283. உள் முகம் அதிசயம்!!!!…

408519_342176865898112_89041423_n

உள் முகம் அதிசயம்!!!!…

 

 

தாகம் தீவிர அறிவுத் தாகம்.

மோகம் நிறை தமிழின் தாகம்.

தாகம் தணியாத அன்புத் தாகம்.

நாகம் போன்றது பணத்தின் தாகம்.

 

பாகம் பாகமாய் பலவகைத் தாகம்

பாகம் பிரிக்கு மெத்தனை ராகம்!

தேகம் தேயச் சாவு வரையும்

தாக வேகத் தவிப்பி லுலகம்.

 

ஏகமா யிவை எதிரொலிக்கும் வேகம்

மேகம் தொடவும் பாதாளம் வரையும்

சோகம், இன்பம் தொடர் முயற்சியாய்

ஊகம், உறுதியாய் உயரும் வரைக்கும்!

 

அயராத வரைக்கு  மதற்கு அப்பாலும்

உயரம் தொடவும் அடுத்தொரு தாகம்

யுகயுகமாய்ப் பல ராகம் மனிதனுள்

புகும் தாக உள்முகம் அதிசயம்!

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

28-8-2005.      

 

4.2006 இனிய நந்தவனம் இதழில் பிரசுரமானது.

 

 

pink-swirl-divider-1

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. kuttan
  ஆக 30, 2013 @ 08:58:22

  எத்தனை தாகங்கள்!
  அருமை!

  மறுமொழி

 2. கோமதி அரசு
  ஆக 30, 2013 @ 10:03:23

  தாகம் தணியாத அன்புத் தாகம்.

  நாகம் போன்றது பணத்தின் தாகம்.//
  சரியாக சொன்னீர்கள்.
  அன்புதாகம் தணியாது.
  பணத்தின் மேல் வைக்கும் தாகம் நாகம் போன்றது தான்.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  ஆக 30, 2013 @ 11:01:25

  அயராத வரைக்கு மதற்கு அப்பாலும்

  உயரம் தொடவும் அடுத்தொரு தாகம்

  யுகயுகமாய்ப் பல ராகம் மனிதனுள்

  புகும் தாக உள்முகம் அதிசயம்!

  தாகங்கள் தீரட்டும் ..!

  மறுமொழி

 4. VAI. GOPALAKRISHNAN
  ஆக 30, 2013 @ 11:52:41

  தாகங்கள் என்றும் ஓய்வ்தில்லை. நல்லதொரு ஆக்கம்.

  மறுமொழி

 5. வேல்முருகன்
  ஆக 30, 2013 @ 14:35:35

  மானுட வளர்ச்சியே தாகத்தினால்தானே

  மறுமொழி

 6. கோவை கவி
  ஆக 30, 2013 @ 17:00:20

  from email :_
  hi ,
  / நாகம் போன்றது பணத்தின் தாகம். /

  unmai. kollum. arumai ulmugam.

  nandri !

  -sravani

  மறுமொழி

 7. mahalakshmivijayan
  ஆக 31, 2013 @ 04:14:37

  எத்தனை எத்தனை தாகங்கள் கவியே! படித்து ரசித்து, தமிழ் மொழியின் மீது கொண்ட தாகத்துக்கும் தீர்வு கண்டேன் 🙂

  மறுமொழி

 8. கீதமஞ்சரி
  ஆக 31, 2013 @ 05:39:45

  \\தேகம் தேயச் சாவு வரையும்
  தாக வேகத் தவிப்பி லுலகம்.\\

  மனத்தைக் கவர்ந்த கருத்தும் கவியும். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 9. sasikala
  ஆக 31, 2013 @ 07:26:06

  மோகம் நிறை தமிழின் தாகம்.மிகச்சரியாகவும் அழகாகவும் சொல்லிவிட்டீர்கள். நன்றிங்க.

  மறுமொழி

 10. பழனிவேல்
  அக் 15, 2013 @ 05:12:54

  “பாகம் பாகமாய் பலவகைத் தாகம்
  பாகம் பிரிக்கு மெத்தனை ராகம்!
  தேகம் தேயச் சாவு வரையும்
  தாக வேகத் தவிப்பி லுலகம்.”

  எத்தனை தாகங்கள்!
  தாகங்கள் என்றும் தீர்வதில்லை…
  அருமையான ஆக்கம்.
  அழகிய படைப்பு.

  மறுமொழி

 11. கோவை கவி
  ஆக 31, 2017 @ 08:00:08

  Verona Sharmila :- தாகம் தீவிர அறிவுத் தாகம்.
  மோகம் நிறை தமிழின் தாகம்.
  தாகம் தணியாத அன்புத் தாகம்.
  நாகம் போன்றது பணத்தின் தாகம். அருமை ..
  31 August 2013 at 09:55 ·

  Vetha Langathilakam Mikka nanry sis Verona Sharmila….
  31-8-2017

  மறுமொழி

 12. கோவை கவி
  மார்ச் 25, 2019 @ 19:40:05

  Verona Sharmila :- தாகம் தீவிர அறிவுத் தாகம்.
  மோகம் நிறை தமிழின் தாகம்.
  தாகம் தணியாத அன்புத் தாகம்.
  நாகம் போன்றது பணத்தின் தாகம். அருமை ..
  2014
  Vetha Langathilakam :- Mikka nanry sis Verona Sharmila….

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: