29. தமிழ்த்தேன்

 12299119_981999901857709_556712719288972527_n

தமிழ்த்தேன்  

 

அளைந்தேன் இலக்கியத் தேன்

அரும் தேன் மலைத்தேன்.

தமிழ்த்தேன் ரசித்தேன் மலர்ந்தேன்.

களித்தேன் இது மலைத் தேன்.

இசைந்தேன் மனதில் எடுத்தேன்

இணைந்தேன் இனிதாய் சுவைத்தேன்.

கோர்த்தேன் சிந்தாது வரைந்தேன்.

எழிற்தேன் பதித்தேன் செழித்தேன்.

எடுத்தேன் உயர்ந்திட உழைத்தேன்.

உணர்ந்தேன் அருந்தியதால் குளிர்ந்தேன்.

கவித்தேன் பிறரிற்குக் கொடுத்தேன்.

நிறைந்தேன் நிம்மதியாய் சுவாசித்தேன்.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

10-9-2013.

green line-2

Advertisements

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  செப் 10, 2013 @ 07:00:20

  தேன்…தேன்… ரசித்தேன்…

  மறுமொழி

 2. ramani
  செப் 10, 2013 @ 07:10:56

  கவித்தேனின் சுவையில்
  உள்ளம் குளிர்ந்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. GOPALAKRISHNAN. VAI
  செப் 10, 2013 @ 07:12:39

  தேனாக இனிக்கும் பதிவினை சுவைத்தேன், மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்.

  மறுமொழி

 4. வேல்முருகன்
  செப் 10, 2013 @ 10:36:36

  தமிழை சுவைத்தேன்

  மறுமொழி

 5. raveendran sinnathamby
  செப் 10, 2013 @ 10:40:30

  தேன் ஆன கவிதைதனை தெவிட்டாது தந்தவளே சுவைத்
  தேன் நுன்கவி மிக மிக சுவை.

  வதிரி-சி.ரவீந்திரன்.

  மறுமொழி

 6. கோமதி அரசு
  செப் 10, 2013 @ 11:10:44

  எடுத்தேன் உயர்ந்திட உழைத்தேன்.

  உணர்ந்தேன் அருந்தியதால் குளிர்ந்தேன்.

  கவித்தேன் பிறரிற்குக் கொடுத்தேன்.

  நிறைந்தேன் நிம்மதியாய் சுவாசித்தேன்.//
  கவிதை வடித்தபின் அவை நமக்கு நிறைவை தந்தால் நிம்மதி மூச்சு வரும் ! அருமை.
  அருமையான தேன் கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 7. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  செப் 10, 2013 @ 12:37:48

  வணக்கம்
  சகோதரி

  கவிதை அருமை அருமை படித்தேன் ரசித்தேன் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 8. கோவை கவி
  செப் 10, 2013 @ 17:04:59

  ‘ பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் ‘

  என்ற திரைப்பட பாடலை நினைவூட்டியது கவிதை.

  நானும் சுவைத்தேன். களித்தேன்.

  Sravani

  மறுமொழி

 9. Karanthai Jayakumar
  செப் 11, 2013 @ 23:54:37

  படித்தேன்
  ரசித்தேன்
  சுவைத்தேன்
  இன்பத்தில்
  திளைத்தேன்
  நன்றி

  மறுமொழி

 10. ranjani135
  செப் 14, 2013 @ 08:45:51

  தேன் தமிழ் தேன் உங்கள் கவிதை வரிகளில் தேனாக இனிக்கிறது, சகோதரி!

  மறுமொழி

 11. Jaleelakamal
  செப் 18, 2013 @ 08:37:52

  உங்கள் தமிழ் தேன் கவிதை படிக்க படிக்க தேன் போல் இனிக்கிறது

  மறுமொழி

 12. பழனிவேல்
  அக் 14, 2013 @ 11:47:46

  தங்கள் தேன் கவிதையை ரசித்து சுவைத்தேன்.

  மேலும், இக்கவிதை
  ‘பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்‘
  பாடலை நினைவூட்டியது.

  நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 19, 2013 @ 06:43:06

   ஆம் அதே பாடல் போன்று இணைத்தேன் சகோதரா.
   தேடித்தேடி வந்து கருத்திடும் உமது பாங்கு மகிழச் செய்கிறது.
   மிக மகக நன்றி பழனி.
   (பதிலிற்கு உமது வலைப் பக்கம் பார்த்தேன் புதியவை இல்லை.)
   இறையாசி நிறையட்டும்.
   வேதா. இலங்காதிலகம்.

   மறுமொழி

 13. கோவை கவி
  மே 22, 2014 @ 20:57:37

  In FB:_
  Rajini Sri:_
  நிம்மதியாய் சுவாசித்தேன்…super ..

  யதார்த்தவாதி விஸ்வாமித்ரர்:-
  இது ஒரு சுவைத்தேன் .ஆழமான சிலேடைத்தேன்….. தமிழின் சுவையை சுவைத்தேன் அவைத்தேன் பருகவைத்த உங்களை மதித்தேன் மீண்டும் கவி புனைய அன்போடு அழைத்தேன் கவியே..!!

  Sutha Hari:-
  அருமை

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: