52. நித்திய நிரந்தரங்கள்.

bullock_cart

நித்திய நிரந்தரங்கள்.

 

 

விடிகாலை ஓசை ஆரவாரங்கள்

          துடிப்பான புலர்தல் அலங்காரங்கள்

புதுக்காலை இயற்கை அலாரங்கள்.

           எக்காலையு மிவைகள் நிரந்தரங்கள்.

மாட்டு வண்டிச் சப்தம்,

            ஆட்டும் சலங்கைச் சப்தம்,

ஓட்டும் வேகக்  குலுங்கல்

             கேட்டுத் தூக்கம் அலுக்கும்.

 

ஓடிடும் முதற் பேருந்து

             ஊடும் பெருமூச்சு விருந்து.

ஆலயமணியின் காலை ஆலாபனை

             ஆன்மாவின் ஆலிங்கன அருச்சனை!

மாமரத்துக் குடை முன்றில்

              சாமரம் வீசும் இளந்தென்றல்

பாசுரமாக்கும் சுகம் என்றும்.

              நாதசுரமாக்கும் புதுக்காலை மன்றில்.

 

இலுப்பைக்கனி மாங்கனிகளை வெளவால்

              பழுக்கக்கொத்தும் பாங்கின் எக்காளம்,

கிளுகிளுத்த கும்மாளம்  மௌனத்திரை

              கிழிக்கும் ரௌம்மிய இசைத் தட்டாய்!

சேவல் கூவும் இராகமுலகை

               ஏவல் செய்வது காலையிளமை!

சேவல் காலைக்காவற் பறவை!

               மேவுமிவை அதிகாலைப் பெருமை!

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

17-1- 2003-   ரி.ஆர். ரி தமிழ்அலையில்

2006   இலண்டன் தமிழ் வானொலியில்

 

(முன்றில் – வீட்டின் முன்புறம்.  முன்றில் – வாயில் முற்றம்.)

 

M 1

 

 

Advertisements

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  ஆக 28, 2013 @ 07:29:46

  மிகவும் அருமையான ஆக்கம். இன்று இதேபோன்ற மகிழ்ச்சிகள் எங்கும் எல்லோருக்கும் கிடைப்பதில்லையே என்ற ஏக்கம்.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு ந்ன்றிகள்.

  இதே எண்ணத்தில் நான் எழுதியதோர் கவிதை. நேரம் இருந்தால் போய்ப்படியுங்கள்.

  http://gopu1949.blogspot.in/2011/04/blog-post.html
  அந்த நாளும் வந்திடாதோ [கவிதை]

  மறுமொழி

 2. தி தமிழ் இளங்கோ
  ஆக 28, 2013 @ 07:49:46

  தாங்கள் அதிகாலையிலேயே துயில் எழுந்திடும் பழக்கம் உள்ளவர் என்று நினக்கிறேன். அதிகாலை நேரத்தில் ஒலித்திடும் பறவைகள் ஒலி, வண்டிச் சத்தம், பேருந்தின் மூச்சு என்று உங்களது பழைய நினைவுகள் அருமை.
  //இலுப்பைக்கனி மாங்கனிகளை
  வெளவால் பழுக்கக்கொத்தும்
  பாங்கின் எக்காளம், //

  வவ்வாலைப் பற்றிய வரிகள் இக்கால ஹைக்கூ கவிதை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 28, 2013 @ 08:05:49

   ஆம்! இப்போது 6.30க்கு எழுகிறேன்.

   ஊரில் எங்கள் வீடு (நான் வளர்ந்த வீடு) ஓர் ஒழுங்கையுள் இருந்தது. பெரிய வளவு (இறுதிப்பந்தி) என் வீடடு அனுபவம். சிறுவராக இருந்த போது தெருவோரம் இருக்கும் பெரியப்பா வீட்டில் துயின்ற போது மாட்டு வண்டிச் சத்தமும் முதற் பேருந்தும் அங்கு பெற்ற அனுபவம்.
   இன்றும் ஆணியடித்ததாக அருமை – இனிமையாக மனதில் உள்ளது.
   கருத்திடலிற்கு மகிழ்ந்தேன்.
   இனிய நன்றி

   மறுமொழி

 3. Mrs.Mano Saminathan
  ஆக 28, 2013 @ 08:42:49

  மாட்டு வண்டியில் பயணம் செய்த நாட்களின் இனிமை இன்னும் நெஞ்சில் மிச்சமிருக்கிறது. பழைய நாட்களின் நினைவலைகள் அவ்வப்போது இப்படித்தான் மேலெழும்பி ஏக்கத்தை வரவழைக்கிறது.
  அருமையான கவிதை!!

  மறுமொழி

 4. ramani
  ஆக 28, 2013 @ 10:06:36

  ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
  என்கிற பாடலைக் கேட்கையில்
  பாடல் வரிகளும் இசையும் அந்த
  அதிகாலை நேரத்தை மனத்தினுள்
  கொணர்ந்து சேர்க்கும்
  அதே உணர்வை தங்கள் கவிதையும்
  படிப்பவர் மனதில் உண்டாக்கிப்போகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. கோமதி அரசு
  ஆக 28, 2013 @ 11:02:59

  அருமையான காலை பொழுதின் காட்சிகள் கண் முன்னே கவிதையாக கொண்டு வந்து விட்டீர்கள். இலங்கை போன போது கைவினை பொருள் விற்கும் கடையில் அழகான மாட்டு வண்டி வாங்கி வந்தேன்.. .

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 31, 2013 @ 07:36:15

   ஓ!..மாட்டு வண்டில் ! பார்த்துப் பார்த்து இன்புறுங்கள்!
   மிக்க மகிழ்ந்தேன் சகோதரி தங்கள் இனிய கருத்திற்கு.
   மனம் நிறை நன்றி.

   மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  ஆக 28, 2013 @ 12:44:39

  மாமரத்துக் குடை முன்றில்

  சாமரம் வீசும் இளந்தென்றல்

  பாசுரமாக்கும் சுகம் என்றும்.

  நாதசுரமாக்கும் புதுக்காலை மன்றில்.

  பரவசப்படுத்தும் ஆக்கம் ..
  பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 7. sasikala
  ஆக 29, 2013 @ 07:52:36

  தங்கள் மலரும் நினைவுகள் என்னிலும் கிராமத்து நினைவுகளை எழுப்பிச்சென்றது. மிக அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 31, 2013 @ 07:38:39

   ஓ! கிராமத்து நினைவு ! எப்படி மறப்பது!
   மிக்க மகிழ்ந்தேன் சகோதரி தங்கள் இனிய கருத்திற்கு.
   மனம் நிறை நன்றி.

   மறுமொழி

 8. மகேந்திரன்
  ஆக 29, 2013 @ 07:58:59

  அதிகாலைப் பொழுதின்
  ஆரோகணம் மனதில்
  ஊஞ்சலாடுகிறது வேதாம்மா..
  உங்கள் கவி கண்டு…

  மறுமொழி

 9. வேல்முருகன்
  ஆக 29, 2013 @ 12:43:47

  இயந்தரமாயமாக்கலில், மாட்டு வண்டி, வில்லு வண்டி, குதிரை வண்டி என பயணம் செய்த அனுபவங்கள் இப்போது மாறி விட்டது.

  வண்டி மாடு கட்டி தோட்டம் சென்று கமலை கட்டி நீரிறைத்த காலமும் போச்சு. அதன் நிழற்படமோ! நினைவலைகளை தட்டி எழுப்புது.

  மறுமொழி

 10. karanthaijayakumar
  ஆக 30, 2013 @ 01:46:14

  கடந்த கால் நினைவலைகள் இனியவை

  மறுமொழி

 11. mahalakshmivijayan
  ஆக 30, 2013 @ 05:05:01

  ஒரு காலை நேரம் நடக்கும் விஷயங்களை என்ன அருமையா கவிதை வடிவில் சொல்லி, கலக்கிட்டீங்க போங்க 😀

  மறுமொழி

 12. sujatha anton
  செப் 03, 2013 @ 19:21:00

  கிளுகிளுத்த கும்மாளம் மௌனத்திரை

  கிழிக்கும் ரௌம்மிய இசைத் தட்டாய்!

  சேவல் கூவும் இராகமுலகை

  ஏவல் செய்வது காலையிளமை!
  அருமை…. புலரும் காலைப்பொழுதின் கவிநயம் தேசத்து பூமிக்கு
  அழைத்து சென்றுவிட்டது. வாழ்த்துக்கள் !!!!! ”கவிதாயினி வேதா”.

  மறுமொழி

 13. பழனிவேல்
  அக் 15, 2013 @ 05:40:12

  கிராமத்து நினைவை கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.

  மிகவும் ரசித்தேன்.
  அருமை…

  மறுமொழி

 14. கோவை கவி
  செப் 03, 2014 @ 17:06:42

  You, சிறீ சிறீஸ்கந்தராஜா, Muruguvalli Arasakumar, Kannan Sadhasivam and 3 others like this.

  சிறீ சிறீஸ்கந்தராஜா:-
  அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!!

  Vetha Langathilakam:-
  mikka nanry..

  மறுமொழி

 15. கோவை கவி
  செப் 04, 2014 @ 06:59:48

  யதார்த்தவாதி விஸ்வாமித்ரர்:-
  அருமை!!

  Vetha Langathilakam:-
  Mikka Nanry,

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: