286. பரிமாணம் – பிரமாணம்.

4202462447_c7f65b0196

பரிமாணம் – பிரமாணம்.

 

ஆர்வ மனம் ஆரோக்கியமுடன்

தீர்மானங்கள் தீட்டுகிறது திறனுடன்.

நிர்மாணிக்க வாழ்நாளை முழுமையுடன்

நிர்மாணிக்கிறோம் ஊக்கமுறுதியுடன்.

 

தீர்மானித்தலும் நல் தீர்வை

நிர்ணயித்தலும் கூர்ப்புடை சுயகாரியம்.

தீர்மானத் திட்டம் தீட்டலில்

தீர்கிறது சிலரது சீவியம்.

 

தீர்மானம் வருடா வருடம்

நிர்ணயிப்பதும், வாழும் முறையால்

தீர்மானமாவதும் சுய பிரயத்தனம்.

தீர்வு செயலாகுதல் பிரதானம்.

 

தீர்மானப் பரிமாணம் உகந்திடில்

சேர்மானமாகிறது செயற் திட்டத்தில்.

நேர்மைக் கருத்து குமுகாயத்தில்

கீர்த்தியடையும் வெகு ஈர்ப்புடன்.

 

கரைகாணா ஆளுமைச் சிதறல்

வரையிடும் பயணப் பரிமாணத்தில்.

தரையில் நின்று நிதானித்தல்

புரையற்ற பயண அடித்தளம்.

 

(பரிமாணம் – அளவு.  பிரமாணம் -விதி, ஆதாரம்.

புரை – குற்றம்.  வரையிடும் – எல்லையிடும்.

கூர்ப்புடன் – கூர்மை, அறிவுநுட்பம். குமுகாயத்தில் – சமுதாயத்தில் )

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

2012.

 

 

last line

45. எனக்கிது புதிது.

254610_225421057501959_2224213_n

எனக்கிது புதிது.

களியிது மெல்லக் கனியுது.

குளிருது இளம் தளிரிது.

மலரிது என்னை மயக்குது.

மதுவிது நல் மாதிது.

எனக்கேயிது புதிது.

படியுது நிறை பாசமிது.

நெடியது நீண்டு வருவது.

மெலியது இளம் கொடியிது.

வலியது வாழ்வுக் கோலமிது.

பலமிது உறவுப் பாலமிது.

துணைக்கிது வெகு தேவையிது.

இணையுது எதற்கிணையிது!

அணைக்கவிது தீ அணையுது.

அன்பிது பழகி அறிவது.

துன்பமிது பழகி விலகுவது.

தேடுவதிது சுகம் நாடவிது.

பாடலிது பக்குவ இராகமிது.

நடிப்பிது அன்றேல் இனிப்பது.

வெடிப்பது, கடிப்பது, விதைப்பது,

துடிப்பது எல்லாமுமான அரங்கிது.

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

9-2013.

Nyt billede

31. ஆராத ஆசை

580989_130759073731917_932147182_n

ஆராத ஆசை

 

ஊரான பிறந்த ஊரை

யாராலே மறக்க முடியும்!

ஆராத ஆசையங்கு

சீராட எம்முறவுகளோடு.

 

வேராகவிருந்த பல

ஏராளம் உறவுகள் இன்று

ஊராள உலகில் இல்லை

சீராட முடியா நிலை.

 

தோராயம் கொண்ட ஆசை

நேராதல் கடும் சிரமம்.

பேராசையென்பதில்லை.

தீராது இந்த ஆசை.

 

(தோராயம் – எதிர்பார்ப்பு.  நேராதல் -சரியாதல்.)

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

25-9-2013.

 

 

chainborder

59. கவிதை பாருங்கள்(photo,poem)

ovalornateframe-graphicsfairy002b[1]---l

வேறுபாடற்ற பார்வையும்
ஆறுதல் பேச்சும்
கூறுபடுத்தாது வாழ்வை.
தேறுதலாக தோளில்
மாறுபாடின்றச் சாய்தல்
வேறென்ன வேண்டும்
இது போதுமே!

scne-2

மன்னவனும் தேடிவந்தான்
மான் விழியாள் நாணிவிட.
பின்னையதைக் கூறிவிட
பிறைநிலவும் நாணிவிடும்.

imagesCADKKMCK

285. வேர்கள்.

buttress-roots-eastern-amazon-ecuador-1920x1080

வேர்கள்.

வேர்கள் ஓடி வேளாண்மையாக

வேதனமானது வாழ்வெனும் தேர்.

அன்பு நம்பிக்கையின் வேர்

இன்ப உறவின் ஊர்

தென்புடன் அன்பைச் சேர்!

நம்பிக்கை நேர்மையின் வேர்

நேர்மை நற்பண்பின் வேர்

நேரான மனிதனாய் வாழ்ந்து பார்!

நற்பண்பு நல் மனிதத்து வேர்.

சொற்பண்பு தூய்மைக்குத் தூர்.

உறவு சமுதாய ஆணிவேர்

துறவைத் தூரத்தள்ளும் பார்!

ஆசை எதிர் பார்ப்பின் வேர்

எதிர்பார்ப்பு கவலையின் ஊர்

மனிதரின் நோய்க்கு ஊர்.

மாட்டிக் கொள்ளாதோர் யார்!

காதல் கல்யாணத்தின் வேர்.

காதலில் வீழாதார் யார்!

கல்யாணம் சந்ததியின் வேர்

பல்லாண்டாய் உலகத்து நார்.

சந்ததி சமுதாயத்து வேர்

சமுதாயம் உலகத்து வேர்.

வேரோடி விழுது வரும்

ஊரோடி உறவு வரும்.

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

6-5-2002.

divider1

20. அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ!

536276_450646624964029_1236563118_n

அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ!

உளம் திறந்து பழகாமல்

உணர்வுகள் உள்ளே உறைந்திட

உதட்டை இறுக மூடுபவளே!

உதட்டுச் சாயமிட்டு மறைப்பவளே!

உனது திறமை வீணே

உறைபனி யாகிறது தானே!

உறைந்து போவதில் என்ன

உல்லாசம் உனக்குப் பெண்ணெ!

முழுதாய் நாலு வார்த்தை பெற

மூடிய உதட்டைத் திற!

ஆர்வம் நிறை விழிகளால்

அகலத் திறந்து பார்!

சேலைக் கேற்ற மாலை

மாலைக் கேற்ற காதணி

வேளைக் கேற்ற தலையலங்காரம்

விலையோ அளவற்றவுன் திறமைக்கு!

அலங்காரப் பதுமை யல்ல

அறிவுச்சுடர் நீ! – பிறர்

அகவிதழ் திறக்கச் செய்!

அறிவெனும் அகல் விளக்கையேற்று!

சிறுமைப் படுத்திச் சீண்டுவோரை

சிந்திக்கச் செய் பெண்ணே!

சிந்தனையை ஓட விட்டு

சிலிர்த்து எழு பெண்ணே!

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

2-12-2001.

 

  BR533

29. தமிழ்த்தேன்

 12299119_981999901857709_556712719288972527_n

தமிழ்த்தேன்  

 

அளைந்தேன் இலக்கியத் தேன்

அரும் தேன் மலைத்தேன்.

தமிழ்த்தேன் ரசித்தேன் மலர்ந்தேன்.

களித்தேன் இது மலைத் தேன்.

இசைந்தேன் மனதில் எடுத்தேன்

இணைந்தேன் இனிதாய் சுவைத்தேன்.

கோர்த்தேன் சிந்தாது வரைந்தேன்.

எழிற்தேன் பதித்தேன் செழித்தேன்.

எடுத்தேன் உயர்ந்திட உழைத்தேன்.

உணர்ந்தேன் அருந்தியதால் குளிர்ந்தேன்.

கவித்தேன் பிறரிற்குக் கொடுத்தேன்.

நிறைந்தேன் நிம்மதியாய் சுவாசித்தேன்.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

10-9-2013.

green line-2

58. கவிதை பாருங்கள்(photo,poem)

header-2

பெண்மை.

உறைநிலை மடமையை உடைக்கும் முயல்கை
இறைநிலை உயர்வை அறிவினால் உயர்த்துகை
தறையான தரிசிலில் அறிவினை நடுகை
கறையிலாப் பெண்மையின் களநிலைப்  பெருமை.

money-background-border-14180503[1]-a

line3

19. யார்..யார்! + இருமனம் இணையும்திருமணம்.

imagesCA4VP6VF

*

யார்..யார்!……..

*

யார் கண்டு பிடித்தார் கல்யாண பந்தம்!

வேர் கொண்டு சுயம் அழித்து

தூர் பசளையாகும் பிரதான

ஓரிணைப்பு குடும்ப மரத்தில்.

*

கரைந்து நாளும் கரைந்து

விரைந்து வீட்டைப் பேணி

அரைந்து பெண்ணானவள் தன்னை

அழிப்பது தான் திருமணமோ!

*

வெயிலில் உருகும் பனியாய்

எல்லைகள் வகுத்தலாலே எழுகிறது

பொல்லாத தொல்லைகள் பெண்ணுலகில்.

இல்லை!…யார் இணைத்தாரிதை!

*

கலைந் தோடிய கனவுகளால்

கண்ணீரில் வரையும் வரிகள்

காணாமல் போய் நல்

கனவுகள் உயிர்க்க வேண்டும்!

*

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.   2012.

*****

கம்பன் கவிக்கூடம் கவிதை

இருமனம் இணையும்திருமணம்.

*

இருமனம் இணையும் திருமணம்
பெரும் புனிதம்
அரும் உறவதன் பெருமை
அருகி வருகிறது.
அருவருப்புடை அடக்கு முறை
பெருந் தொல்லையாகிறது.

*

திருமணம் என்றால் விலகுவோரும்
இருமனம் இணையாமலதன்
உருவிழத்தலுமின்று வெகு சாதாரணம்.
உருகுதலென்பது அன்பிலில்லை..
உருவும் உரிமைகளால் தொலைகிறது
எருவெனும் காதல்.

*

எருக்கம் பூவாகிறது பிரியம்.
ஒருமைப் பாடழிகிறது.
ஒரு மனப்படும் வசந்தமே
ஒருங்கிணையும் வாழ்வாகும்.
திருமண வாழ்வின் கருமுகில்
கருவம், சுயநலம்.

*

கரும்பாம் மன்னிக்கும் மனம்
கருணைச் சாரலாகும்
இரும்பு மனம் இளகுதல்
திருமணத்தின் சாதகம்
கருங்கலமான உறவு மிகக்
கருத்தாய் காத்திடணும்.

*

அருமைச் சுகாதாரம் திருமணம்.
கருமணியாய்க் காக்கலாம்.
குரு சந்திர யோகம்
இருமனமிணையும் திருமணம்.
குருகுல வாசமாயும் காக்கலாம்
குழந்தைகள் வாழ்வுக்காக.

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 2112-2016

*

திருமணம்

திரு நிறைந்து சுகாதாரமாய்
திருக்காப்புடன் குறையின்றி வாழ்வதுவாய்
திருமணம் புகுந்தது கட்டுப்பாடாய்
ஒரு தாலி கட்டுவதாய்.
திருட்டி விழுந்தது போலாச்சு
திருத்தமற்று மதிப்பு இழந்தாச்சு.
*
திருமணச் சட்டம் தூசியாச்சு
ஒருமன எண்ணம் காணாமலாச்சு
திருவாசகமாய் திருமண வாழ்வை
ஒருவாசகமாய் வாழுமொரு மனதாளர்
அருமையாய் போற்றி வாழ்வோர்
பெருவாழ்வு வாழுவோருமுளர்.
*
திருவோடு ஏந்துவதாய் நீதிமன்றத்தில்
திருவமுதாக விவாகரத்தை வேண்டுவோர்
திருத்தம் சிறப்பென்று மறுமணத்தை
விருப்போடு தேடுகிறார் விதியென்று.
திருமணப் புனிதம் போற்றுதல்
அருமை நினைவு காத்திடுங்கள்.
*
பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 6-3-2016
*

DB-02

 

284. சாணோ முழமோ சாதிக்கலாம்

1151080_650799724938281_238437513_n

சாணோ முழமோ சாதிக்கலாம்.

 

வானோ நிலமோ வாழும் காலத்தில்

          வீணே இலையுதிர் கால மரங்களாய்

கானோ கரையிலோ இலைகள் உதிர்த்து

           தூணோ துரம்பாய் காலம் கழியாது

ஊனோ உயிரோ உருகும் உழைப்பில்

            சாணோ முழமோ சற்றேனும் சாதிக்கலாம்.

ஆணோ பெண்ணோ தன்னடிச்சுவடு பதிக்கலாம்.

            ஏனோ தானோவெனும் வாழ்வைத் தவிர்க்கலாம்.

 

ஏனொ தானோவென மழலையும் தவழ்வதில்லை.

            வீணே உலகில் தானென்று எண்ணுவதில்லை.

நானோ நீயெனும் போட்டியும் அதற்கில்லை.

             தானே தனியே தடம் பதிக்கும் முல்லை.

நாணோ நரம்பென முறுக்கான இணைப்பாய்

              கூனோ குருடோ குறிக்கோள் கொண்டு

கோனோ கோடீசுவரனாய்க் கோட்டை அமைக்கலாம்.

              கோடரிக் காம்பாகாது கிரீடம் சூடலாம்.

 

 

(கோட்டை – ஒளிவட்டம்.  கோன் –  அரசன்.)

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

30-7-2005

 

 

bordertrans