19. யார்..யார்! + இருமனம் இணையும்திருமணம்.

imagesCA4VP6VF

*

யார்..யார்!……..

*

யார் கண்டு பிடித்தார் கல்யாண பந்தம்!

வேர் கொண்டு சுயம் அழித்து

தூர் பசளையாகும் பிரதான

ஓரிணைப்பு குடும்ப மரத்தில்.

*

கரைந்து நாளும் கரைந்து

விரைந்து வீட்டைப் பேணி

அரைந்து பெண்ணானவள் தன்னை

அழிப்பது தான் திருமணமோ!

*

வெயிலில் உருகும் பனியாய்

எல்லைகள் வகுத்தலாலே எழுகிறது

பொல்லாத தொல்லைகள் பெண்ணுலகில்.

இல்லை!…யார் இணைத்தாரிதை!

*

கலைந் தோடிய கனவுகளால்

கண்ணீரில் வரையும் வரிகள்

காணாமல் போய் நல்

கனவுகள் உயிர்க்க வேண்டும்!

*

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.   2012.

*****

கம்பன் கவிக்கூடம் கவிதை

இருமனம் இணையும்திருமணம்.

*

இருமனம் இணையும் திருமணம்
பெரும் புனிதம்
அரும் உறவதன் பெருமை
அருகி வருகிறது.
அருவருப்புடை அடக்கு முறை
பெருந் தொல்லையாகிறது.

*

திருமணம் என்றால் விலகுவோரும்
இருமனம் இணையாமலதன்
உருவிழத்தலுமின்று வெகு சாதாரணம்.
உருகுதலென்பது அன்பிலில்லை..
உருவும் உரிமைகளால் தொலைகிறது
எருவெனும் காதல்.

*

எருக்கம் பூவாகிறது பிரியம்.
ஒருமைப் பாடழிகிறது.
ஒரு மனப்படும் வசந்தமே
ஒருங்கிணையும் வாழ்வாகும்.
திருமண வாழ்வின் கருமுகில்
கருவம், சுயநலம்.

*

கரும்பாம் மன்னிக்கும் மனம்
கருணைச் சாரலாகும்
இரும்பு மனம் இளகுதல்
திருமணத்தின் சாதகம்
கருங்கலமான உறவு மிகக்
கருத்தாய் காத்திடணும்.

*

அருமைச் சுகாதாரம் திருமணம்.
கருமணியாய்க் காக்கலாம்.
குரு சந்திர யோகம்
இருமனமிணையும் திருமணம்.
குருகுல வாசமாயும் காக்கலாம்
குழந்தைகள் வாழ்வுக்காக.

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 2112-2016

*

திருமணம்

திரு நிறைந்து சுகாதாரமாய்
திருக்காப்புடன் குறையின்றி வாழ்வதுவாய்
திருமணம் புகுந்தது கட்டுப்பாடாய்
ஒரு தாலி கட்டுவதாய்.
திருட்டி விழுந்தது போலாச்சு
திருத்தமற்று மதிப்பு இழந்தாச்சு.
*
திருமணச் சட்டம் தூசியாச்சு
ஒருமன எண்ணம் காணாமலாச்சு
திருவாசகமாய் திருமண வாழ்வை
ஒருவாசகமாய் வாழுமொரு மனதாளர்
அருமையாய் போற்றி வாழ்வோர்
பெருவாழ்வு வாழுவோருமுளர்.
*
திருவோடு ஏந்துவதாய் நீதிமன்றத்தில்
திருவமுதாக விவாகரத்தை வேண்டுவோர்
திருத்தம் சிறப்பென்று மறுமணத்தை
விருப்போடு தேடுகிறார் விதியென்று.
திருமணப் புனிதம் போற்றுதல்
அருமை நினைவு காத்திடுங்கள்.
*
பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 6-3-2016
*

DB-02

 

34 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  செப் 05, 2013 @ 08:11:23

  😉 நல் கனவுகள் உயிர்க்க வேண்டும்!
  \
  நல்லது. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  செப் 05, 2013 @ 08:43:49

  // எல்லைகள் வகுத்தலாலே எழுகிறது… //

  அருமை… அருமை…

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  செப் 05, 2013 @ 08:45:00

  வணக்கம்…

  தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்… வாருங்கள்… வாருங்கள்…

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 11, 2013 @ 08:53:28

   டி.டி அழைப்பிற்கு நன்றி.
   எனக்கு போட்டிகள் பிடிப்பதில்லை.
   சுதந்திரமாக என் மனக் கருத்துகளைப் பதிவதில் உள்ள சுகம் எதிலும் இல்லை.
   எழுதுவேனோ தெரியாது.

   மறுமொழி

 4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  செப் 05, 2013 @ 09:41:12

  வணக்கம்
  சகோதரி

  கவிதை கவி நயத்துடன் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

  குறிப்பு-தீபாவளியை முன்னிட்டு கவிதைப் போட்டிக்கு தனபால் அண்ணா உங்களை அழைத்துவிட்டார் நிச்சயம் எழுதுங்கள்.இருவரின் வலைப்பக்கமும் பதிவு உள்ளது பார்க்கவும்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 11, 2013 @ 08:54:53

   அழைப்பிற்கு நன்றி.
   எனக்கு போட்டிகள் பிடிப்பதில்லை.
   சுதந்திரமாக என் மனக் கருத்துகளைப் பதிவதில் உள்ள சுகம் எதிலும் இல்லை.
   எழுதுவேனோ தெரியாது.
   குறையாக எண்ணவேண்டாம்.

   மறுமொழி

 5. கோமதிஅரசு
  செப் 05, 2013 @ 10:19:59

  நல்

  கனவுகள் உயிர்க்க வேண்டும்!//

  பெண்ணின் சுயம் அழியாமல் அவள் நல் கனவுகள் எல்லாம் உயிர்ப்பாக வேண்டும் . வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 6. கீதமஞ்சரி
  செப் 05, 2013 @ 11:17:53

  திருமணம் என்ற பந்தத்தில் பிணைக்கப்பட்டபின், பிறந்தவீட்டை முற்றிலுமாய் மறந்துவிட வலியுறுத்தும் சமூகத்தில் பெண்ணின் மனநிலையை மிகவும் அழுத்தமாய் உரைக்கும் வரிகள். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 7. Rajarajeswari jaghamani
  செப் 05, 2013 @ 11:40:05

  கலைந் தோடிய கனவுகளால்

  கண்ணீரில் வரையும் வரிகள்

  காணாமல் போய் நல்

  கனவுகள் உயிர்க்க வேண்டும்!

  உயிர்ப்புடைய வரிகள்.. பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 8. கோவை கவி
  செப் 05, 2013 @ 14:50:27

  vanakkam !

  என்னதான் பெண்ணீயம் பேசினாலும்

  திருமணம் தான் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு.

  அந்த பந்தம் கட்டுக்கடங்கா காளைகளுக்குத்

  தான் ஒரு கால்கட்டு .

  endrum neyamudan ,

  sravani. ( by -Email.)

  மறுமொழி

 9. Mageswari Periasamy
  செப் 05, 2013 @ 17:31:41

  ஒரு பெண்ணுக்கு திருமணம்தான் பாதுகாப்பென்றால், இதுவரை பெற்றோர்களுடன் இருந்த பெண் பாதுகாப்பின்றி இருந்தாளா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. என் பார்வையில், ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது சட்டப்படி அவள் வம்சத்தை தழைத்தோங்கிட வைக்கும் ஒரு பந்தம் மட்டுமே. ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு, அவள் கல்வி, ஒழுக்கம், மனத்துணிவு, நேர்மை தான். என் கருத்தினை மட்டுமே நான் சொன்னேன் தவிர, நான் சொல்வது தான் சரி என்று வாதிடவில்லை. வாய்ப்புக்கு நன்றி.

  மறுமொழி

 10. ரிஷபன்
  செப் 06, 2013 @ 00:04:43

  பந்தம் அவளது இன்னொரு பரிமாணத்தை நல்வழியில் காட்டிட உதவினால் அதுவே பூலோக சொர்க்கம் ! அப்படி ஒரு வாய்ப்பு அமையட்டும்

  மறுமொழி

 11. இளமதி
  செப் 06, 2013 @ 08:37:46

  மிக மிக அருமையான கவிதை!
  கட்டுப்பாடாக வாழ்வதற்கென கட்டப்படுகிற பந்ந்தம்!
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 12. பி.தமிழ் முகில்
  செப் 07, 2013 @ 01:07:16

  கலைந் தோடிய கனவுகளால்

  கண்ணீரில் வரையும் வரிகள்

  காணாமல் போய் நல்

  கனவுகள் உயிர்க்க வேண்டும்!

  ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்திலும் எழும் நியாயமான ஆசை தானே இது. ஆசைகள் நிறைவேறும் நன்னாள் எந்நாளோ?

  மறுமொழி

 13. mahalakshmivijayan
  செப் 07, 2013 @ 05:08:37

  பெண்கள் காணும் கனவுகள் என்றென்றும் நனவாகட்டும்! அருமையான கவிதை தோழி! வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 14. கோவை கவி
  செப் 14, 2013 @ 05:41:58

  IN FACE BOOK comment:-

  முத்து பாலகன் likes this. in தமிழ்ச் சங்கம் —-புலமைக்கு மட்டுமே..

  முத்து பாலகன் மன்னிக்கவும்! இது ஒரு சார்பான கருத்தாகவே எமக்குப் படுகின்றது. சுயமிழப்பதிலும், திருமண வாழ்வில் தன் கனவுகளைப் பலி கொடுப்பதிலும் ஆண் பெண் இருவருமே சமமாகவே இருக்கின்றனர். இங்கு பெண் பிறந்தகம் விட்டு புகுந்தகம் செல்வது கண்முன் நின்ற காட்சியாக்கி, குடும்பக் கடமைகளை நிறைவேற்றுவதால் மன உணர்வுகள் மண்டியிட்டு, மடிந்து போவதாகச் சொல்வதும் சரியோ என்ற கேள்வியை எழுப்பிவிடுகின்றது.

  குடும்பம் என்ற அமைப்பு இருப்பதினால் தான் வம்ச வேர்கள் வளமாகப் பதியப் படுகின்றது.

  காலச் சக்கர மாற்றங்களில்
  அறிவின் தேளிவு தன் தேடுதலில்
  இழப்பு என்பது இரு பால் உடமை
  தொகுத்து வாழ்வது இரு பால் கடமை

  இருபாலாரும் கடமை யென்று ஒன்றை வகுத்து குடும்ப அமைப்பில் வாழும் போது இழப்பு இருவருக்கும் வெவ்வேறேயாயினும், அளவில் சமமே.

  கடமையின் கண்
  தன் சுயமிழப்பதும்,
  கனவுப் பலிகளும்
  ஆண்களுக்கும் அதிகந்தான்
  மறந்தது ஏனோ…!

  ஒப்புவமையின் போது எதிர் பால் இழப்புகளையும் சற்றேனும் தொட்டிருக்கலாம்.

  பெண்ணுரிமைக் கனவுகள்
  தன்னிலை மறந்துப்
  பேதமை விளைவாக்கி
  சாதனை கொண்டிருப்பதை
  சற்று கவணிக்கவும் சகோதரி.

  இந்தக் கல்யாண பந்தம்
  இயற்கையாய் வந்த இயல்பூக்க எழுச்சி.
  பரிணாம தத்துவத்தின் அடி நாத முயற்சி…
  புரிந்தோருக்கு இன்பம் வரும். ..
  புரிதலில் பிரிந்து விலகியிருப்போருக்கு
  இல்லை என்பதே வரும் எதிலும்…

  Vetha ELangathilakam:-
  Mikka nanry….”புரிந்தோருக்கு இன்பம் வரும். ..
  புரிதலில் பிரிந்து விலகியிருப்போருக்கு …….கசப்பு வரும் இப்படிப் புலம்பும்……..

  மறுமொழி

 15. Anand
  அக் 05, 2013 @ 08:41:56

  கல்யாணம் என்பது பூர்வ பந்தம்
  உடலோடுயிர் குடியேறிட வாழும் சொந்தம்
  சம்சாரம் என்பது ஆதி அந்தம்
  ஒன்றாகிடும் உறவாடிடும் அன்பால் என்றும்

  எழேழு ஜன்மமே மணமாலை பந்தமே
  ஆயிரம் காலமே வாழுமே!

  மறுமொழி

 16. Anand
  அக் 05, 2013 @ 08:58:04

  கல்யாணம் என்பது பூர்வ பந்தம்
  உடலோடுயிர் குடியேறிட வாழும் சொந்தம்
  சம்சாரம் என்பது ஆதி அந்தம்
  ஒன்றாகிடும் உறவாடிடும் அன்பால் என்றும்

  எழேழு ஜன்மமே மணமாலை பந்தமே
  ஆயிரம் காலமே வாழுமே!

  வெளிச்சமாகும் வீடு பெண் விளக்கேற்றினால்
  வெற்றியாகும் வாழ்வு பெண் வழிகாட்டினால்
  விலகி போகும் மோகம் பெண் விரல் தீண்டினால்
  தெய்வம் கூட இளகும் பெண் வரம் வேண்டினால்
  இங்கு ஆணின் பின்பலம் என்றும் ஆகும் பெண்பலம்

  நீ ஏது நான் ஏது இங்கே?
  நம்மையெல்லாம் சுமந்தவள் யாரடா

  தலைவன் கூடும் போது பெண் விருந்தாகிறாள்
  தலைவன் வாடும்போது பெண் மருந்தாகிறாள்
  தலைவன் கொஞ்சும் போது பெண் சேயாகிறாள்
  தலைவன் துஞ்சும் போது பெண் தாயாகிறாள்

  பெண்ணின் பெருமை சொல்லவா
  கடல் போன்றதல்லவா
  நீர் வாழ நீர் வார்க்கும் மேகம்
  அதற்கொரு உவமை தான் பெண்மையே

  மறுமொழி

 17. பழனிவேல்
  அக் 15, 2013 @ 05:23:37

  சொல்ல வார்த்தைகள் தேடுகிறேன்.
  அழகு…

  மறுமொழி

 18. கோவை கவி
  செப் 05, 2017 @ 11:28:06

  யார் கண்டு பிடித்தார் கல்யாண பந்தம்! comments:-

  Chembiyan Valavan அம்மா வலியான வரிகள் ….
  5 September 2013 at 10:06 ·
  Chembiyan Valavan :- இந்த கட்டுபாடுகளை காவு கொடுத்து விடலாம் …. எங்கள் தலைமுறையில் ….
  5 September 2013 at 10:06 ·
  Vetha Langathilakam:- Thank youc C.C
  5 September 2013 at 10:08 ·

  Shankar Ngv :- வேண்டாத கட்டுப்பாடுகள் என்றுமெ வேதனை தான்
  5 September 2013 at 10:10 ·
  Vetha Langathilakam : ஓ! எங்களோடை எல்லாரும் ஸ்நேகமாயிருக்க வேணும் ஆனால் ஆக்கங்கள் போட சுவரைப் பூட்டி வைப்பினம். நல்ல பிறென்ட் ஷிப் தான்…
  ஆனால் பூட்டினாலும் பரவாயில்லை வந்து கருத்திட்டால் ஓ.கே தான்.
  இப்போதே அவர்களிற்கும் நன்றி.
  5 September 2013 at 10:11 ·

  Shankar Ngv :- நீங்கள் பதிவிட என்ன தடை ?
  5 September 2013 at 10:12 ·

  Elambarithi Kalyanakumar:- அருமையான வரிகள் !!
  5 September 2013 at 12:00 ·

  Seeralan Vee :- வெயிலில் உருகும் பனியாய்
  எல்லைகள் வகுத்தலாலே எழுகிறது
  பொல்லாத தொல்லைகள் பெண்ணுலகில்.
  இல்லை!…யார் இணைத்தாரிதை!…………………….அருமை அருமை…….உங்கள் வலையில் நான் போடும் கருத்துக்கள் வெளிவரவில்லை ஏனென்று தெரியல்ல
  5 September 2013 at 13:17

  Vetrichelvi Velu :- · 16 mutual friends
  இந்த வரிகள்தான் கவிதை
  வாழ்க்கையின் வலிகள்.
  பெண்ணுக்கு மட்டுமேன்
  படைத்தலில் வஞ்சித்தான் படைத்தவன்?
  5 September 2013 at 14:40 ·

  Pushpalatha Gopalapillai :- அறிவுரையுடன்..கூடிய அருமையான வரிகள் மேடம்..வாழ்த்துக்கள்.
  5 September 2013 at 15:32 ·

  Rajaji Rajagopalan :- பெண்ணானவள் தன்னை
  அழிப்பது தான் திருமணமோ!..// இல்லையில்லை திருமணத்தில் இருவர் பங்குபெறுகிறார்கள். நீங்கள் பெண்ணின் பங்கையே பெரிதாய்க் கூறவந்தீர்கள். அதற்குப் பங்காளி இன்னொருவர் இருக்கிறார். அவர் கூறும் நியாயத்தையும் கேட்டுவிட்டு உங்கள் தீர்ப்பைக் கூறுங்கள்.
  5 September 2013 at 16:05 ·

  Loganadan Ps :- அழகான, அர்த்தமுள்ள – மனதை நெருடும் ஆழமான வரிகள். மிக நன்று.
  5 September 2013 at 18:12 ·

  Mageswari Periasamy : ஒரு பெண்ணுக்கு திருமணம்தான் பாதுகாப்பென்றால், இதுவரை பெற்றோர்களுடன் இருந்த பெண் பாதுகாப்பின்றி இருந்தாளா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. என் பார்வையில், ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது சட்டப்படி அவள் வம்சத்தை தழைத்தோங்கிட வைக்கும் ஒரு பந்தம் மட்டுமே. ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு, அவள் கல்வி, ஒழுக்கம், மனத்துணிவு, நேர்மை தான். என் கருத்தினை மட்டுமே நான் சொன்னேன் தவிர, நான் சொல்வது தான் சரி என்று வாதிடவில்லை. வாய்ப்புக்கு நன்றி.
  5 September 2013 at 19:33

  Sujatha Anton :- வெயிலில் உருகும் பனியாய்
  எல்லைகள் வகுத்தலாலே எழுகிறது …
  பொல்லாத தொல்லைகள் பெண்ணுலகில்.
  இல்லை!…யார் இணைத்தாரிதை!
  உண்மை.. கேள்வியாக நமக்குள் ஏற்படுத்தும் போது பதில் கூறமுடியாது நாமே திணறடிக்கின்றோம். கவிநயம் வெளிப்படுத்தியுள்ளன. அருமை… கவிதாயினி வேதா
  5 September 2013 at 23:01 ·

  Ganesalingam Arumugam :- வாழ்த்துக்களும் இனிய காலை வணக்கமும்.
  6 September 2013 at 11:39 ·

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- இது ஒரு ஆரியர் காலத்து கலாச்சாரம்!! இதனை நீக்குவதாயின் நாம் இன்னும் பலவற்றை நீக்கவேண்டிவரும்! உறவு முறைகள் தடுமாறும்!! குடும்பம் என்ற கட்டுக்கோப்பு குலைந்து போகும்!! சங்க காலத்து தமிழனிடம் இந்தப் பழக்கமில்லை!! மேலும் இதுபற்றி விரிவான பதிவு ஒன்றை உறவுகள் பகிர்ந்து கொள்ளுங்கள்.. இவை சமுதாயத்தின் எழுதாத சட்டங்கள்!! இவற்றை மாற்றுவதோ.. அன்றி நீக்குவதோ அவ்வளவு சுலபமானதல்ல!!
  6 September 2013 at 14:57 ·

  சிறீ சிறீஸ்கந்தராஜா இந்த வழக்கின் தீர்ப்பு காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்படுகிறது!
  6 September 2013 at 15:00 ·
  Vetha Langathilakam Y:- es….. sir!…….
  6 September 2013 at 20:50 ·

  Vetha Langathilakam ”..இவை சமுதாயத்தின் எழுதாத சட்டங்கள்!! இவற்றை மாற்றுவதோ.. அன்றி நீக்குவதோ அவ்வளவு சுலபமானதல்ல!!..” aam…….
  6 September 2013 at 20:52 ·

  Vetha Langathilakam :- வாழ்த்தியவர்களிற்கும் ஆர்வமாய் வரிகளிட்டவர்களிற்கும் இனிய நன்றியும், வாழ்த்தும்.
  7 September 2013 at 08:04 ·

  Verona Sharmila :- கரைந்து நாளும் கரைந்து
  விரைந்து வீட்டைப் பேணி
  அரைந்து பெண்ணானவள் தன்னை
  அழிப்பது தான் திருமணமோ! அருமையான வரிகள்
  7 September 2013 at 08:59

  Pena Manoharan:- ’கற்பென்று சொல்ல வந்தால் -அதை- இருவர்க்கும் பொதுவில் வைப்போம்’ -மகாகவி பாரதி.இருமனம் இணையும் திருமணம் இதுவரை உள்ள குடும்ப நிறுவன,நிர்வாக அமைப்பில் சிறந்ததுதான்.
  8 September 2013 at 06:20 ·
  Vetha Langathilakam:- @….Pena Manoharan…..கற்பு – இருவர்க்கும் பொதுவில் வைப்போம்’ – உண்மை… (Thank you)
  8 September 2013 at 08:15 ·

  Muthulingam Kandiah :- திருமணம் இருவரின் சங்கமம். இருவரும் மகிழ்வாக வாழ்க்கையில் அனைத்து விடயங்களில் இணைவு கண்டு வாழ்ந்தால் ,வாழ்க்கை இனிமையாக இருக்கும். அடுத்து வரும் தலை முறை மாற்றம் பெறும்.அன்று குறிப்பிட்ட இனமக்கள் தமது சூழல்.நெறிமுறைக்ளுக்கு அமைய சில செயல்களை வகுத்து,புகுத்தி நடைமுறைப் படுத்தினர்.இன்று மக்கள் பல இனம் மொழி கலாச்சாரம் இணைந்த வாழ்க்கை சூழலில் வாழ்கின்றனர்.இன்று பல கலாச்சார நெறிகள் கைவிடப்படுகின்றன்.தாலி இன்று வேலியல்ல.இருவரின் வாழ்வின் இணைவும் புரிந்துணர்வும் தான் முக்கியம்.
  8 September 2013 at 16:58

  Sivasuthan Sivagnanam *****
  திருமணம் என்பது இன்று காலாச்சார சடங்கு என்பதை
  தாண்டி ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே பார்க்கப்படுகிறது .
  ஆதலால் இரு மனதின் ஒன்றிணைவு என்பது சாத்தியமற்று போய்
  பிரிவுகளின் ஆரம்ப வாசலாக திருமணம் இன்று அமைந்துவிடுகிறது .
  உறுத்தலான வரிகள அம்மா .
  14 September 2013 at 14:00 ·

  Vetha Langathilakam :- ஆம் இன்றைய இளையவர்கள் திருமணம் என்றால் பயப்படுகிறார்கள்…இது பிரிவதற்ஆகுத் தானோ என்று… உண்மையான கருத்து சுதன்..
  14 September 2013 at 17:33 ·
  Natarajan Baskaran :- எங்கோ இருந்த இரு மனங்கள் கருத்து, பழக்க வழக்கங்கள், விருப்பு, வெறுப்புகளில் ஒரு திசையில் பயணம் செய்யும் பறவைகளாக ஒரு மனதாக இணையும் அத் (திரு,மனங்கள்) திருமணம் தான் நிலைக்கும்.
  14 September 2013 at 17:42 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: