20. அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ!

536276_450646624964029_1236563118_n

அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ!

உளம் திறந்து பழகாமல்

உணர்வுகள் உள்ளே உறைந்திட

உதட்டை இறுக மூடுபவளே!

உதட்டுச் சாயமிட்டு மறைப்பவளே!

உனது திறமை வீணே

உறைபனி யாகிறது தானே!

உறைந்து போவதில் என்ன

உல்லாசம் உனக்குப் பெண்ணெ!

முழுதாய் நாலு வார்த்தை பெற

மூடிய உதட்டைத் திற!

ஆர்வம் நிறை விழிகளால்

அகலத் திறந்து பார்!

சேலைக் கேற்ற மாலை

மாலைக் கேற்ற காதணி

வேளைக் கேற்ற தலையலங்காரம்

விலையோ அளவற்றவுன் திறமைக்கு!

அலங்காரப் பதுமை யல்ல

அறிவுச்சுடர் நீ! – பிறர்

அகவிதழ் திறக்கச் செய்!

அறிவெனும் அகல் விளக்கையேற்று!

சிறுமைப் படுத்திச் சீண்டுவோரை

சிந்திக்கச் செய் பெண்ணே!

சிந்தனையை ஓட விட்டு

சிலிர்த்து எழு பெண்ணே!

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

2-12-2001.

 

  BR533

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  செப் 13, 2013 @ 20:08:07

  அலங்காரப் பதுமை போலவே அழகான படத்தேர்வு அருமை.

  >>>>>

  மறுமொழி

 2. GOPALAKRISHNAN. VAI
  செப் 13, 2013 @ 20:09:40

  //அலங்காரப் பதுமை யல்ல
  அறிவுச்சுடர் நீ! – பிறர்
  அகவிதழ் திறக்கச் செய்!
  அறிவெனும் அகல் விளக்கையேற்று!//

  அருமையான வரிகள். தன்னம்பிக்கையூட்டும் ஆக்கம் . பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  மறுமொழி

 3. கோமதி அரசு
  செப் 13, 2013 @ 21:28:07

  அறிவெனும் அகல் விளக்கையேற்று!

  சிறுமைப் படுத்திச் சீண்டுவோரை

  சிந்திக்கச் செய் பெண்ணே!//

  அருமையான வரிகள் .
  கவிதை மிக அருமை.
  பெண்கள் முன்னேற நம்பிக்கை தரக்கூடிய கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 4. ramani
  செப் 13, 2013 @ 22:40:13

  அழகை அருமையாக வர்ணித்து
  முடிவில் அதுசரி அது மட்டும்
  நீ இல்லை என முடித்த விதம்,,,,
  அவளின் உண்மையான அழகு எது எனச்
  சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  செப் 14, 2013 @ 02:24:45

  அருமையான வரிகள்… மிகவும் ரசித்தேன்…

  மறுமொழி

 6. bagawanjee
  செப் 14, 2013 @ 03:53:34

  படக் கவிதையும் அழகு ,கவிதைக்கு படமும் அழகு !

  மறுமொழி

 7. Rajarajeswari jaghamani
  செப் 14, 2013 @ 03:56:49

  அலங்காரப் பதுமை யல்ல

  அறிவுச்சுடர் நீ! – பிறர்

  அகவிதழ் திறக்கச் செய்!

  அறிவெனும் அகல் விளக்கையேற்று!

  அலங்காரமாய் வரிகள்..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 8. ranjani135
  செப் 14, 2013 @ 07:33:38

  அலங்காரப் பதுமையாய் நிற்கும் பெண்ணைப் பார்த்து நீங்கள் பாடிய கவிதை எல்லாப் பெண்களுக்குமே பொருந்தும். பேச வேண்டிய சமயத்தில் பேசி, வாய் மூடி கேட்க வேண்டிய சமயத்தில் கேட்க வேண்டும்.

  அழகுப் பதும அறிவுச் சுடராய் ஒளிரட்டும்!
  பாராட்டுக்கள், சகோதரி!

  மறுமொழி

 9. கோவை கவி
  செப் 14, 2013 @ 15:23:15

  Hi ,

  padam vegu azhagu.

  paattum kavarnthathu.

  arumai.

  -sravani.

  மறுமொழி

 10. T.N.MURALIDHARANt
  செப் 15, 2013 @ 11:31:49

  அழகாகச் சொன்னிர்கள்.அறிவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் ஆடையும் அலங்காரமும் பின்னர்தான் என்பதை தெளிவாக உரைக்கிறது கவிதை.

  மறுமொழி

 11. Karanthai Jayakumar
  செப் 16, 2013 @ 15:01:18

  அருமை அருமை

  மறுமொழி

 12. sasikala
  செப் 19, 2013 @ 07:00:41

  அழகான படத்தேர்வும் தகுந்த வரிகளும் நல்ல பகிர்வுங்க.

  மறுமொழி

 13. கீதமஞ்சரி
  செப் 24, 2013 @ 13:27:43

  அலங்காரப் பதுமையாய் கொலுவீற்றிருந்ததெல்லாம் போதும். இனி அறிவுச்சுடராய் கொழுந்துவிட்டெரி என்று அறிவுறுத்தும் அழகிய கவிதையை வரிக்கு வரி ரசித்தேன். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 14. பழனிவேல்
  அக் 14, 2013 @ 11:53:16

  “அலங்காரப் பதுமை யல்ல
  அறிவுச்சுடர் நீ! – பிறர்
  அகவிதழ் திறக்கச் செய்!
  அறிவெனும் அகல் விளக்கையேற்று!

  சிறுமைப் படுத்திச் சீண்டுவோரை
  சிந்திக்கச் செய் பெண்ணே!
  சிந்தனையை ஓட விட்டு
  சிலிர்த்து எழு பெண்ணே! ”

  தன்னம்பிக்கை வரிகளின் தொகுப்பு அழகு. அருமை

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: