284. சாணோ முழமோ சாதிக்கலாம்

1151080_650799724938281_238437513_n

சாணோ முழமோ சாதிக்கலாம்.

 

வானோ நிலமோ வாழும் காலத்தில்

          வீணே இலையுதிர் கால மரங்களாய்

கானோ கரையிலோ இலைகள் உதிர்த்து

           தூணோ துரம்பாய் காலம் கழியாது

ஊனோ உயிரோ உருகும் உழைப்பில்

            சாணோ முழமோ சற்றேனும் சாதிக்கலாம்.

ஆணோ பெண்ணோ தன்னடிச்சுவடு பதிக்கலாம்.

            ஏனோ தானோவெனும் வாழ்வைத் தவிர்க்கலாம்.

 

ஏனொ தானோவென மழலையும் தவழ்வதில்லை.

            வீணே உலகில் தானென்று எண்ணுவதில்லை.

நானோ நீயெனும் போட்டியும் அதற்கில்லை.

             தானே தனியே தடம் பதிக்கும் முல்லை.

நாணோ நரம்பென முறுக்கான இணைப்பாய்

              கூனோ குருடோ குறிக்கோள் கொண்டு

கோனோ கோடீசுவரனாய்க் கோட்டை அமைக்கலாம்.

              கோடரிக் காம்பாகாது கிரீடம் சூடலாம்.

 

 

(கோட்டை – ஒளிவட்டம்.  கோன் –  அரசன்.)

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

30-7-2005

 

 

bordertrans

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. yarlpavanan
  செப் 01, 2013 @ 23:03:09

  சாணோ முழமோ சற்றேனும் சாதிக்கலாம் என வழிகாட்டும் அழகான பாவிது.

  மறுமொழி

 2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  செப் 01, 2013 @ 23:34:25

  வணக்கம்
  சகோதரி
  மனதை தொட்ட கவி வரிகள் அருமை வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  செப் 02, 2013 @ 02:05:38

  தானே தனியே தடம் பதிக்கும் முல்லை.
  போலே மணக்கும் அருமையான ஆக்கம் ..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 4. bagawanjee
  செப் 02, 2013 @ 05:41:38

  தன்னம்பிக்கை தரும் இனிய வரிகள் …கவிஞர் கலாப்ரியாவின் ‘நம்பிக்கை நம் நெஞ்சில் இருந்தால் கத்தியின் முனையில் ஏறிநின்று காலத்தின் நெற்றியில் போட்டு வைக்கலாம் ‘என்பதை நினைவு படுத்தியது !

  மறுமொழி

 5. sasikala
  செப் 02, 2013 @ 05:53:17

  ஏனொ தானோவென மழலையும் தவழ்வதில்லை.

  வீணே உலகில் தானென்று எண்ணுவதில்லை.

  நானோ நீயெனும் போட்டியும் அதற்கில்லை.

  தானே தனியே தடம் பதிக்கும் முல்லை.
  அற்புதமாக சொன்னீர்கள்.

  மறுமொழி

 6. கோமதி அரசு
  செப் 02, 2013 @ 11:00:56

  வீணே உலகில் தானென்று எண்ணுவதில்லை.

  நானோ நீயெனும் போட்டியும் அதற்கில்லை.

  தானே தனியே தடம் பதிக்கும் முல்லை.//

  அருமையாக சொன்னீர்கள் .
  கவிதை மிக நன்றாக இருக்கிறது.

  மறுமொழி

 7. இளமதி
  செப் 02, 2013 @ 13:40:06

  நம்பிக்கையூட்ட நலமான வரிகள் அத்தனையும்…

  அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 8. Dr.M.K.Muruganandan
  செப் 04, 2013 @ 17:12:01

  “..சாணோ முழமோ சற்றேனும் சாதிக்கலாம்..” நம்பிக்கையே பலமானது நல்ல படைப்பு

  மறுமொழி

 9. ranjani135
  செப் 05, 2013 @ 09:47:01

  மனதில் நம்பிக்கையை விதைக்கும் கவிதை வரிகளுக்கு பாராட்டுக்கள் சகோதரி!

  மறுமொழி

 10. பி.தமிழ் முகில்
  செப் 07, 2013 @ 01:09:52

  தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் ஒவ்வொன்றும் அருமை !!!

  மறுமொழி

 11. கோவை கவி
  செப் 07, 2013 @ 08:48:19

  மிக நன்றி சகோதரி தமிழ் முகில் தங்கள் வருகைக்கு. கருத்திடலிற்கும்
  மனம் மகிழ்ந்தேன்.

  மறுமொழி

 12. பழனிவேல்
  அக் 15, 2013 @ 05:17:56

  “ஏனொ தானோவென மழலையும் தவழ்வதில்லை.
  வீணே உலகில் தானென்று எண்ணுவதில்லை.
  நானோ நீயெனும் போட்டியும் அதற்கில்லை.
  தானே தனியே தடம் பதிக்கும் முல்லை. ”

  தன்னம்பிக்கை தரும் வரிகள்.
  அழகிய பாடல்.
  மிகவும் ரசித்தேன்.
  புத்துணர்ச்சி அடைந்தேன்.
  அருமை…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: