   இது என் கருத்து மட்டுமே.

   மறுமொழி

 10. Karanthai Jayakumar
  ஆக 26, 2013 @ 00:20:04

  அருமையான கவிதை. ஒரு அன்பான வேண்டுகோள்
  தங்கள் தளத்தில் Followers Gadget இணைப்பீர்களேயானால் தொடருவதற்கு வசதியாக இருக்கும். நன்றி

  மறுமொழி

 11. sasikala
  ஆக 26, 2013 @ 06:17:39

  வெகு சிறப்பான வரிகள். மிகவும் ரசித்தேன்.

  மறுமொழி

 12. T.N.MURALIDHARAN
  ஆக 26, 2013 @ 14:09:05

  எல்லவன். நான் இதுவரை அறியாத வார்த்தை. புது வார்த்தைகளால் பாக்கள் புனையும் திறமை பெற்றிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

  மறுமொழி

 13. கோவை கவி
  ஆக 26, 2013 @ 15:23:17

  Yashotha Kanth likes this..in fb ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
  Yashotha Kanth :- அருமை அக்கா
  Vetha ELangathilakam :- mikka nanry yasho…..I am glad.
  Vishnu Rajan :- அருமை சகோ …
  Vetha ELangathilakam :- mikka nanry Vishnu…..

  மறுமொழி

 14. sujatha anton
  செப் 03, 2013 @ 19:24:24

  நல்ல கோடை வந்ததாம்

  பொல்லாப் பனிக்காலம்

  நில்லாது வருவ துறுதியாம்!

  சொல்லாமற் சொல்கிறார் சோதிடம்

  எல்லவன் கதிர் விரிக்கட்டும்! அருமை…….காலநிலை மாற்றம்
  நம்மை மனமுடையவைக்கின்றது உண்மை….. கவிநயம் அருமை..

  மறுமொழி

 15. கோவை கவி
  செப் 29, 2013 @ 05:33:28

  Sujatha தங்கள் கருத்திடலிற்கு ரசனைக்கு மிகுந்த நன்றி.
  மிக மகிழ்ந்தேன்

  மறுமொழி

 16. பழனிவேல்
  அக் 15, 2013 @ 05:35:55

  “அதிகம் சிரிக்கிறான் ஆதவன்”

  கவியும் அழகு.
  தலைப்பும் அழகு.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: